Published:Updated:

கமாடிட்டி!

கமாடிட்டி!

கமாடிட்டி!

கமாடிட்டி!

Published:Updated:
கமாடிட்டி!

சென்ற வாரம் அடிப்படை உலோகங்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இதற்கு என்ன காரணம் என்று சொல்கிறார் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் கமாடிட்டி புராடக்ட் ஹெட் சிவக்குமார்.

கமாடிட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அமெரிக்க ஃபெட் அமைப்பு, வங்கி வட்டி விகிதம் குறித்து எந்த மாற்றமும் இல்லை எனவும், புதிதாக பாண்டுகளை வெளியிடப் போவதாக அறிவித்ததும் அடிப்படை உலோகங்களின் விலை உயரக் காரணமாக அமைந்துவிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் சீனாவின் ஷாங்காய் சந்தையில் காப்பர் மற்றும் லெட் ஆகிய கமாடிட்டி புதிய உச்சத்தைத் தொட்டது. அலுமினியம் மற்றும் ஜிங்க் முறையே 2.4 மற்றும் 0.07% அதிகரித்தது. பொதுவாக உலகச் சந்தை நிலவரங்களால் அனைத்து அடிப்படை உலோகங்களும் வரும் வாரங்களில் விலை அதிகரிக்கும்.  

தங்கம்!

கமாடிட்டி!

அமெரிக்க ஃபெட் அமைப்பு புதிதாக பாண்டுகளை வெளியிட முன்வந்திருப்பதும், 2015-ம் ஆண்டு ஜூன் வரை வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை என கூறியிருப்பதும் டாலரின் மதிப்பைக் குறைக்கும் என்ற பயம் தலை தூக்கியுள்ளது. இதன் காரணமாக அதிக வருமானம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். எம்.சி.எக்ஸ். சந்தையில் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 1.4 சதவிகிதம் அதிகரித்தது. செப்டம்பர் 13-ம் தேதி வரலாறு காணாத அளவில் பத்து கிராம் எம்.சி.எக்ஸ். தங்கம் 32,421 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கமாடிட்டி!

வெள்ளி!

கமாடிட்டி!

செப்டம்பர் 13-ம் தேதியன்று மட்டும் சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 4% அதிகரித்தது. ஃபெட் அமைப்பின் அறிவிப்பின் பிரதிபலிப்பாக தங்கம் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்ததன் காரணமாக வெள்ளியின் விலையும் அதிகரித்தது. டாலரின் மதிப்பு குறைந்தது, இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததும் வெள்ளி விலை உயர்வுக்கு இன்னொரு காரணம். தவிர, ஸ்பாட் மார்க்கெட்டில் வெள்ளி விலை உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 64,810 ரூபாய்க்கு  வர்த்தகமானது. உலக நிலவரங்கள் காரணமாக வெள்ளியின் விலை வரும் வாரத்திலும் அதிகரித்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்!

கமாடிட்டி!
##~##
கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அமெரிக்க ஃபெட் அமைப்பின் அறிவிப்பு, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா நாடுகளில் எண்ணெய் சுத்திகரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது போன்ற காரணங்களால் சப்ளை குறைந்து விலை அதிகரித்திருக்கிறது. மேலும், அடுத்த ஆண்டில் கச்சா எண்ணெய் தேவை உலகளவில் குறையும் என எண்ணெய் சுத்திகரிக்கும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபேக் கூறியுள்ளது. ஒபேக் கூட்டமைப்பு நாடுகளில் இருக்கும் 12 உறுப்பு நாடுகள் அடுத்த வருடத்தில் 29.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்தால் போதுமென முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க மத்திய வங்கியின் மீட்டிங் முடிந்தவுடன் டீசலின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. அமெரிக்காவில் கிரிஸ்ட் என்ற புயல் தாக்க வாய்ப்புகள் இருப்பதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இயற்கை எரிவாயு!

கமாடிட்டி!

அமெரிக்காவில் இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் சென்ற வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. டாலரின் மதிப்பு குறைந்ததினால் மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. செப்டம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எதிர்பார்த்ததைவிட    27 பில்லியன் கியூபிக் ஃபீட் கையிருப்பு அதிகரித்து 3.429 டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக இருந்தது என அமெரிக்க எரிசக்தி துறை தெரிவித்துள்ளது.

இதனால், இந்திய சந்தையிலும் சென்ற வாரத்தில் 2.4% விலை குறைந்தது. ஒரு பேரல் இயற்கை எரிவாயு 164.80 ரூபாய்க்கு வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் நிலவிவரும் சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு அதிகரித்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism