
மிளகு!
(PEPPER)
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜீரகம்!
(JEERA)
ஜீரா விளையும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அடுத்து வரும் சீஸனில் நல்ல விளைச்சல் இருக்குமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். எனினும், தற்போதைய நிலையில் ஜீரகம் வரத்து குறைந்திருப்பதால் ஏற்கெனவே ஸ்டாக் செய்து வைத்திருக்கும் ஜீரகத்தை வர்த்தகத்திற்கு கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மிக முக்கிய சந்தைகளில் ஜீராவின் ஏற்றுமதி தேவை அதிகரித்ததால் மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. சென்ற வாரத்தில் தின வரத்தாக 3,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) ஜீரகம் உஞ்ஹா சந்தைக்கு வந்தன. சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரின் காரணமாக அங்கிருந்து ஜீரகம் வராமல் இருப்பதால் இந்திய ஜீரகத்திற்கு அதிக டிமாண்ட் தொடர்ந்து இருந்து வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் மொத்தம் 45,000 டன் ஜீராவை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்திருக்கிறது. 2011-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 32,500 டன் ஜீராவை ஏற்றுமதி செய்திருக்கிறது இந்தியா என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆண்டில் இப்போதே 33,500 டன் ஜீராவை இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் ஜீரகம் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் 13,830 ரூபாய்க்கு வர்த்தகமானது.
மிளகாய்!
(CHILLI)
உள்நாட்டுச் சந்தையில் மிளகாய் வரத்து அதிகரித்ததன் காரணமாகவும், மந்தமான தேவை காரணமாகவும் கடந்த வாரத்தில் மிளகாய் குறைவாகவே வர்த்தகமானது. சென்ற வாரத்தில் தின வரத்தாக 40,000 பைகள் (ஒரு பை என்பது 45 கிலோ) குண்டூர் சந்தைக்கு வந்தன. சென்ற வாரத்தில் 100 கிலோ மிளகாய் 5,300 ரூபாய்க்கு வர்த்தகமானது. வெளிநாட்டுச் சந்தையில் இந்திய மிளகாயின் தேவை அதிகரித்ததால் மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. சாதகமான பருவநிலை காரணமாக மத்தியப்பிரதேசத்தில் மிளகாய் விளைச்சல் 25% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிளகாய் பயிரிடப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 5-ம் தேதி நிலவரப்படி, 93,432 ஹெக்டேராக இருக்கிறது. இது கடந்த வருடத்தில் 72,624 ஹெக்டேராக இருந்தது என ஆந்திர விவசாயத் துறை தெரிவித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் மிளகாய் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் 4,734 ரூபாய்க்கு வர்த்தகமானது

மஞ்சள்!
(TURMERIC)
ஸ்டாக்குகளை கேரி ஓவர் செய்ததாலும், ஏற்றுமதி டிமாண்ட் குறைந்ததாலும் மஞ்சளின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. ஆந்திராவில் அறுவடைக் காலம் சூடு பிடிக்கத் தொடங்கியது விலையில் பிரதிபலிக்க துவங்கிவிட்டது. எனினும், ஏற்றுமதி டிமாண்ட் அதிகரித்ததைத் தொடர்ந்து மேலும் விலை இறங்காமல் தாக்குப் பிடித்தது. ஆந்திராவில் மழை குறைவாக இருந்ததால் மஞ்சள் விளைச்சல் பாதிப்படையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை அதிகம் பொழிந்ததால் விளைச்சல் அதிகரித்தது. ஆந்திராவில் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கும் பரப்பளவு குறைந்து 53,838 ஹெக்டேராக செப்டம்பர் 5-ம் தேதி நிலவரப்படி இருந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டில் 64,427 ஹெக்டேராக இருந்ததாக ஆந்திர மாநில விவசாயத் துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மஞ்சள் தின வரத்து ஈரோடு சந்தையில் 4,000 பைகளாக (ஒரு பை என்பது 70 கிலோ) இருந்தது. நூறு கிலோ விரலி மஞ்சளின் விலை 5,100-6,300 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் 6,010 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகமானது
ஏலக்காய்!
(CARDAMON)
ஏலக்காய் வரத்து அதிகரித்ததால் சென்ற வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. கடந்த வருடத்தில் கேரி ஓவர் ஸ்டாக் அதிகமாகச் செய்ததால் தற்போதைய சீஸனில் ஏலக்காய் வரத்து அதிகரித்துள்ளது. ஏலக்காய் விளையும் பகுதிகளில் அதிக மழை பொழிந்திருப்பதால் அடுத்துவரும் சீஸனில் விளைச்சல் பாதிப்படையும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சென்ற வாரத்தில் ஏலக்காய் ஏலம் போகும் இடுக்கி மாவட்டத்தில் தின வரத்தாக 61 டன் இருந்தது. ஒரு கிலோ 708 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதிகபட்ச விலையாக 909.50 ரூபாய்க்கு விலை கேட்கப்பட்டது. எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்ச் குடோனில் 109.70 டன் ஸ்டாக் செப்டம்பர் 11-ம் தேதி நிலவரப்படி இருந்துள்ளது. இது கடந்த வாரத்தைவிட 98 டன் அதிகம். கடந்த வெள்ளிக்கிழமை மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ ஏலக்காய் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 999 ரூபாய்க்கு வர்த்தகமானது
இயற்கை ரப்பர்!
(NATURAL RUBBER)
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் இந்தியாவில் இயற்கை ரப்பருக்கான தேவை சென்ற ஆண்டைவிட 5% அதிகரித்து 4.20 லட்சம் டன்னாக உள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் உற்பத்தி 0.8% மட்டுமே அதிகரித்து 3,31,700 டன்னாக இருக்கிறது. அதே நேரத்தில் இறக்குமதியும் 17% ஆகஸ்ட் மாதத்தில் குறைந்திருக்கிறது. மேலும், இந்தோனேஷியாவில் ரப்பர் உற்பத்தி 10% குறைந்துள்ளதாக இந்தோனேஷியா ரப்பர் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த மூன்றரை வருடங்களில் இல்லாத அளவுக்கு இரு சக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது. டிமாண்ட் அதிகமாக இருப்பினும் இந்தியாவில் வாகனங்கள் உற்பத்தி குறைந்திருப்பதால் வரும் வாரத்தில் விலை நிலையானதாக இருக்காது.
- செ.கார்த்திகேயன்.