Published:Updated:

என் பணம்; என் அனுபவம்!

என் பணம்; என் அனுபவம்!

என் பணம்; என் அனுபவம்!

என் பணம்; என் அனுபவம்!

Published:Updated:
என் பணம்; என் அனுபவம்!


கூட்டுக் கொள்ளை, உஷார்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அண்மையில் சென்னை அசோக்நகர் சிக்னலில் நின்றுகொண்டு இருந்தேன். அப்போது என்னை போலவே சிக்னலுக்காக காத்திருந்தார் இன்னொருவர். ஒரு ஆள் ஒரு புத்தகத்துடன் வந்து, ''இது கம்ப்யூட்டர் புத்தகம்தான். இதோட விலை 400 ரூபாய் போட்டிருக்கு; நீங்க 300 ரூபாய் கொடுங்கப் போதும்'' என்றார். உடனே அவரும் கொஞ்சம்கூட யோசிக்காமல் பணத்தைக் கொடுத்து வாங்கிக்கொண்டார். கிரீன் சிக்னல் விழவே, கிராஸ் செய்து எதிர்புறம் போனதுமே எனக்கு முன்னால் போன அந்த நபரை ஒரு இளைஞன் நிறுத்தினான். ''சார், உங்க கைல இருக்கிற புத்தகம் என்னோடது. அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி என் பைக்ல இருந்து கீழே விழுந்துடுச்சு. மூணாம் பக்கத்துல ராஜான்னு என் பேருகூட எழுதியிருப்பேன் பாருங்களேன்'' என்றான். அவன் சொன்னபடியே அந்த பெயர் இருந்தது. வேறு வழி..? புத்தகத்தைக் கொடுத்தார். அனேகமாக அந்த பைக் இளைஞனும், புத்தகத்தை விற்றவனும் கூட்டு களவாணிகளாக இருப்பார்களோ என்பதுதான் என் சந்தேகம். விலை குறைவாக கிடைக்கிறதே என இதுபோன்று அனாமத்தாக கிடைக்கிற பொருட்களை வாங்காமல் இருப்பது நல்லது.''

- ர.துரைசுவாமி, அசோக்நகர்.

என் பணம்; என் அனுபவம்!


லஞ்சம் கொடுக்காதீங்க!

''சில ஆண்டுகளுக்கு முன் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பிக்க தாலுகா அலுவலகம் சென்றேன். எனக்கு நன்கு அறிமுகமான ஒருவர், நான் வந்த விஷயத்தை அறிந்துகொண்டு, ''இங்கே பட்டா மாறுதல் வாங்குவது சுலபமில்லை. அதுக்குன்னு 'தனி ரேட்’ இருக்கு. கொடுக்கலைன்னா அது சரியில்லை, இது சரியில்லையென அலைக்கழித்து அனுப்புவார்கள். நீங்கள் பலமுறை ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு அலைய வேண்டிவரும். என்னிடம் 5,000 ரூபாய் கொடுத்தீங்கன்னா வேலைய முடித்து தர்றேன். அதுவும் உங்களுக்காகத்தான் இந்த 'கம்மி ரேட்...’ என்று சொல்லி பணத்தை வாங்கினார். சரி, தெரிந்தவர்தானே, வேலையை கச்சிதமா செய்து தருவாரென்று நம்பி பணத்தைத் தந்தேன். திடீரென்று ஒருநாள் ஊரைவிட்டே ஆள் எஸ்கேப்.  விசாரித்ததில் அவர் அலுவலக ஊழியரே இல்லை என்றும், என்னைப் போன்ற பலரிடமும் பணம் வாங்கி ஏமாற்றிய விஷயமும் தெரிந்தது. லஞ்சம் கொடுப்பது தப்பு; அதுவும் தப்பான ஆளுகிட்ட கொடுத்து ஏமாறுவது அதைவிட மகா தப்பு.''

-பெ.பாண்டியன், காரைக்குடி.

என் பணம்; என் அனுபவம்!


கவனம் சிதறினா... காசு அம்பேல்தான்!

''இரண்டு மாதங்களுக்கு முன்பு, என் தோழி திருச்சியிலிருந்து கரூருக்கு சீட்டு கட்டுவதற்காக 20,000 ரூபாயை எடுத்துக்கொண்டு பஸ்ஸில் சென்றிருக்கிறாள். பேட்டைவாய்த்தலையில் கைக்குழந்தையுடன் ஏறிய 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், என் தோழியின் அருகில் வந்து உட்கார்ந்திருக்கிறாள். பிறகு, குழந்தையை என் தோழியிடம் கொடுத்திருக்கிறாள் அந்த பெண். சிறிது நேரத்தில் அந்த குழந்தை, தோழியின் மடியில் சிறுநீர் கழிக்கவும் என் தோழியோ குழந்தையை அவளிடமே கொடுத்துவிட்டு சேலையின் இன்னொரு பகுதியைக் கொண்டு ஈரத்தைத் துடைத்திருக்கிறாள். பிறகு கரூரில் போய் இறங்கியபோது பையைத் திறந்து பார்த்தால் பணம் இல்லை. காவல் நிலையத்தில் புகார் செய்ததும் போலீஸார் வியூகம் வகுத்து, அந்த பெண்ணையும் அவளுடன் சேர்ந்த குரூப்பையும் பிடித்தார்கள். அரைமணி நேரத்துக்குள் சிறுநீர் கழிக்கும்படி கைக்குழந்தையை நிறைய தண்ணீர் குடிக்க வைத்து, கொள்ளையடிக்கும் விஷயம் பிறகுதான் தெரியவந்தது. முடிந்தவரை பணத்தை செக்காக தருவதே நல்லது. அப்படியே பணத்துடன் வெளியே போகும்போது நம்மை திசை திருப்பும் எந்த செயலுக்கும் நாம் ஆட்படாமல் இருப்பதே நல்லது.''

- கண்ணம்மா ராமசாமி, திருச்சி.

என் பணம்; என் அனுபவம்!


நம்பரை குறிச்சு வச்சா... நஷ்டம் வராது!

''சமீபத்தில் துணி வாங்க தோழியுடன் கடைக்குச் சென்றேன். கூட்டம் அலைமோதியது. துணி வாங்கியபிறகு பில் தொகையைச் செலுத்த வரிசையில் நின்றோம். என் முறை வந்ததும், மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கேஷியரிடம் கொடுத்தேன். அதை அப்படியே கல்லாவில் போட்ட கேஷியர், திரும்பவும் பணம் கேட்டார். 2,700 ரூபாய் பில் தொகைக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டதைக் கூறினேன். மூன்று 500 ரூபாய் நோட்டுகளைத்தான் கொடுத்தீர்கள் என கேஷியர் உறுதியாகச் சொன்னார். எப்போதுமே நான் கையாளும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் எண்களைக் குறித்து வைத்துக்கொள்வது என் வழக்கம். நான் ஏற்கெனவே குறித்து வைத்திருக்கும் மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் எண்களையும் குறிப்பிட்டு, அந்த எண்கள் உள்ள ரூபாய் நோட்டுகள் கல்லாவில் இருக்கும் பாருங்கள் என்று சொன்னேன். கேஷியர் தேடிப் பார்த்தபோது அந்த நோட்டுகள் கல்லாவில் இருந்தன. தவறை ஒப்புக்கொண்ட கேஷியர், மீதிப் பணத்தைக் கொடுத்ததுடன் மன்னிப்பும் கேட்டார். அதிக மதிப்புகொண்ட நோட்டுகளின் எண்களைக் குறித்து வைத்துக்கொண்டால், இது மாதிரியான சங்கடங்களை எளிதில் தவிர்க்கலாம்!''

- ஆர்.லதா, சென்னை.

என் பணம்; என் அனுபவம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism