Published:Updated:

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1

ஆர்.குமரேசன்

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1

ஆர்.குமரேசன்

Published:Updated:
அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1
##~##
வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ண்ணை முட்டி நிற்கும் விலைவாசி உயர்வால் லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்களே தடுமாறும்போது, ஆயிரங்களில் சம்பாதிப்பவர்களின் நிலைமை பாவம்தான்! அதற்காக ஆதங்கப்பட்டு சும்மா இருந்தால் சரியாகிவிடுமா..? ஏதாவது ஒரு பிஸினஸ் செய்து, வருமானத்தை அதிகப்படுத்த நினைக்கிறவர்களுக்கு குறைந்த முதலீட்டில் எளிதாக லாபம் பார்க்கும் வழிவகைகளை சொல்லித் தரவே இந்த புதிய தொடர். வேளாண் துணைத் தொழில்கள் என்று சொல்லப்படும் தொழில்களை செய்வதன் மூலம் மாதாமாதம் கணிசமானதொரு வருமானத்தைப் பார்ப்பதோடு, மனதுக்கும் திருப்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

அமைதிக்கு அடையாளமாக விளங்கும் புறாக்கள், உங்கள் எக்ஸ்ட்ரா வருமானத்திற்கான வாசல் கதவுகளை அகலமாக திறந்துவிடக் காத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பெரிய அளவில் உழைப்பு இல்லாமல், முதலீடும் இல்லாமல், ஆனால், வருமானத்தை மட்டும் அள்ளித் தரும் புறா வளர்ப்புக்கு இதுவரை நாம் பொருளாதார முக்கியத்துவம் தந்ததே இல்லை. ஆனால், அதன் அருமை தெரிந்தவர்கள் புறா வளர்ப்பின் மூலம் மாதந்தோறும் வல்லீசாக வருமானத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர், மதுரையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி பாண்டியன்.

இவருக்குச் சொந்த ஊர் விருதுநகர். தனது தோட்டத்தில் பொழுதுபோக்காக இவர் புறா வளர்க்க ஆரம்பித்தார். இன்று அந்த புறாக்கள் அவருக்கு மகிழ்ச்சியுடன் வருமானத்தையும் அள்ளித் தருகிறது. அதுபற்றி அவரே சொல்வதைக் கேட்போமே!

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1

பொழுதுபோக்கா வளர்க்க ஆரம்பிச்சேன்!

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1

''ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி, அழகுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் இருக்கட்டுமேன்னு புறா வளர்க்க ஆரம்பிச்சேன். அதுக்காக மரப்பலகைகளை வெச்சு நாலு கூண்டுகளை அமைச்சு, 30 ஜோடி புறாக்களை வாங்கிட்டு வந்து உள்ளேவிட்டேன். நான் செஞ்சது அவ்வளவுதான். அந்த புறாக்களுக்கு நான் எந்த தீவனமும் தர்றதில்லை. தானாகவே பறந்து போயி இரை எடுத்திட்டு கூட்டுக்கு வந்திடும். மாலை நேரங்கள்ல கூண்டுக்குப் பக்கத்துல கொஞ்சம் தானியங்களை இறைச்சுவிடுவோம். சரியா அந்த நேரத்துக்கு கூண்டைத் தேடி வந்து, அந்த  தானியங்களை கொத்தி தின்னுட்டு கூண்டுக்குள்ள போய் அடைஞ்சுக்கும்.

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1

ரெண்டு வகை புறா!

புறாவுல ரெண்டு வகை இருக்கு. ஒண்ணுக்குப் பேரு, சோங்குப் புறா. இதை கிணத்துப் புறான்னுகூட சொல்லுவாங்க. காரணம், இவை கிணத்துலதான் வளரும். இன்னொன்னு, கூட்டுப் புறா. இந்த புறாக்களை வீட்டின் கொல்லை, மொட்டை மாடி, தோட்டங்கள், காலி இடங்களில் வளர்க்கலாம். இரை பொறுக்க மட்டுமே வெளியே போகும்.  

இந்த புறாக்களை எப்படி வளர்க்கணும்ங்கிற வித்தையை எங்க போயும் கத்துக்க வேணாம். எளிதா யாரு வேணுமின்னாலும் செய்யலாம்.  

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1
அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1

இப்படித்தான் ஆரம்பிக்கணும்!

பழங்களை அடைத்துவரும் பெட்டிகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும். அந்த பலகைகளை பயன்படுத்தி கூண்டுகளை அமைச்சுக்கலாம். கூண்டுகள் தரையிலிருந்து மூன்றடிக்கு மேல் உயரமாக இருக்கணும். புதுசா  வளர்க்க நினைக்கிறவங்க இளம் குஞ்சுகளாகதான் பார்த்து வாங்கணும். கூண்டு, புறாக்கள் என ஆரம்ப முதலீடு 5 ஆயிரம் ரூபாய் ஆகும்.  

புறா வளர்ப்பில் முக்கியமான விஷயம், முட்டைகளை கையால் தொடக்கூடாது. அப்படி தொட்டா அந்த முட்டை பொறிக்காது. மழைக் காலத்துல புறாக்கள் வெளியே போயி இரை எடுக்க முடியாது. அப்ப மட்டும் கம்பு, சோளம்னு  தானியங்களை கூண்டுகளில் வைக்கணும்.

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1
அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1

பராமரிப்பு சுலபம்!

புறாக்களுக்குப் பெருசா நோய் எதுவும் வராது. வாரத்துக்கு ஒருமுறை கொட்டகையைச் சுத்தம் செஞ்சா போதும். பெண் புறா பருவம் வந்ததும் முட்டை வைக்க ஆரம்பிக்கும். ஒரு பெண் புறா இரண்டு முட்டை போட்டவுடனே அடைகாக்க உக்காந்து, அடுத்த 28 நாள்ல குஞ்சு பொறிக்கும். அதிலிருந்து 15 நாள்ல தாய் புறாகிட்ட இருந்து குஞ்சுகளை தனியாப் பிரிச்சுடனும். அப்பதான் அடுத்த 30 நாள்ல தாய்ப்புறா முட்டை போடும். இப்படி ஒரு பெண் புறா மூலமா வருஷத்துக்குப் பத்து குஞ்சுகள் வரைக்கும் கிடைக்கும்.

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1

கறிக்குதான் காசு!

இளம் குஞ்சுகளின் ரத்தத்தை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால், வலி குணமாகிவிடும் என நம்புவதால் குஞ்சுகளை வாங்கிட்டுப் போறாங்க. தவிர, குஞ்சுகளில்தான் கறி அதிகம் இருக்கும். பெரிய புறாவுல எலும்புதான் இருக்கும்.

25 நாளான குஞ்சு 300-400 கிராம் எடை இருக்கும்.

இந்த புறாக்களை விக்குறதுக்கு அலைய வேணாம். எங்க பண்ணைக்கே வந்து பணம் தந்து வாங்கிட்டுப் போறாங்க. இப்ப 25 நாள் வயசுள்ள ஒரு ஜோடி குஞ்சுங்க 100 ரூபாய்க்கு விலை போகுது. அப்ப ஒரு ஜோடி புறா மூலமா நமக்கு வருஷத்துக்கு 1,000 ரூபா கிடைக்கும்.

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 1

ஐந்து மடங்கு லாபம்!

நான் ஒரு வருஷத்துக்கு 500 ஜோடிகளை விக்குறதன் மூலமா 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பாக்குறேன். இதுக்கு நான் செஞ்ச முதலீடு,  அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். எல்லாத்துக்கும் மேலே இந்த புறாக்களால் நமக்கு கிடைக்கிற சந்தோஷம், வருமானத்தைவிட பெரிசா நினைக்கிறேன்'' என்று மகிழ்ச்சி பொங்க பேசி முடித்தார் மருத்துவர் புகழேந்தி பாண்டியன்.

(லாபம் தொடரும்)
படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism