Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:

எஃப்.டி.ஐ. ரகசியம்!

ஷேர்லக் ஹோம்ஸ்

ழக்கமாக சாதுவாக வரும் ஷேர்லக், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உற்சாகத் துள்ளலோடு வந்து நம் எதிரில் உட்கார்ந்தார். ''சென்செக்ஸ் ஒரே நாளில் 450 புள்ளிகளுக்கு மேல் ஏறிவிட்டது. அமெரிக்க க்யூ.இ.3 அறிவிப்பு, டீசல் விலை ஏற்றம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் எஃப்.டி.ஐ. அனுமதி எதிர்பார்ப்பு எல்லாம் சேர்ந்து சந்தையை ஒரேயடியாக உயர்த்திவிட்டது. க்யூ.இ.3 சரி, தவறு என்று ஒருபக்கம் சூடான விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. சரி என்கிறவர்கள் இதனால் பொருளாதாரம் உயரும் என்கிறார்கள். தவறு என்கிறவர்கள், பிரச்னையை இன்னும் பத்து வருடங்களுக்குத் தள்ளிப்போடுவதாகச் சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இந்த க்யூ.இ.3 இந்தியாவுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் நீண்ட காலத்துக்கு நல்லதல்ல என்ற கருத்தும் இருக்கிறது. அதாவது, அதிக பணப்புழக்கத்தால் தங்கம் மற்றும் குரூட் ஆயிலின் விலையும் உயரும். இந்தியா போன்று இறக்குமதியை நம்பி இருக்கும் நாடுகளுக்கு இது நல்லதல்ல. மேலும், பெர்னான்கியின் அறிவிப்பில் ஒரு சின்ன ட்ரிக் இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் 40 பில்லியன் டாலர்களைக் கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், இன்னும் நான்கு மாதத்தில் அங்கு புதிய அரசு அமையப் போகிறது. ஒருவேளை ஒபாமா மீண்டும் வரவில்லை என்றால் க்யூ.இ.3 தொடராது என்றும் ஒரு பேச்சு இருக்கிறது'' என்றவருக்கு மணப்பாறை முறுக்கு தந்து, அடுத்த டாபிக்குக்குப் போகச் சொன்னோம்.

''எட்டு வருடங்களாக நடக்காத விஷயங்கள் ஒரே இரவில் நடந்திருக்கிறது. அதுதான், விமானத் துறை, மல்ட்டி பிராண்ட் சில்லரை விற்பனை உள்பட பல்வேறு துறைகளில் எஃப்.டி.ஐ. அனுமதித்திருப்பது. எப்படி இது நடந்தது? பின்னணியாக நடந்த ரகசியங்கள் என்ன? என டெல்லி அரசியல் தலைவர்களுடன் நல்ல தொடர்பு வைத்திருக்கும் சில புரோக்கர்களுடன் பேசினேன். சர்வதேச ரேட்டிங் ஏஜென்சிகள் இந்தியாவுக்கான ரேட்டிங்கை குறைக்க நேரம் பார்த்து வருகிறது. தலைக்கு மேல் தொங்கும் இந்த கத்தியை தூக்கி எறியும் ஒரு முயற்சியாக எஃப்.டி.ஐ. அறிவிப்பை சொல்கிறார்கள். மேலும், பல கம்பெனிகள் வாங்கிய டாலர் கடன்கள் திரும்பச் செலுத்தும் நேரம் நெருங்குகிறது. அதனால், ரூபாயின் மதிப்பு இன்னும் குறைந்து டாலருக்கு எதிராக 60-ஐ தாண்டாமல் இருப்பதற்கு ஏதுவாக அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து, தற்போதைய நிலைமையில் மம்தா மற்றும் முலாயம்சிங் யாதவ் பேசுவதைப் பார்த்தால் எந்த நேரத்திலும் அவர்கள் காலை வாரிவிடலாம் என்று சந்தேகப்படுகிறது காங்கிரஸ். எனவே, கூடிய சீக்கிரம் தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதால், வேக வேகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

##~##
ஆனால், இந்த அமளிதுமளியில் நடந்த ஒரே நல்ல விஷயம், நமது ரூபாய் மதிப்பு உடனடியாக உயரும் என்பதே. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 2,800 கோடி ரூபாய் அந்நிய நிறுவன முதலீடு சந்தைக்கு வந்திருக்கிறது. இதுபோன்ற அறிவிப்புகளால் அந்நிய முதலீடு அதிகரித்து நிஃப்டி 5650 புள்ளிகளுக்குச் சென்றாலும் ஆச்சரியப்படத் தேவை இல்லை.  ரூபாயின் மதிப்பும் உயரும் என்பதால், அன்று நிறைய ஷார்ட் கவரிங் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். கரன்சி டிரேடர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது'' என்றவர், ஒரு முறுக்கை நொறுக்கினார்.

''தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் எஃப்.டி.ஐ. வந்திருக்கிறதே!'' என்றோம்.

''தொலைக்காட்சி ஒளிபரப்பில் அந்நிய முதலீடு காரணமாக டிஷ் டிவி, சன் டிவி, ஹாத்வே,  மல்டி பிராண்டில் எஃப்.டி.ஐ. காரணமாக, ரேமண்ட், அர்விந்த், செஞ்சூரி டெக்ஸ்டைல்ஸ், ஆதித்யா போன்ற பங்குகள் குறுகிய காலத்தில் நல்ல ஏற்றம் பெற வாய்ப்பு இருக்கிறது. இந்த பங்குகளை கொஞ்சம் கவனமாக ஃபாலோ செய்யலாம்!'' என்றார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''திங்கட்கிழமை ரிசர்வ் வங்கியின் கூட்டமும் நடக்க இருக்கிறதே! ஏதாவது அதிரடி மாற்றம் எதிர்பார்க்கலாமா?'' என்று கேட்டோம்.

''உம்மைப் போல எல்லோரும் எதிர்பார்த்து கிடக்கிறார்கள். அநேகமாக சி.ஆர்.ஆர். அல்லது வட்டி குறைப்பு உள்ளிட்ட ஏதாவது ஒரு அறிவிப்பு நடக்கலாம். ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் வராவிட்டாலும் சந்தை இப்போதைக்கு மேலே செல்லவே நிறைய வாய்ப்பு இருக்கிறது'' என்றவருக்கு சுடச்சுட சுக்குமல்லி காப்பி தந்தோம். சூடு ஆறும் முன்பே அதை ரசித்துக் குடித்தார்.  

''டாடா டெலி சர்வீஸ் பங்கு விலையில் எந்த நேரமும் மாற்றம் வரலாம். காரணம், தன் வசம் இருக்கும் அந்நிறுவனத்தின் 3.75% பங்குகளை விற்க தொழில் அதிபர் சிவசங்கரன் முடிவு செய்திருக்கிறாராம். எனவே, உஷாராக இருக்கவும். சந்தை ஹாட்டாக இருப்பதால் இந்த வாரம் நோ ஷேர்டிப்ஸ். அடுத்த வாரம் பார்ப்போமா'' என்று கேட்டபடி பறந்தார் ஷேர்லக்.

ஷேர்லக் ஹோம்ஸ்

ருகிற தீபாவளி முதல் மூன்றாவதாக நமக்கொரு ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் கிடைக்கப் போகிறது. அதுதான் எம்.சி.எக்ஸ். எஸ்-எக்ஸ்! இதன் அறிமுக விழா சென்னையில் கடந்த வாரம் நடக்க, அதில் கலந்துகொள்ள வந்திருந்த அதன் எம்.டி. மற்றும் சி.இ.ஓ. ஜோசப் மேஸே நமக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதிலிருந்து சில கேள்விகள்:

சந்தை பெரிய அளவில் உயராமல் இருக்கும் இந்நிலையில் நீங்கள் புதிய எக்ஸ்சேஞ்ச் ஆரம்பிப்பது சரியா?

''சந்தை ஆரம்பிப்பதற்கு இதுதான் சரியான நேரம். சந்தை ஏற்ற இறக்கங்களோடு இருக்கும்போதுதான் நாம் பலவிதமான பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க முடியும். அது மட்டுமல்லாமல் அரசும், ரெகுலேட்டர்களும் சந்தையை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது வரவேற்க தகுந்த விஷயம்.''

இந்தியாவில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். மிடில் கிளாஸ் சில்லரை முதலீட்டாளர்களை நீங்கள் எப்படி ஈர்க்கப் போகிறீர்கள்?

''சீனா கம்யூனிஸ நாடு. அங்கு 200 மில்லியன் மக்கள் சந்தையில் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 20 மில்லியன் மக்கள் மட்டுமே சந்தையில் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு நாளைக்கு ஒரு முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி என்பதைக் குறைந்தபட்ச இலக்காக வைத்துக்கொண்டு, வருடத்துக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர் நிகழ்ச்சிகளை நடத்தி அதிக விழிப்பு உணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். மேலும், கிராமங்களுக்கு நேரடி புரோக்கர்களை நியமிப்பதன் மூலமும் பங்கு முதலீட்டை எல்லோருக்கும் சாத்தியமாக்குவோம்.''  

சென்செக்ஸ் 100 புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. உங்களுடைய அடிப்படை புள்ளி எவ்வளவாக இருக்கும்?

''கூடிய விரைவில் எங்களது இண்டெக்ஸில் இருக்கும் பங்குகள், அதனுடைய வெயிட்டேஜ் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அறிவிப்போம். அப்போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்!''

தற்போதுள்ள எக்ஸ்சேஞ்சுகளிலிருந்து மாறுபட ஏதாவது புதிய புராடக்ட்களை அறிமுகம் செய்ய உள்ளீர்களா?

''நாங்கள் வர்த்தகம் மற்றும் செட்டில்மென்ட் முறையில் பல புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். விரைவில் இதுபற்றிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.''  

போட்டி அதிகரித்தால் முதலீட்டாளர்களுக்கும், புரோக்கர்களுக்கும் குறைந்த செலவில் நிறைய சேவை கிடைக்கும். எம்.சி.எக்ஸ். - எஸ்.எக்ஸ். மூலம் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமெனில் தாராளமாக வரவேற்போம்!

- வா.கார்த்திகேயன்,
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism