மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

இந்த வாரம் அடிப்படை உலோகமான காப்பர் மற்றும் நிக்கல் குறித்து வெல்த் டெரிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணன் விளக்கமாக சொல்கிறார்.  

காப்பர்!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

''மற்ற அடிப்படை உலோகங்களோடு ஒப்பிடும்போது காப்பரின் சப்ளை குறைந்துள்ளது. சீனாவில் வட்டி விகிதங்கள் குறைந்ததை அடுத்து அடிப்படை உலோகங்களுக்கான தேவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. காப்பரை அதிகம் பயன்படுத்துவதில் சீனா முன்னிலை வகிக்கிறது. இப்போது வட்டி விகிதம் குறைந்திருப்பதால் அதிகளவில் பணம் கிடைத்து காப்பருக்கான தேவையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், சீனாவின் யுனான் மாகாண அரசு உலோகங்களின் விலை குறைவை தடுப்பதற்காக 2,00,000 டன் அலுமினியம், 20,000 டன் காப்பர், 50,000 டன் ஜிங்க் மற்றும் மற்ற உலோகங்கள் 3,00,000 டன் வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உலோகங்களின் விலை குறையும்.

தவிர,  டெக்னிக்கல் பிரேக் அவுட் காரணமாக காப்பரின் விலை வரும் வாரத்தில் அதிகரிக்கும். தற்போது 439 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரும் காப்பரை குறுகிய காலத்தில் 448, 454 ரூபாய் இலக்கு விலையாக எதிர்பார்க்கலாம். நடுத்தர கால இலக்கு விலை 460 மற்றும் 472 ரூபாய். குறுகிய கால வர்த்தகர்கள் காப்பரை 432 ரூபாய் ஸ்டாப்லாஸாக கொள்ளவும். நடுத்தர கால வர்த்தகர்கள் 428 ரூபாய் ஸ்டாப்லாஸாக கொள்ளவும்.

நிக்கல்!

##~##
பருவநிலை காரணமாக மூன்றாவது காலாண்டில் நிக்கலுக்கான தேவை குறைந்திருக்கிறது. இந்த நிலை நான்காவது காலாண்டு தொடக்கம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. உலகளவில் நிக்கலுக்கான தேவை இந்த வருடம் 4.5 சதவிகிதமாக இருக்கிறது. இது 2013-ம் ஆண்டில் 7.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2012 மற்றும் 2013-ம் ஆண்டில் புது தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி குறைவாக இருப்பதாலும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சீனாவில் நிக்கல் உற்பத்தியாளர்களுக்கு அரசிடம் இருந்து நிறைய தடைகள் இருப்பதும் உற்பத்தியைப் பாதிக்கும். இந்த காரணங்களின் அடிப்படையில் நிக்கல் வரும் வாரங்களில் விலை அதிகரிக்கும்.

தற்போதைய நிலையிலிருந்து 950-970 ரூபாய்க்கு நிக்கலை வாங்கி 990 ரூபாய், 1,014 ரூபாய் மற்றும் 1,045 ரூபாய் என்ற இலக்கு விலையை அடையலாம். குறுகியகால வர்த்தகர்கள் 938 ரூபாய் ஸ்டாப்லாஸாகவும், நடுத்தர கால வர்த்தகர்கள் 927 ரூபாய் ஸ்டாப்லாஸாகவும் கொண்டு நிக்கலை வாங்கலாம். காப்பர், ஜிங்க் மற்றும் லிட் உள்ளிட்ட அடிப்படை உலோகங்களை போல நிக்கல் சமீப நாட்களில் விலையேற்றம் காணவில்லை. எனவே நிக்கலை இது வாங்கும் தருணம்'' என்றார் ரமணன்.

தங்கம்!

ஸ்பெயின் தனது பட்ஜெட் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து தங்கத்தின் விலை 1.5 சதவிகிதம் கடந்த வியாழக்கிழமையன்று அதிகரித்தது. இந்த செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக ஸ்பெயின், சர்வதேச நாடுகளிடமிருந்து உதவி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது சந்தை பங்களிப்பாளர்களிடையே ரிஸ்க் நிலையை உருவாக்கவும், டாலரின் டிமாண்ட் குறையவும் காரணமாக அமைந்தது. இந்த காரணங்களால் தங்கத்தின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்தது.

எம்.சி.எக்ஸ். சந்தையில் பத்து கிராம் தங்கம் 31,420 ரூபாய் வரை உயர்வை சென்ற வாரத்தில் கண்டது. எனினும், இந்திய ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்ததைத் தொடர்ந்து மேலும் விலை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. வரும் வாரத்திலும் இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை சற்று நடுத்தரமாக வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

வெள்ளி!

சென்ற வாரத்தில் தங்கத்தின் விலை மற்றும் அடிப்படை உலோகத்தின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளியின் விலையும் அதிகரித்தது. கூடுதலாக டாலரின் மதிப்புக் குறைவும் வெள்ளியின் தேவையை முதலீட்டாளர்களிடம் அதிகரித்தது. சென்ற வாரத்தில் எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ வெள்ளி 63,325 ரூபாய் வரை வர்த்தகமானது. எனினும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து மேலும் விலை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. தங்கத்தின் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்து வரும் வாரத்தில் வெள்ளியின் விலை வர்த்தகமாகும்.

கச்சா எண்ணெய்!

சீனா மற்றும் ஸ்பெயின் நாடுகள் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுத்திருக்கும் நடவடிக்கைகள் காரணமாக கச்சா என்ணெய்யின் விலை 2.1 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமானது. மேலும், டாலரின் மதிப்புக் குறைவும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்க காரணமானது. உள்நாட்டு சந்தையில் 1.3 சதவிகிதம் விலை அதிகரித்து ஒரு பேரல் 4,886 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததும் எம்.சி.எக்ஸ். சந்தையில் விலை அதிகரித்தது. டாலரின் மதிப்பு குறையும் பட்சத்தில் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு.

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

இயற்கை எரிவாயு!

பனி பொழியும் நாடுகளில் பனி அதிகமாக பெய்ய தொடங்கியிருப்பதால் இயற்கை எரிவாயுக்கான தேவை  அதிகரித்தது. சென்ற வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் 9 சதவிகிதம் அதிகரித்தது. அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி எதிர்பார்த்ததைவிட 80 பில்லியன் கியூபிக் ஃபீட் அதிகரித்ததை அடுத்து மேலும் விலை உயராமல் தடுக்கப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால்  இந்திய சந்தைகளில் இயற்கை எரிவாயுவின் விலை 1.6 சதவிகித உயர்வோடு தடுக்கப்பட்டது. தேவை அதிகரித்துள்ளதை அடுத்து இயற்கை எரிவாயுவின் விலை வரும் வாரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பானுமதி அருணாசலம்.