Published:Updated:

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

தங்கம்!

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்தாண்டில் இல்லாத அளவுக்கு 1,796 டாலரைத் தொட்டது. ஐரோப்பிய மத்திய வங்கி பாண்டுகளை வாங்கத் தயார் என அறிவித்ததே இதற்கு காரணம். எனினும், இந்திய சந்தைகளில் இந்த விலையேற்றம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் பாதிப்பில்லாமல் போனது. மேலும், அமெரிக்காவில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் வெள்ளிக்கிழமை இரவு தங்கம் விலை 17 டாலர் வரை குறைந்தது. இந்திய அரசு இன்ஷூரன்ஸ் மற்றும் பென்ஷன் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததன் விளைவாக இந்திய பங்குச் சந்தை நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. இதன் விளைவாக டாலரின் மதிப்பு 0.8 சதவிகிதம் வரை குறைந்தது. டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைவாகவே இருக்கும்பட்சத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தே வர்த்தகமாகும். கடந்த வெள்ளிக்கிழமை இரவு எம்.சி.எக்ஸ். சந்தையில் பத்து கிராம் தங்கம் டிசம்பர் கான்ட்ராக்ட் 31,125 ரூபாய்க்கு வர்த்தகமானது.
மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

வெள்ளி!

தங்கத்தின் விலை அதிகரித்ததோடு அடிப்படை உலோகங்களின் விலையும் உயர்ந்ததன் காரணமாக வெள்ளி விலையும் சென்ற வாரத்தில் அதிகரித்தே வர்த்தகமானது. டாலரின் மதிப்பு அதிகரித்ததும் வெள்ளியின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 35 டாலர் வரை சென்றது. எனினும், ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் வெள்ளியின் விலை எம்.சி.எக்ஸ். சந்தையில் குறைந்தது. ஒரு கிலோ வெள்ளி 62,412 ரூபாய்க்கு வர்த்தகமானது. அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையைப் பொறுத்து வெள்ளியின் விலை இருக்கும்.

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

கச்சா எண்ணெய்!

மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சாதகமற்ற சூழ்நிலை மற்றும் டாலரின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை 4.1 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமானது. அமெரிக்காவில் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதும், சப்ளை பாதிக்குமோ என்ற பயத்திலும் விலை ஏறியது. மேலும், துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கிடையே பிரச்னை அதிகரித்து வருகிறது. எனினும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபேக் கச்சா எண்ணெய்யின் உற்பத்தியை அதிகரித்ததால் விலை மேலும் உயராமல் தடுக்கப்பட்டது. கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரித்தால் அதிகப்படியான உற்பத்தியை எளிதாகச் சமாளித்துவிடலாம் என ஒபேக் அமைப்பு சொல்லி இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 91 டாலர் வரைக்கும் சென்ற வாரத்தில் வர்த்தகமானது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து எம்.சி.எக்ஸ். சந்தையில் விலை குறைந்து வர்த்தகமானது. சப்ளை அதிகமாக இருப்பதால் வரும் வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமாக வாய்ப்புண்டு.

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

இயற்கை எரிவாயு!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

பனி பொழியும் அமெரிக்க நாடுகளில் டிமாண்ட் அதிகரிக்கும் என்ற காரணத்தால் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்து வர்த்தகமானது. எனினும், அமெரிக்க இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி அதிகரித்ததைத் தொடர்ந்து விலை மேலும், அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி 77 பில்லியன் கியூபிக் ஃபீட் அதிகரித்து 3.653 டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக இருப்பதாக அமெரிக்காவின் எனர்ஜி இன்ஃபர்மேஷன் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் ஒரு எம்.எம்.பி.டி.யூ. இயற்கை எரிவாயு 177 ரூபாய் வரை வர்த்தகமானது. வரும் வாரத்தில் குளிர்பிரதேசங்களில் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு எம்.எம்.பி.டி.யூ. இயற்கை எரிவாயு நவம்பர் மாத கான்ட்ராக்ட் 193 ரூபாய்க்கு வர்த்தகமானது.

காப்பர்!

அடிப்படை உலோகங்களில் முன்னணி உலோகமான காப்பர் சென்ற வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமானது. ஐரோப்பிய மத்திய வங்கி பாண்டுகளை வாங்கத் தயாரென அறிவித்ததும், அமெரிக்காவில் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் காப்பருக்குச் சாதகமாக இருந்தது. மேலும், டாலரின் மதிப்பு குறைந்ததும், எல்.எம்.இ. காப்பர் இன்வென்ட்டரி குறைந்துள்ளதும் காப்பரின் விலைக்கு மேலும் சாதகமானது. எனினும், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் எம்.சி.எக்ஸ். சந்தையில் 1.3 சதவிகிதம் விலை குறைந்தது. உலக பொருளாதார நிலவரங்களைப் பார்க்கும்போது காப்பரின் விலை வரும் வாரத்தில் அதிகரித்தே வர்த்தகமாகும். எனினும், ரூபாயின் மதிப்பையும் வர்த்தகர்கள் கவனிப்பது அவசியம். கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒரு கிலோ காப்பர் நவம்பர் மாத கான்ட்ராக்ட் எம்.சி.எக்ஸ். சந்தையில் 435 ரூபாய்க்கு வர்த்தகமானது.

- பானுமதி அருணாசலம்.