Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

இந்த வாரம் மிளகாய், ஜீரகம், சோயாபீன் குறித்து விளக்கமாக கூறுகிறார் ஐ.எஃப்.ஐ.என். ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் நேஹா.

மிளகாய்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
''வரத்து அதிகரித்ததும், மிளகாயின் தேவை குறைந்ததன் விளைவாகவும் கடந்த வாரத்தில் மிளகாய் குறைந்த விலைக்கு விற்பனையானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஏற்றுமதி தேவை குறைவால் வருகிற வாரத்திலும் மிளகாய் விலை குறைந்தே வர்த்தகமாகும். என்.சி.டி.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் மிளகாய் (நவம்பர் மாத கான்ட்ராக்ட்) 5,100 - 5,300 ரூபாய் வரை விலை போகும். இதன் சப்போர்ட் லெவல் 5,150 ரூபாய். கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 5,330 ரூபாய்க்கு வர்த்தகமானது.
அக்ரி கமாடிட்டி!


சோயாபீன்!

கடந்த வாரம் வெள்ளியன்று சோயாபீன் விலை ஷார்ட் கவரிங் செய்ததால் ஏற ஆரம்பித்தது. மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து சமையல் எண்ணெய்யின் வரத்து அதிகரித்ததால் கடந்த வாரத்தில் சோயா எண்ணெய்யின் விலை அதிகமாவது தடுக்கப்பட்டது. மேலும், மலேசியாவில் தற்போது நடப்பில் இருக்கும் ஏற்றுமதி வரியான 23 சதவிகிதத்திலிருந்து 8-10 சதவிகிதமாக்க  நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது அந்த நாடு. இந்த வருடம் இந்தியாவிலிருந்து கடந்த செப்டம்பர் வரை 1,43,990 டன் சோயாபீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே கால கட்டத்தை ஒப்பிடும்போது 64% குறைவு. சோயாபீனின் அதிக விலை காரணமாக அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அளவு குறைந்து வருகிறது. உள்நாட்டில் விலை அதிகரிப்பால் ஏற்றுமதி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. வரும் வாரத்தில் விலை மீண்டும் உயரவும் செய்யலாம்.  

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம் (JEERA)

கடந்த வாரத்தில் ஏற்றுமதி தேவை அதிகரித்ததன் காரணமாக ஜீரகம் அதிக விலைக்கு விற்பனை ஆனது. யூக வணிகர்கள் அதிகமாக பொசிஷன் எடுத்ததால் ஃப்யூச்சர் சந்தையிலும் விலை அதிகரித்தது. வரத்து குறைவாக இருந்தாலும் டிமாண்ட் அதிகமாக இருந்தது. இதனால் விற்பனை வரத்து 3,500 முதல் 4,000 பைகள் வந்தாலும் 6,000 முதல் 7,000 பைகள் வரை விற்பனையானது. சிரியா நாட்டில் ஏற்பட்டிருக்கும் போர் காரணமாக இந்திய ஜீரகத்தின் ஏற்றுமதி இந்தாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் இந்தியாவிலிருந்து 18,300 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தைவிட 218 சதவிகிதம் அதிகம். இதனால், இந்த வருடத்தில் ஜீரக ஏற்றுமதி 45,000 டன்னாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் வாரத்தில் 13,750 - 14,250 ரூபாய் என்ற ரீதியில் வர்த்தகமாகும். சப்போர்ட் 13,700 ரூபாய். கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் ஜீரகம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 13,850 ரூபாய்க்கு வர்த்தகமானது. ‑

மஞ்சள் (TURMERIC)

அக்ரி கமாடிட்டி!

தரமான மஞ்சளின் வரத்து குறைந்ததன் காரணமாக கடந்த வாரத்தில் குறைவான விலைக்கே வர்த்தகமானது. கடந்த பத்து தினங்களாக நடுத்தர தர மஞ்சள் வரத்து அதிகமாக இருந்ததால் உயர்தர மஞ்சளை எதிர்பார்த்து காத்திருந்த வியாபாரிகள் நடுத்தர தர மஞ்சளை வாங்க முன்வரவில்லை. இதனால் அதன் விலை குறைந்தே  விற்பனையானது. கடந்த வாரத்தில் 3,200 பைகள் விற்பனைக்கு வந்தன. ஆனால், 45% மஞ்சள் மட்டுமே விற்பனையானது. வாரத்தின் இறுதியில் ஒரு குவிண்டாலுக்கு 7,000 ரூபாய் வரை விவசாயிகளால் விலை பேசப்பட்டது. ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் 4,030 ரூபாய் முதல் 5,666 ரூபாய் வரை விலை போனது. சாதாரண மஞ்சள் 3,896 ரூபாய் முதல் 5,197 ரூபாய் வரை விலை போனது.

ரப்பர்

அக்ரி கமாடிட்டி!

ரப்பர் அதிகம் விளையாதப் பகுதிகளில் விளைச்சலை உருவாக்க ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது ரப்பர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா. எந்தெந்த பகுதிகளில் ரப்பர் விளைகின்றது? எவ்வளவு ஏக்கர் ரப்பர் விளையாமல் இருக்கின்றன என்பதைக் கணக்கிட்டு ரப்பர் விளையாதப் பகுதிகளில் ரப்பரை விளையச் செய்வதுதான் இதன் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற இன்னும் ஓராண்டு ஆகலாம். இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் அதிக அளவு ரப்பர் உற்பத்தி ஆகிறது. அதற்கு அடுத்தபடியாக ரப்பரை உற்பத்தி செய்யும் மாநிலம் திரிபுரா. தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளான கொங்கன், ஒடிஷா, ஆந்திரப்பிரதேசம் போன்ற இடங்களில் ரப்பர் விளைய வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் கூடுதலாக ரப்பர் உற்பத்தி செய்யலாம் எனவும் இந்த ஆய்வு மூலம் கூறப்படுகிறது. 2012-2013-ம் ஆண்டில் ரப்பர் தேவை பத்து லட்சம் டன்னாக இருக்குமெனவும், ஆனால் உற்பத்தியோ 9.3 லட்சம் டன்னாக இருக்கிறது எனவும் ஆய்வு தெரியப்படுத்துகிறது. என்.எம்.சி.இ. எக்ஸ்சேஞ்சில் 100 கிலோ ரப்பர் (அக்டோபர் மாத கான்ட்ராக்ட்) 19,492 ரூபாய்க்கு வர்த்தமானது. இது 19,650 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது.

- செ.கார்த்திகேயன்.