Published:Updated:

பிஸினஸ் சமூகம் - பிராமணர்கள்!

பிஸினஸ் வரலாறு

பிஸினஸ் சமூகம் - பிராமணர்கள்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிழகத்தின் பிஸினஸ் வளர்ச்சிக்கு பாடுபட்ட பல்வேறு சமூகங்களில் முக்கியமான பங்கு பிராமணர்களுக்கு உண்டு. அந்த சமூகம் தந்த பிஸினஸ் ஜாம்பவான்கள் பற்றி இந்த இதழ் தொடங்கி பார்க்க ஆரம்பிப்போம்.

தமிழகத்தில் இருக்கும் மற்ற சமூகங்களைப் போல பிராமணர்களுக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. பன்னெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் வடக்கிலிருந்து வந்து தமிழகத்தில் குடியேறியவர்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். எனினும், இத்தனை ஆண்டு காலம் தமிழகத்திலேயே இருந்து தமிழ் கலாசாரத்தை ஏற்று, அதன்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள்.

பிராமணர்களுக்கு பூஜை, புனஸ்காரம் செய்யும் இறைப்பணியே பிரதானமாக இருந்தது. சமஸ்கிருதம் அவர்களுடைய தொழில் மொழியாக இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசர்களை சார்ந்தே அவர்கள் இருந்தனர். இந்த அரசர்கள் பல்வேறு கோயில்களை கட்டினார்கள். இந்த கோயில்களை கும்பாபிஷேகம் செய்வதில் ஆரம்பித்து தினமும் பூஜை, புனஸ்காரம் செய்கிற வேலை பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே செய்துவந்தனர். ஒவ்வொரு கோயிலைச் சுற்றியுள்ள இடமும் இவர்களுக்குத் தரப்பட்டது. இந்த இடமே இன்றைக்கும் அக்ரஹாரம் என அழைக்கப்படுகிறது.

விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட ஆற்றுவழி நாகரிகம்தான் இவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்ததால், தமிழகத்தில் நல்ல நீராதாரம் கொண்ட பகுதிகளிலேயே இவர்கள் அதிக அளவில் இருந்தனர். காவிரியாறு பாயும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருச்சி, வைகையாறு பாயும் மதுரை மற்றும் சோழவந்தான், தாமிரபரணியாறு பாயும் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற சில பகுதிகள் பிராமணர்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

கல்வி என்பது இந்த சமூகத்தின் முதன்மை சொத்தாக இருந்தது. படிப்பது, எழுதுவது, இலக்கியம் படைப்பது, வேதங்களை உருவாக்கி, அதை மற்றவர்களுக்கு கற்றுத் தருவது ஆகியவற்றை இந்த சமூகத்தினர் ஆதிகாலம் தொட்டு செய்து வந்தனர். அரசனுக்கு ஆலோசனை தருகிற அளவுக்கு இருந்ததால் அரசு நிர்வாகத்திலும் இவர்கள் அதிக அளவில் ஈடுபட்டனர். இதனால் அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் இவர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

பிராமணர்களில் அய்யர், அய்யங்கார் என இரு முக்கிய பிரிவுகள் உண்டு. அய்யர்கள் என்பவர்கள் சிவனை வழிபடுகிறவர்களாகவும், அய்யங்கார்கள் என்பவர்கள் விஷ்ணுவை வழிபடுகிறவர்களாகவும் இருக்கின்றனர். இறைப்பணி, வேத வழி வாழ்க்கை போன்ற பல்வேறு விஷயங்கள் இவர்களை ஒன்றிணைத்து, இன்றைக்கு பிராமணர்கள் என்கிற ஒரே பிரிவின் கீழ் வந்திருக்கின்றனர்.

இந்தியாவில் பிரிட்டிஷ் கல்வி முறை அறிமுகமானபோது அதை முதலில் ஏற்றுக்கொண்டு, அதிக அளவில் படித்தவர்களும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே. ஆங்கில மொழியை அதிக அளவில் கற்றதனாலேயே ஆங்கில அரசாங்கத்தின் பல்வேறு வேலைகள் இவர்களைத் தேடி வந்தது. இதனால் கிராமங்களிலிருந்தும் சிறிய ஊர்களிலிருந்தும் வெளியேறி புதிதாக உருவான நகர்ப்புறங்களில் குடியேறினார்கள்.

பிராமணர்கள், காலத்தின் வளர்ச்சிக்கேற்ப வியாபாரத்திலும் ஈடுபட ஆரம்பித்தார்கள். புதிதாக எந்த தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் ஏற்றுக்கொண்டு பயனடைகிற அளவுக்குத் தெளிவும் அறிவுநுட்பமும் இவர்களுக்கு உண்டு. தமிழகத்தில் ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் முதன்முதலில் அறிமுகமானபோது அதில் முதலில் இறங்கி வெற்றிக்கொடியை நாட்டியவர் டி.வி.சுந்தரம் அய்யங்கார். செய்தித்தாள்கள் நம் சமூகத்தில் தோன்றிய காலத்திலேயே அந்த தொழிலை திறம்பட செய்தது 'இந்து’ பத்திரிகை. ஐ.டி. துறை வந்தபோது, அதில் வேலை பார்ப்பவர்களில் கணிசமானவர்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து உருவான பிஸினஸ்மேன்கள் யார் யார், அவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்பது பற்றியெல்லாம் அடுத்த இதழிலிலிருந்து பார்க்கத் தொடங்குவோம்.

(அறிவோம்)