Published:Updated:

ஓட்டுக்கு பணம் வாங்காதீர்: மக்களின் காலில் விழுந்து வேண்டுகோள்! (படங்கள்)

Vikatan Correspondent
ஓட்டுக்கு பணம் வாங்காதீர்: மக்களின் காலில் விழுந்து வேண்டுகோள்! (படங்கள்)
ஓட்டுக்கு பணம் வாங்காதீர்: மக்களின் காலில் விழுந்து வேண்டுகோள்! (படங்கள்)

சென்னை: "ஓட்டுக்கு மக்கள் பணம் வாங்கக் கூடாது" என்பதை வலியுறுத்தி சத்யாகிரகா இயக்கத்தினர் பொதுமக்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தனர்.

ஓட்டுக்கு பணம் வாங்காதீர்: மக்களின் காலில் விழுந்து வேண்டுகோள்! (படங்கள்)

ஜனநாயகம் உயிருடன் இருக்க வேண்டுமானால் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை சத்யாகிரகா இயக்கத் தலைவர் எம்.ராமகிருஷ்ணசாஸ்திரி, நிர்வாகிகள் எம்.குரானா ஞானமூர்த்தி, கே.அனில் சந்திரசேகர், பி.மோகன், பி.கண்ணன் ஆகியோர் பொதுமக்கள் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தனர்.

ஓட்டுக்கு பணம் வாங்காதீர்: மக்களின் காலில் விழுந்து வேண்டுகோள்! (படங்கள்)

அப்போது, சத்யாகிரகா இயக்கத் தலைவர் ராமகிருஷ்ணசாஸ்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக வன்முறை, லஞ்சம், சாதி போன்றவற்றை ஒழிக்க மக்கள் காலில் விழுந்து வணங்கி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்.

ஓட்டுக்கு பணம் வாங்காதீர்: மக்களின் காலில் விழுந்து வேண்டுகோள்! (படங்கள்)

தேர்தல் நேரத்தில் மக்கள் பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். வன்முறை, லஞ்சம், சாதி போன்றவற்றிற்கு அப்பாற்பட்ட வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பாதம் பணிந்து வேண்டுகிறோம். இந்தியாவிலேயே "பணத்துக்கு ஓட்டு" கலாசாரத்தை முதலில் எதிர்த்து, சத்யாகிரகம் செய்தவர்கள் நாங்கள்தான்.

ஓட்டுக்கு பணம் வாங்காதீர்: மக்களின் காலில் விழுந்து வேண்டுகோள்! (படங்கள்)

உலகிலேயே சமூக பிரச்னைகளை தீர்க்க மக்கள் காலில் விழுந்து வணங்கி மாற்றம் வேண்டி சத்யாகிரகம் செய்து கொண்டு இருப்பவர்கள் நாங்கள்தான். ஜனநாயகத்தை காக்கவும், அரசியலின் தரத்தை உயர்த்தவும் இந்த பணியினை செய்கிறோம். நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள். ஜனநாயகம் உயிருடன் இருக்க வேண்டுமானால் மக்கள் ஓட்டுககு பணம் வாங்கக் கூடாது" என்றார்.

படங்கள்: பி.சரவணகுமார்