Published:Updated:

சென்னையில் 21 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!

Vikatan Correspondent
சென்னையில் 21 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!
சென்னையில் 21 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!
சென்னையில் 21 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!

சென்னை: சென்னை மயிலாப்பூரில் 21 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை லட்சக்கணக்கான ரொக்கப் பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் காரில் எடுத்துச் சென்ற 21 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களின்றி நகைகளை காரில் எடுத்துச் சென்ற 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.