Published:Updated:

என் பணம்; என் அனுபவம்!

என் பணம்; என் அனுபவம்!

ஓவியங்கள்: முத்து 

நீங்களும் உங்கள் அனுபவங்களை  பகிர்ந்துகொள்ளலாம். பிரசுரத்துக்குத் தேர்வான அனுபவங்களுக்கு தலா

என் பணம்; என் அனுபவம்!

250 பரிசு உண்டு.

என் பணம்; என் அனுபவம்!


கடைக்காரரின் தந்திரம், உஷார்!

''அண்மையில் புதிய வீட்டுக்கு டைல்ஸ் வாங்கச் சென்றேன். இனிமையாகப் பேசிய கடைக்காரர் இந்த டைல்ஸ்தான் விற்பனையில் பாஸ்ட் மூவிங் என்று சொல்லி, தேவைக்கு அதிகமாகவே வண்டியில் ஏற்றி அனுப்பினார். வேலை முடிந்ததும் மீதி இருப்பதைதானே வந்து எடுத்துக்கொண்டு, அதற்கான பணத்தையும் தந்துவிடுவதாகக் கூறினார். ஆனால் வேலை முடிந்ததும், போனில் தொடர்புகொண்டு சொல்லியும் மீதமிருந்த டைல்ஸ்களை எடுத்துப் போகவில்லை. வேறு வழியில்லாமல் நானே ஆட்டோ பிடித்து டைல்ஸ்களை ஏற்றிக்கொண்டு சென்றால் கடை பூட்டியிருந்தது. மீண்டும் இன்னொரு நாள் ஆட்டோ பிடித்துச் சென்றால் அங்கு பணிபுரிபவர்கள் டைல்ஸ்களை வாங்கிக்கொண்டு, முதலாளி வந்தபிறகு பணத்தை வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். அப்புறமும் பலமுறை போனில் தொடர்புகொண்டும் பணம் வாங்க முடியவில்லை. அதிகப்படியான பொருட்களை நம் தலையில் கட்டிவிட்டு, இப்படி அலைக்கழித்தால் கிடந்துட்டுப் போகட்டுமேயென்று விட்டுவிடுவார்கள் என்று சில கடைக்காரர்கள் தந்திரமாக நினைத்து இப்படி செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

- வசுமதி கண்ணன், சென்னை.

என் பணம்; என் அனுபவம்!


வளைகாப்பு திருட்டு!

''கடந்த மாதம் என்னுடைய நெருங்கிய உறவினர் வீட்டில் அவர்களின் ஒரே பெண்ணிற்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடந்தது. பலரும் பெண்ணிற்கு வளையல் அணிவித்தார்கள். திருமண மண்டபம் முழுவதும் நிரம்பி வழிந்தது. சடங்குகள் எல்லாம் முடிந்ததும் பெண்ணுக்கு உடை மாற்றும் போதுதான் கவனித்திருக்கிறார்கள்; பெண்ணின் இரண்டு விரல்களில் இருந்த வைர மோதிரம் ஒன்றும், தங்க மோதிரம் ஒன்றும் காணவில்லை. காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. வீடியோ பதிவைப் பார்த்து கண்டுபிடித்துவிடலாம் என பார்த்தார்கள். ஆனால், பதிவானவர்களில் ஒரு பெண் வளையல்கள் அணியும்போது, மோதிரத்தைக் கழற்றுவதைப் பார்க்க முடிந்தது. ஆனால், வீடியோவில் அந்த பெண்ணில் முகம் பதிவாகவில்லை. இரண்டு வீட்டுக்கும் அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது விழாவுக்கு வந்திருக்கிறார்களா என்பதை விழா நடத்துபவர்கள்தான் கண்டறிந்து உஷாராக இருந்திருக்க வேண்டும் என்றார்கள் காவல் துறையினர். அவர்களின் யோசனையும் சரிதானே!''

- சக்தி சாயு அருண்மொழி, திருச்சி.

என் பணம்; என் அனுபவம்!


சிலிண்டர் திருடர்கள், ஜாக்கிரதை!

''சமீபத்தில் என் வீட்டுக்கு இரண்டு நபர்கள் வந்தார்கள். தாங்கள் கேஸ் ஏஜென்ஸியில் இருந்து வருவதாகச் சொல்லி, உங்கள் வீட்டு சிலிண்டரை செக் பண்ண வேண்டும் என்றார்கள். நான் சரியென்று உள்ளே வரச்சொன்னேன். சிலிண்டரை பரிசோதித்தவர்கள் லீக்கேஜ் இருப்பதாகச் சொல்லி, எங்கள் டீலரிடம் சர்வீஸ் செய்துவருவதாக எடுத்துச் சென்றார்கள். வெகுநேரமாகியும் அவர்கள் திரும்ப வரவேயில்லை. சந்தேகம் வரவே உடனே கேஸ் ஏஜென்ஸிக்கு போன் செய்து விவரம் சொன்னேன். நாங்கள் யாரையும் சர்வீஸுக்கு அனுப்பவில்லையே என்றார்கள். விசாரித்த பிறகுதான் தெரிந்தது, வந்தவர்கள் கேஸ் சிலிண்டர் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்ற விஷயம். பிறகு இன்னொரு அடிஷனல் சிலிண்டர் வாங்குவதற்குள் படாதபாடு படவேண்டியதாகிவிட்டது. பண நஷ்டத்தோடு, வீண் அலைச்சலும், மன உளைச்சலும் ஏற்பட்டது. அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இப்படித்தான்!''

- முகில்நாதன், புதுக்கோட்டை.

என் பணம்; என் அனுபவம்!


யாரைத்தான் நம்புவதோ..?

''இரண்டு மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒரு காலை வேளையில் ஒரு இளம் வயது ஆணும், பெண்ணும் வீடு வீடாக வந்து அநாதை ஆஸ்ரமத்துக்காக என்று பழைய துணிகளைச் சேகரித்தனர். என்னிடமும் கேட்கவே, நானும் சுமாராக இருந்த பேண்ட், சட்டைகள், புடவைகளை எடுத்துக் கொடுத்தேன். அடுத்த மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு ஏதோ ஒரு வேலையாக பஜாருக்குப் போனேன். சாலையோரத்தில் கடை போட்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. அநாதை ஆஸ்ரமத்துக்கு என துணிகளைச் சேகரித்துச் சென்ற அந்த ஆணும், பெண்ணும்தான் அங்கே பழைய துணிகளைப் போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கோ மனது கேட்காமல், இப்படி ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே என்று கேட்டுவிட்டேன். தெரியாமல் இப்படிச் செய்துவிட்டோம், மன்னிச்சுடுங்க சார் என்று சொல்லிவிட்டு துணிகளைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்கள். இப்போதெல்லாம் யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லை!''  

- வேலு, திருவள்ளூர்.

என் பணம்; என் அனுபவம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு