பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் வளமே!

தருமபுரி மாவட்டம் பெரும்பாலை கிராமத்திலிருந்து நிதி ஆலோசனை கேட்டு வந்திருந்தார் 34 வயதாகும் கே.ரமேஷ். தேவையான விவரங்களை அவரே ஆர்வமாக முன்வந்து தெரிவித்தார்.

இனி எல்லாம் வளமே!

குடும்ப விவரம்!

##~##
கே.ரமேஷ் - அரசுப் பள்ளி ஆசிரியர். மாதச் சம்பளம் 25,000 ரூபாய். பிடித்தம் போக 22,200 ரூபாய்.

• காவ்யா (வயது 26) - எம்.காம், எம்.பில். பட்டதாரி. இல்லத்தரசி. வங்கி வேலை அல்லது கல்லூரி விரிவுரையாளர் வேலைக்காக முயற்சித்து வருகிறார். வேலை கிடைக்கும்பட்சத்தில் இவர் எதிர்பார்க்கும் சம்பளம் மாதம் 25,000 ரூபாய்.

• தேஷிகா - இரண்டு வயது மகள்.

• காவப்பன் (ரமேஷின் அப்பா) - வயது 57 - பெரும்பாலையில் உரக்கடை உரிமையாளர். செலவுகள் போக மாத வருமானம் ரூ.20,000  கமலா (ரமேஷின் தாய்) - இல்லத்தரசி.

இனி எல்லாம் வளமே!
இனி எல்லாம் வளமே!

சேமிப்பு, முதலீடு!

• தலா ஒரு லட்சம் ரூபாய் இரண்டு சீட்டுகளில், சீட்டுத் தொகை மாதம் தலா ரூ.5,000; இரண்டும் 20 மாதச் சீட்டு, ஒரு சீட்டு 17 மாதங்கள் முடிந்திருக்கிறது; மற்றொரு சீட்டு 13 மாதங்கள் முடிந்திருக்கிறது.

• தந்தையின் பெயரிலும், தன் பெயரிலும் மாதம் ரூ.500 ஆர்.டி. போட்டு வருகிறார். இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கிறது.

• தலா 1,000 ரூபாய் வீதம் இரண்டு தங்க நகைச் சீட்டு. ஒரு சீட்டு 13 மாதம் முடிந்திருக்கிறது; மற்றொன்று 10 மாதம் முடிந்திருக்கிறது.

• மியூச்சுவல் ஃபண்ட் - சுந்தரம் கேப்பக்ஸ் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்  (மாதம் 500 ரூபாய்), எஸ்.பி.ஐ. கான்ட்ரா ஃபண்ட் (மாதம் 500 ரூபாய்), ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங் (மாதம் 1,000 ரூபாய்), யூ.டி.ஐ. இன்ஃப்ரா - ஒருமுறை முதலீட்டுத் தொகை 10,000 ரூபாய்.

இனி எல்லாம் வளமே!

இன்ஷூரன்ஸ் விவரம்!

போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் உள்பட தன் பெயரில் நான்கும், மனைவி பெயரில் ஒன்றும் என மொத்தம் ஐந்து பாலிசிகளை எடுத்திருக்கிறார். மொத்தம் மாத பிரீமியமாக 1,350 ரூபாய் செலுத்தி வருகிறார். அனைத்து பாலிசிகளும் அவரவர்களின் 55-வது வயதில் முடியும்படியாக இருக்கிறது.

இனி எல்லாம் வளமே!

பங்குச் சந்தை முதலீடு!

இதுவரை பங்குச் சந்தையில் 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்து வைத்திருக்கிறார்.

இனி எல்லாம் வளமே!

எதிர்கால தேவைகள்!

இனி எல்லாம் வளமே!

• மகளை பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க வைக்க 16 வருடங்கள் கழித்து, அன்றைய மதிப்பில் 30 லட்சம் ரூபாய் எதிர்பார்க்கிறார்.

• மகளுக்கு 25 வயதில் திருமணம் செய்து வைக்க ஒரு கோடி ரூபாய் எதிர்பார்க்கிறார்.

• ஓய்வுக் காலத்திற்கு இன்னும் 24 வருடங்கள் பாக்கி இருக்கிறது. மாதம் ஓரளவுக்கு பென்ஷன் கிடைக்கும். அதுபோக மாதம் 30,000 ரூபாய் வருமானம் வருவதற்கு முதலீடு செய்ய வேண்டும்.

• பெற்றோர்களுக்கு மருத்துவம் சார்ந்த தேவைகளை ஈடுகட்ட ஏதாவது செய்யவேண்டும்.

• மனைவிக்கு வேலை கிடைத்து ஓராண்டிற்குள் அவரது சொந்த ஊரான சேலத்தில் நிலம் வாங்க 22 லட்சம் ரூபாய் தேவை. நிலம் வாங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வீடு கட்ட 30 லட்சம் ரூபாய் தேவை.

மேற்கண்ட விவரங்களைக் கொண்டு நிதி ஆலோசனை சொன்னார் நிதி ஆலோசகர் ஆர்.செந்தில்.

''முதலில் இவர் செய்ய வேண்டியது, அவசரத் தேவைக்கான தொகையைச் சேமித்து வைப்பதுதான். ஆறு மாத குடும்பச் செலவுக்குத் தேவைப்படும் 72,000 ரூபாய் தொகையை லிக்விட் ஃபண்டுகள் அல்லது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் போட்டு வைக்கலாம். இதை வேறெந்த தேவைக்காகவும் எடுக்கக் கூடாது'' என்றவர், இன்ஷூரன்ஸ் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை விவரித்தார்.

இனி எல்லாம் வளமே!
இனி எல்லாம் வளமே!

இன்ஷூரன்ஸ்!

ரமேஷிடம் மொத்தம் 60 லட்சம் ரூபாய் கவரேஜுடன் பாலிசி இருப்பது அவசியம். ஆனால், இப்போது அவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்ஷூரன்ஸ் மட்டுமே இருக்கிறது. இன்னும் 55 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 12,000 ரூபாய். அரசு ஊழியர் என்பதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து நான்கு லட்சம் ரூபாய்க்கு ஏற்கெனவே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறது.

மேலும், தனியாக மூன்று லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பது நல்லது. இதற்கு வருட பிரீமியம் 8,000 ரூபாய். தாய், தந்தையரின் மருத்துவச் செலவுக்காக, அவர்களின் பெயரில் தலா 5 லட்சம் கவரேஜ் கொண்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதும் அவசியம். இதற்கு வருட பிரீமியம் 36,000 ரூபாய்.

இனி எல்லாம் வளமே!

மகளின் கல்விக்கு!

மகளின் உயர்கல்விக்கு 30 லட்சம் ரூபாய் தேவை என்றார். அதற்கு எதிர்காலத் தேவைக்காக மீதமிருக்கும் தொகையிலிருந்து மாதம் 4,700 ரூபாயை எடுத்து 2028-ம் ஆண்டு வரை முதலீடு (எதிர்பார்க்கும் வருமானம் குறைந்தபட்சம் 13%) செய்து வரவேண்டும். முதலீட்டு முடிவில் எதிர்பார்த்த தொகை கிடைத்துவிடும். முதலீட்டை 80% ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளிலும், 20% கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் செய்ய வேண்டும்.

இனி எல்லாம் வளமே!
இனி எல்லாம் வளமே!

மகளின் திருமணம்!

மகளின் திருமணத்துக்கு 2034-ல் ஒரு கோடி ரூபாய் தேவை என்றார். இதற்கு இன்றிலிருந்து மாதம் 5,100 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் (எதிர்பார்க்கும் வருமானம் குறைந்தபட்சம் 13%). தொடர்ந்து 23 ஆண்டுகள் முதலீடு செய்தால் முதலீட்டு முதிர்வின்போது எதிர்பார்த்த தொகை கிடைத்துவிடும். முதலீடு 80% ஈக்விட்டியிலும் 20% கோல்டு இ.டி.எஃப். ஃபண்டுகளிலும் செய்யும்படியாக இருப்பது அவசியம்.

இனி எல்லாம் வளமே!

வீடு கட்ட!

மனைவிக்கு இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள்ளாக வேலை கிடைத்துவிடும் என்கிறார். எதிர்பார்க்கும் சம்பளம் 25,000 ரூபாய். வேலை கிடைத்து ஒரு வருடத்தில் வீட்டு மனை வாங்க 22 லட்சம் ரூபாயும், மனை வாங்கிய அடுத்த ஐந்தாண்டுகளில் வீடு கட்ட 30 லட்சம் ரூபாயும் தேவை என்றார்.

தற்போது சேமித்து வரும் சீட்டிலிருந்து கிடைக்கும் தொகை இரண்டு லட்ச ரூபாயுடன் அதற்காக மாதம் சேமித்து வந்த 10,000 ரூபாயை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எஃப்.டி. அல்லது ஆர்.டி-ல் முதலீடு செய்ய  வேண்டும். இதன் மூலம் 4.4 லட்ச ரூபாய் கிடைக்கும். இதை முன்பணமாகப் பயன்படுத்தி மீதி தேவைப்படும் தொகைக்கு (17.6 லட்ச ரூபாய்) வங்கியில் கடன் வாங்கிக்கொள்ளலாம். இதற்கு மாதம் 18,000 ரூபாய் வீதம் 15 வருடங்களுக்கு இ.எம்.ஐ. கட்ட வேண்டும்.

இந்த இ.எம்.ஐ. தொகையை மனைவியின் சம்பளத்திலிருந்து கட்டலாம்.

மனைவியின் சம்பளத்தில் மீதி 7,000 ரூபாய் பாக்கி இருக்கும். இதனுடன் மனை வாங்க தேவைப்படும் முன்பணத்திற்காக சேமித்துவந்த 10,000 ரூபாயையும் சேர்த்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 13% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஃபண்டுகளில் முதலீடு செய்தால் முடிவில் 11 லட்சம் ரூபாய் கிடைக்கும். ரமேஷ் தன் பெயரில் 19 லட்சம் ரூபாய்க்கு வங்கியில் கடன் வாங்கிக்கொள்ளலாம். இதற்கு மாத இ.எம்.ஐ. தோராயமாக 20,000 ரூபாய் 15 வருடங்களுக்கு கட்ட வேண்டியிருக்கும். வீடு கட்ட முதலீடு செய்து வந்த 17,000 ரூபாயுடன் அன்றைய நிலையில் வாங்கும் சம்பளத்தில் இருந்து 3,000 ரூபாயைச் சேர்த்து இ.எம்.ஐ. கட்டி முடிக்கலாம்.

இனி எல்லாம் வளமே!
இனி எல்லாம் வளமே!

ஓய்வுக் காலம்!

ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 26 ஆண்டுகள் உள்ளது. அப்போது மாதம் 61,000 ரூபாய் ரமேஷிற்குத் தேவை. அதற்கு 1.30 கோடி ரூபாய் இருக்க வேண்டும். இன்றிலிருந்து 13% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் 4,500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 26 வருடத்தில் 90 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஓய்வு பெறும்போது பி.எஃப். தொகை 40 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம், 1.30 கோடி ரூபாயை எளிதாக இவர் சம்பாதித்துவிடலாம். இதற்கு ஈக்விட்டியில் 70 சதவிகிதமும் கடன் (டெப்ட்) திட்டங்களில் 30 சதவிகிதமும் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதம் 61,000 ரூபாய் கிடைக்கும். இந்த தொகையைப் பயன்படுத்தி ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம். வாழ்த்துக்கள்!

- செ.கார்த்திகேயன்,
படங்கள்: க.தனசேகரன், ஜெ.வேங்கடராஜ்.

இனி எல்லாம் வளமே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு