Published:Updated:

கொட்டி கொடுக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள்!

கொட்டி கொடுக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள்!

கொட்டி கொடுக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள்!

அதிக டிவிடெண்ட் யீல்ட் தரும் பங்குகள் நமக்குத் தெரியும். ஆனால், அதிக டிவிடெண்ட் யீல்ட் தரும் ஈக்விட்டி ஃபண்டுகளைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. நிறுவனங்கள் லாபத்தில் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாகத் தருவது புரிகிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் எப்படி  டிவிடெண்டை தருகின்றன?

##~##
டன் சார்ந்த திட்டங்கள் தாங்கள் வைத்திருக்கும் உபகரணங்கள் ஈட்டும் வட்டியைப் பயன்படுத்தி டிவிடெண்ட் தருகின்றன. பங்கு சார்ந்த திட்டங்கள் தாங்கள் கொண்டிருக்கும் பங்குகளின் விலை உயர்வால் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு டிவிடெண்டை வழங்குகின்றன.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் டிவிடெண்டை வழங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. வழங்குவோம் என்ற கேரன்டியையும் மியூச்சுவல் ஃபண்டுகள் தராது. ஆனால், ஒரு திட்டத்தின் கடந்த கால வரலாற்றை வைத்து, நாம் அத்திட்டங்கள் எதிர்காலத்தில் எவ்வளவு டிவிடெண்ட் தரும் என்பதை ஓரளவு கணிக்கலாம்.

என்ன நன்மை?

இந்த திட்டங்களால் முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை? ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்கள் தரும் டிவிடெண்டைப் பெறும் முதலீட்டாளர் வரி எதுவும் செலுத்த வேண்டாம். உதாரணத்திற்கு, நீங்கள் உச்ச வரி வரம்பில் இருந்து, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவு கேஷ் ஃப்ளோ தேவைப்படுகிறது என்றால், நிரந்தர வருமானம் தரக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்யலாம் அல்லது இதுவரை டிவிடெண்ட் தந்துள்ள ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியாக 10% கிடைத்தால், நீங்கள் உச்சவரி வரம்பில் இருப்பதால் அந்த வட்டி வருமானத்திற்கு 30.9%-ஐ வரியாகச் செலுத்த வேண்டி வரும். அதே சமயத்தில், நீங்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து 10% டிவிடெண்ட் கிடைத்தால் அந்த வருமானத்திற்கு தற்போது எந்த வரியும் இல்லை.

எதிர்காலத்தில் புதிய வரிக் கொள்கையை அமல்படுத்தும்போது இந்த டிவிடெண்டிற்கு 5% வரி விதிக்கலாம் என்கிறார்கள். அவ்வாறு இருந்தாலும் அந்த வரி வைப்பு நிதி வட்டிக்கான வரி 30.9 சதவிகிதத்தைவிட மிக மிகக் குறைவு. மேலும், நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நீங்கள் முதலீடு செய்த அசலின் மதிப்பு கூடுவதற்கும் வாய்ப்புண்டு. (குறுகிய காலத்தில், சந்தை வெகுவாக குறையும்பட்சத்தில், அசலின் மதிப்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதையும் மறுக்க முடியாது!)

Click to Enlarge
கொட்டி கொடுக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள்!

யாருக்கு உகந்தது?

நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, அதிக வருமான வரம்பில் இருந்து ரெகுலர் கேஷ் ஃப்ளோவை எதிர்பார்க்கும் இளைஞர்கள்/ மூத்த குடிமக்கள் (ரிஸ்க் எடுக்க முடியும் என்பவர்கள்) போன்ற அனைவருக்கும் இத்திட்டம் கனகச்சிதமாகப் பொருந்தும். இன்னும் சில ஆண்டுகளில் ரிட்டையர்ட் ஆக உள்ளவர்கள் தங்களின் மாதாந்திர தேவைக்கு மேல் உள்ள கார்ப்பஸை இத்திட்டங்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.  

ஆனால், மாதந்தோறும்/ வருடந்தோறும் தினசரி வாழ்விற்கு கட்டாயமாகத் தேவைப்படும் பணத்தை இத்திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்! அதற்கு மேல் நீங்கள் சற்று ரிஸ்க் எடுக்கலாம் என்று நினைக்கிற பணத்தை மட்டுமே இத்திட்டங்களில் முதலீடு செய்யலாம்!

டிவிடெண்ட் + கேப்பிட்டல் அப்ரிசியேஷன்!

டிவிடெண்டை ரெகுலராகப் பெற்றுக்கொண்டு சற்று கேப்பிட்டல் அப்ரிசியேஷனும் கிடைக்க எந்த வகையான யுக்தியை கையாளலாம் என்பதைப் பார்ப்போம். பங்கு சார்ந்த திட்டங்களில் டிவிடெண்ட் நன்கு  கிடைக்க, சந்தை குறைவாக இருக்கும்போது மொத்தமாக வாங்கிவிடுவது நல்லது. மொத்தமாக வாங்குவதில் உள்ள ரிஸ்க்கை குறைக்க எஸ்.டி.பி. முறையை உபயோகிக்கலாம்.

ரிட்டையர்மென்ட் ஆவதற்கு சில ஆண்டுகள் உள்ளவர்கள் எஸ்.ஐ.பி. முறையில் ஈக்விட்டி ஃபண்டுகளில் டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்யலாம். கேஷ் ஃப்ளோவிற்காகவே இந்த ஃபண்டுகளில் நாம் செல்வதால், டிவிடெண்ட் பேஅவுட் ஆப்ஷனில் செல்வது நலம்.

இனி முதலீட்டிற்கு உகந்தது என கருதும் நல்ல டிவிடெண்ட் யீல்ட் திட்டங்கள் சிலவற்றை, பல ஃபில்டர்களுக்குப் பிறகு இங்கே தந்துள்ளோம். இதற்கு சந்தையில் உள்ள லார்ஜ் கேப், மல்ட்டி கேப், ஸ்மால் அண்ட் மிட் கேப் மற்றும் பேலன்ஸ்டு திட்டங்கள் அனைத்தையும் (269) ஆய்விற்காக எடுத்துக்கொண்டோம். அவற்றில் கீழ்க்கண்ட ஃபில்டர்களை அப்ளை செய்தோம்.

1. பத்து வருடங்களுக்கு மேல் நடைமுறையில் இருந்துள்ள திட்டங்களாக இருக்க வேண்டும்.

2. ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும். 3. கடந்த ஐந்து ஆண்டு வருமானம், நிஃப்டி 50 வருமானத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும். இதன்படி 17 ஃபண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதற்குப் பிறகு, கடந்த 10 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் விடாமல் டிவிடெண்ட் கொடுத்து வந்த திட்டங்களை ஃபில்டர் செய்ததில் 9 ஃபண்டுகள் அடிபட்டு 8 ஃபண்டுகளே எஞ்சியது. இதில் ஆச்சரியமான  விஷயம், ஜாம்பவான்களாகிய இரு திட்டங்கள் - ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஆகிய இரண்டு திட்டங்களும் அடிபட்டதுதான். 2005-ம் ஆண்டு இந்த இரண்டு ஃபண்டுகளும் டிவிடெண்டை தராமல் விட்டுள்ளன. இதே குழுமத்தைச் சார்ந்த ஹெச்.டி.எஃப்.சி. குரோத் ஃபண்ட் 2008-ம் ஆண்டு ஒருமுறை மட்டும் டிவிடெண்டை ஸ்கிப் செய்துள்ளது. ஆனால், யூ.டி.ஐ. மாஸ்டர்ஷேர் கடந்த 25 வருடங்களாக ஒவ்வொரு வருஷமும் விடாமல், கூடவோ குறையவோ, டிவிடெண்டை வழங்கியுள்ளது. இந்த 25 வருடத்தில் சந்தை எவ்வளவோ ஏற்ற இறக்கங்களைக் கண்டுவிட்டது.

கொட்டி கொடுக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள்!

மேலே ஃபில்டர் செய்த எட்டு ஃபண்டுகளில் எஸ்.பி.ஐ. மேக்னம் கான்ட்ரா ஃபண்டின் 2003-ம் ஆண்டில் உள்ள எக்ஸ் டிவிடெண்ட் என்.ஏ.வி. கிடைக்கவில்லை. ஆதலால் ஆய்விலிருந்து அந்த ஃபண்டை எடுத்துவிட்டோம். எஞ்சிய 7 ஃபண்டுகளில் நாம் போட்ட அடுத்த ஃபில்டர், 2003-ம் ஆண்டு போட்ட கேப்பிட்டல் இன்றைய தினத்தில் குறைந்திருக்கக் கூடாது என்பதுதான். அந்த ஃபில்டரில் ரிலையன்ஸ் விஷன் ஃபண்ட் அடிபட்டுவிட்டது. 2003-ம் ஆண்டு அதன் எக்ஸ் டிவிடெண்ட் என்.ஏ.வி. ரூ.42.02. இன்றோ அதன் என்.ஏ.வி. ரூ.36.89. மீதியுள்ள ஆறு ஃபண்டுகள் மேலே உள்ள அட்டவணையில் தந்திருக்கிறேன்.

ஒவ்வொரு ஃபண்டிற்கும், அந்த ஃபண்டுகள் 2003-ம் ஆண்டு கடைசி தடவையாக டிவிடெண்ட் தந்தபிறகு உள்ள என்.ஏ.வி-யை நமது கணக்கிற்கு எடுத்துக்கொண்டோம். அந்த என்.ஏ.வி-யைக் கொண்டு டிவிடெண்ட் யீல்டை கணக்கிட்டோம். பிறகு அந்த யீல்டின் கடந்த 10 ஆண்டு கால ஆவரேஜை கணக்கிட்டோம். கேப்பிட்டல் அப்ரிசியேஷன் ஆண்டிற்கு எவ்வளவு தந்துள்ளது என்பதையும் கணக்கிட்டு,  இந்த இரண்டையும் சேர்த்து ஆண்டிற்கு உள்ள மொத்த ரிட்டர்னை கணக்கிட்டோம்.

கடந்த 10 ஆண்டுகளில் சந்தை ஒரு பெரிய உச்சத்தையும் தாழ்வையும் கண்டுவிட்டது. இந்த பெரிய ஏற்ற இறக்கத்திலேயே ஆண்டிற்கு 26% முதல் 39% வரை வருமான வரி இல்லாத வருமானத்தை இந்த ஆறு ஃபண்டுகளும் தந்துள்ளன. இந்த வருமானத்தை நிரந்தர வருமானங்கள் தரும் எந்த திட்டங்களும் தந்திருக்க முடியாது என்று அடித்துக் கூறலாம்.  

டிவிடெண்ட் யீல்டும் டீஸன்டாக இருக்க வேண்டும்; அதே சமயத்தில், கேப்பிட்டல் அப்ரிசியேஷனும் எனக்கு மிக முக்கியம் என எண்ணுபவர்கள் ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் மற்றும் யூ.டி.ஐ. மாஸ்டர் ஷேர் ஃபண்டுகளை நோக்கிச் செல்லலாம். ஃபிராங்க்ளின் பிரைமா பிளஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஆகிய ஃபண்டுகளும் தொடர்ந்து நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. ரிலையன்ஸ் குரோத் இந்த ஆண்டில் குறைந்த யீல்டை கொடுத்துள்ளது.

இந்த ஆய்வு ஒரு முடிவல்ல. நீங்களும் இது போல ஆய்வு செய்து, நல்ல திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.  

குறிப்பு: பங்கு சார்ந்த ஃபண்டுகளில் சந்தை ரிஸ்க் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முதலீட்டு முடிவை எடுக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு