கடந்த வாரத்தின் கடைசியில் இணையதளத்தில் உலா வந்த ஒரு கடிதம் பலரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது. செல்போன் உலகின் உச்சத்தை எட்டிய நோக்கியா நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் ஸ்டீபன் எழுதியதாக வெளியான கடிதம்தான் அது. தனது கம்பெனியின் இன்றைய நிலை குறித்து தனது ஊழியர்களுக்கு பட்டவர்த்தனமாக அந்த கடிதத்தில் அவர் எடுத்துச் சொல்லி இருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

. கி.ட்டத்தட்ட 77 வரிகளுக்கு நீளும் அந்தக் கடிதத்தில், ''செல்போன் துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம்தான் ராஜா. ஆனால், இன்றோ நம்மை முந்திக் கொண்டு செல்கின்றன வேறு நிறுவனங்கள். எந்தெந்த மார்க்கெட்டில் நாம் முன்னணியில் இருந்தோமோ, அதெல்லாம் இன்று வேறு நிறுவனங்கள் வசம் இருக்கின்றன. மற்ற நிறுவனங்கள் திட்டமிட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் போது நாம் மட்டும் ஒன்றும் செய்யாமலே இருந்துவிட்டோம்!'' என்று எல்லாவற்றையும் புட்டுபுட்டு வைத்திருக்கிறார்..
இந்தக் கடிதத்தை நோக்கியா நிறுவனத்தின் சி.இ.ஓ.தான் எழுதினாரா என்றுகூட சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். அது உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் கவனிக்க வேண்டியது, கடிதத்தை யார் எழுதினார் என்பதல்ல. அந்தக் கடிதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதுதான். நிறுவனம் சந்திக்கும் பிரச்னையை எடுத்துச் சொன்னதோடு நின்றுவிடாமல், அதைத் தீர்ப்பதற்காக அழகான உதாரணத்தைச் சொல்லி ஊழியர்களை அழைத்திருக்கிறார். அந்த உதாரணக் கதை இதுதான்: ஆனால் எல்லோருக்கும் பொருந்தும் கதை!

''நடுக்கடலில் எண்ணெய் எடுக்கும் துரப்பண மேடையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அந்த மேடை தீப்பற்றிக்கொள்கிறது. மேடை முழுக்க பரவிவரும் நெருப்பு... கீழேயோ அட்லாண்டிக் கடலின் உடலை உறைய வைத்துவிடும் கடல் நீர். முடிவு எடுத்தாக வேண்டிய நிலை. மேடையிலேயே நின்றுவிடுவது என்று முடிவெடுத்தால் இன்னும் சில நொடிகள் மட்டுமே நிற்க முடியும். கீழே குதித்தால் ரத்தமே உறைந்துவிடும் ஜில் தண்ணீர். சாதாரணமாக அதில் யாரும் குதிக்க மாட்டார்கள்.

ஆனால் நெருங்கி வந்துவிட்ட நெருப்பு அவரை நீரில் குதிக்கும் முடிவை எடுக்க வைத்துவிட்டது. கீழே குதித்து பிறகு காப்பாற்றப்பட்ட அவர், சூழல்தான் தன்னுடைய அடிப்படையான நடத்தையை மாற்றியது என்று கூறினார். நெருப்புப் பற்றிக்கொண்ட மேடையில் இப்போது நாம் இருக்கிறோம். ஒன்று, நாம் தீக்கு இறையாக வேண்டும். இல்லாவிட்டால் பனிக்கட்டி போல உறைந்திருக்கும் கடலில் குதிக்க வேண்டும். நாம் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாமே முடிவெடுப்போம்!''