Published:Updated:

என் பணம்; என் அனுபவம்!

ஓவியங்கள்: முத்து

என் பணம்; என் அனுபவம்!

ஓவியங்கள்: முத்து

Published:Updated:

வாசகர் அனுபவம்

சோம்பல் பட்டால் தொல்லைதான்!

என் பணம்; என் அனுபவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''புதிதாக கட்டும்  வீட்டு வேலைகளுக்காக தற்காலிக மின் இணைப்பைப் பெற்றிருந்தேன். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின் இணைப்பை பணம் கட்டி நீட்டிப்பு செய்ய வேண்டும். மார்பிள் பாலீஷ் போடும் வேலை மட்டுமே பாக்கி இருந்தது. தற்காலிக மின் இணைப்பை நீட்டிக்க வேண்டிய நாள் நெருக்கத்தில் இருந்தது. மின் வாரிய அலுவலகம் வீட்டிலிருந்து தொலைவில் இருந்ததால் போக சோம்பல் பட்டுக்கொண்டு, வேலைக்கு வந்த எலெக்ட்ரீஷியனிடம்  பணத்தைக் கொடுத்து அனுப்பினேன். போனவர் போனவர்தான். கூலி அனைத்தையும் அவருக்கு செட்டில் செய்து விட்டதால், அவர் திரும்ப வரவே இல்லை.  மின் இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். அப்போதுதான் அவர் பணம் கட்டாத விவரமே எனக்கு தெரிய வந்தது. புதிதாக மீண்டும் மின் இணைப்பைப் பெறுவது சாமானிய வேலையில்லையே! பாலீஷ் போடும் வேலையை ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்துச் செய்து முடித்தேன். வீடு கட்டுபவர்கள் சிரமத்தைப் பார்க்காமல் நேரில் செல்வதுதான் நல்லது.''

-இரா.பிரபாகரன், காரைக்கால்.

சர்வீஸ் சென்டர், ஜாக்கிரதை!

என் பணம்; என் அனுபவம்!

''அண்மையில் எனது விலையுயர்ந்த செல்போன் பழுதடைந்துவிட்டது. கம்பெனி சர்வீஸ் சென்டரில் பழுது பார்க்கச் சென்றேன். குறிப்பிட்ட தொகையை சர்வீஸ் சார்ஜாகப் பெற்று, பழுதை சரிசெய்து தந்தார்கள். ஆனால், மீண்டும் பழுது ஏற்பட்டதால் திரும்பவும் அதே சர்வீஸ் சென்டருக்குச் சென்றேன். அவர்களோ மதர் போர்டில் கோளாறு, மும்பைக்கு அனுப்பணும் என்று சொல்லி, ஒரு பெரிய தொகையைக் கேட்டார்கள். பிறகு எனக்கு தெரிந்த ஒரு கடையில் கொடுத்து பழுது பார்க்கச் சொன்னேன். அந்த நபரோ கீபேட்-ல்தான் பழுது எனக் கூறி, அதை மட்டும் மாற்றிக்கொடுத்து 120 ரூபாய் பெற்றுக்கொண்டார். எவ்வித பழுதுமில்லாமல் நன்றாக வேலை செய்து வருகிறது என் செல்போன். என்னதான் கம்பெனி சர்வீஸ் சென்டராக இருந்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பழுதை சரிசெய்ய கொடுப்பது நல்லது.

-ஜோஸப்பின் சார்லஸ், கோவை.

வளர்த்த கடா..!

என் பணம்; என் அனுபவம்!

''எனக்கு திருமண வயதில் பெண் இருக்கிறாள். அவளை என் மனைவியின் அண்ணன் பையனுக்குக் கொடுக்க முடிவு செய்தோம். அவர்கள் ஏழ்மையான குடும்பம் என்பதால் மணமகனை நல்ல நிலைக்குக் கொண்டுவந்து, பிறகு திருமணம் செய்யலாம் என்று நினைத்தேன். அவருக்கு விவசாயம் தெரியும் என்பதால் ஒரு டிராக்டர் வாங்க முடிவு செய்தேன். நண்பர்களிடம் நகையை வாங்கி வங்கியில் வைத்து, டிராக்டர் வாங்கி கொடுத்தேன். அவரும் அதைக்கொண்டு வாழ்வில் முன்னேறிய பிறகு, என் மகளை மணக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். வளர்த்த கடா மார்பில் முட்டியது. என் பணத்தைக் கேட்டாலும் தரமுடியாது என்றார். என் நண்பர்கள் நகையைக் கேட்க, நான் திண்டாடிப் போனேன். அப்போதுதான் நகையை அவர் பெயரில் வைத்து பணம் வாங்கியது ஞாபகம் வந்தது. உடனே வங்கியிடம் நடந்ததைக் கூறி, வங்கி மூலம் அவரிடமிருந்து பணத்தைப் பெற்று நகையை மீட்டுத் தந்தேன். தீர்மானிக்க முடியாத காரியங்களில் இறங்கி அவதிப்பட்ட என் அனுபவம் ஒரு பாடம்!''

-டி.கோவிந்தராஜ், கடலூர்.

பிணம் தின்னி கழுகு!

என் பணம்; என் அனுபவம்!

''சென்ற வருடம் என் உறவினர் ஒருவர் விபத்தில் மரணமடைந்தார். உடலைப் பெற்றுக்கொள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே நின்றிருந்தோம். அப்போது அங்கு வந்த ஒரு கம்பவுன்டர், 'இன்னும் நான்கு பிரேதங்கள் பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகுதான் உங்க உறவினரின் பிரேத பரிசோதனை நடக்கும். அது தவிர, ஆஸ்பத்திரியில் டெட்டால், பஞ்சு, பிணத்தைச் சுற்ற காடா துணி போன்றவைகள் பற்றாக்குறையாக உள்ளது. இதையெல்லாம் வாங்க ஐநூறு ரூபாயும், உங்கள் உறவினரின் பிரேதத்தை முதலில் பரிசோதனை செய்ய ஐநூறு ரூபாயும் கொடுத்தால் உடனே காரியம் ஆகும்’ என்றார். வேறு வழியில்லாமல் நான் ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன். வெகுநேரமாகியும் உறவினரின் உடல் கிடைக்காததால் கம்பவுன்டரைத் தேடி பிணவறைக்குச் சென்றால், உறவினரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது. கேட்டால் வரிசைப்படிதான் பரிசோதனை நடக்கும் என்றார்கள். பிறகுதான், கம்பவுன்டர் உடை அணிந்து வந்து பிணம் தின்னி கழுகு ஒருவன் என்னிடம் பணத்தை அபகரித்து சென்றுவிட்டதை உணர்ந்தேன்.''

-சுந்தர்சுந்தரி, கோவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism