Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

பானுமதி அருணாசலம்

அக்ரி கமாடிட்டி!

பானுமதி அருணாசலம்

Published:Updated:

மிளகு (PEPPER)

##~##

 அதிக வரத்து மற்றும் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் மிளகு விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. ஃப்யூச்சர் சந்தையில் 1,000 ரூபாய் விலை குறைந்து வர்த்தகமானது. மந்தமான ஏற்றுமதித் தேவை மற்றும் செயற்கையாக விலை உயர்த்தியது பற்றியும் ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் விசாரணை நடத்தி வருவதால் வர்த்தகர்கள் மிளகை வாங்க பயந்தனர். என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் மிளகு ஜனவரி கான்ட்ராக்ட் இன்னும் பட்டியலிடப்படவில்லை. 2013 ஜனவரி 5-ம் தேதி டிசம்பர் கான்ட்ராக்ட் 4,848 டன் மிளகு டெலிவரி-ஆக உள்ளது என என்.சி.டி.இ.எக்ஸ். தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய மிளகின் விலை குறைந்து வருவதாலும் வரும் வாரத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜீரா (JEERA)

 எக்ஸ்சேஞ்ச் குடோன்களில் ஜீரா அதிகளவு கையிருப்பில் இருந்ததாலும், தேவை குறைவு காரணமாகவும் ஜீரா விலை குறைந்து வர்த்தகமானது. என்.சி.டி.இ.எக்ஸ். குடோன்களில் 2958 டன் ஜீரா டிசம்பர் 5-ம் தேதியும், 5,359 டன் ஜனவரி 5-ம் தேதியும் எக்ஸ்பைரி-ஆக உள்ளதாக எக்ஸ்சேஞ்ச் வட்டாரத் தகவல்கள்

அக்ரி கமாடிட்டி!

தெரிவிக்கின்றன. தேவை குறையவும், வரத்து அதிகமாக இருந்ததும் ஜீரா விலை குறைவுக்குக் காரணமாக இருந்தது. எனினும், ஏற்றுமதித் தேவை சற்று அதிகரித்த காரணத்தால் ஜீரா விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் ஜீரா ஏற்றுமதி 75 சதவிகிதம் நிறைவு பெற்றுவிட்டது. எனினும், சிரியா மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து  ஜீரா சப்ளை இன்னும் சரியாகவில்லை. வரும் வாரங்களில் ஜீரா விளையும் பகுதிகளில் விளைச்சலை பொறுத்து விலை இருக்கும்.

மஞ்சள் (TURMERIC)

 மஞ்சள் கையிருப்பு அதிகமாக இருப்பதால் விலை குறைந்தே காணப்படும். ஏலத்திற்கான வரத்து குறைந்து  ஈரோடு சந்தைக்கு 5,000 பைகளும், நிஜாமாபாத் சந்தைக்கு 800 பைகளும் வந்தன. விரலி மஞ்சள் நூறு கிலோ 5,200 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் நாட்களில் மஞ்சளுக்கான ஏற்றுமதி ஆர்டர் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, பிப்ரவரி மாதத்தில் புது மஞ்சள் வந்தபிறகு விலை நெருக்கடிக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. குறுகிய கால நோக்கில் பார்க்கும்போது, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் பண்டிகைக் காலம் என்பதால் தேவை அதிகமாக இருக்கும். இதனால் வரும் வாரத்தில் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலக்காய் (CARDAMOM)

 அதிக தேவை காரணமாக ஏலக்காய் விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஏலக்காய் வரத்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலக்காய் அதிகம் விளையும் பகுதிகளில் நல்ல விளைச்சல் இருப்பதாகத் தகவல் வந்ததால் விலை மேலும் உயராமல் தடுக்கப்பட்டது. தின வரத்தாக சென்ற வாரத்தில் 70 டன் ஏலக்காய் சந்தைக்கு வந்தது. ஒரு கிலோ ஏலக்காய் சராசரி விலை 824 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 1,070 ரூபாய்க்கும் விற்பனையானது. கௌதமாலாவில் ஏலக்காய் உற்பத்தி 2012 அக்டோபர் மாதத்தில் 10,000 டன்னை தொட்டது. இது கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இருந்த ஏலக்காய் மொத்த உற்பத்தியைவிட நாற்பது சதவிகிதம் அதிகம். வரும் வாரத்தில் ஏலக்காய் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி!

மிளகாய் (CHILLI)

 மிளகாய் ஏலம் விடும் சந்தைகளில் வரத்து அதிகமானதால் விலை குறைந்து வர்த்தகமானது. எனினும், உள்நாட்டுச் சந்தையில் தேவை ஏற்பட்டதன் காரணமாக விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மிளகாய் உற்பத்திக்கான சீதோஷ்ண நிலை சாதகமாக இருப்பதால் நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் மிளகாய் அறுவடை நடக்கும் என்பதால் இனிவரும் நாட்களில் சப்ளை அதிகரித்து விலை குறையும் என வர்த்தகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. குண்டூர் சந்தைக்குச் சென்ற வாரத்தில் 40,000 பைகள் (ஒரு பை என்பது 45 கிலோ) வரத்து வந்தன. நூறு கிலோ மிளகாய் ஸ்பாட் விலை 5,700 ரூபாய்க்கு வர்த்தகமானது. டிசம்பர் மாதத்தில் புதிய வரத்து வரும் என்பதால் வரும் வாரத்தில் விலை குறைந்தே வர்த்தகமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism