Published:Updated:

திருப்புமுனை

சுவையான வெற்றி!நீரை.மகேந்திரன், படம்: பா.காளிமுத்து.

திருப்புமுனை

சுவையான வெற்றி!நீரை.மகேந்திரன், படம்: பா.காளிமுத்து.

Published:Updated:
##~##

''உசிலம்பட்டி ஒரு காலத்தில் நூற்றுக்கும் அதிகமான பிஸ்கட் தயாரிப்பாளர்கள் புழங்கிய ஊர். ஆனால், இன்று ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருக்கின்றனர். அதிலும், பிராண்டாக நிலைத்தது எங்கள் நிறுவனம் மட்டுமே. 1917-ல் எங்களது பாட்டனார் தொடங்கிய தொழில் என்றாலும், இப்போதும் நாங்கள் நிலைத்து நிற்கக் காரணம், காலத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொண்டதுதான். நாங்களும் வியாபாரத் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், மீண்டும் பழைய நிலைமைக்கு வர நாங்கள் சந்தித்த சவால்கள்தான் எங்களது வெற்றிப் பயணத்தின் திருப்புமுனைகள்.

 தாத்தாவிடமும், அப்பாவிடமும் கூடவே இருந்து தொழிலைக் கற்றுக்கொண்ட நான் 1985-ல் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பை எடுத்துக் கொண்டேன். கிலோ கணக்கில் மாவு வாங்கி, விறகு அடுப்பில் தயாரித்து, உள்ளூர் சந்தைக்கு மட்டுமே சப்ளை என்றிருந்த நிலையை மாற்ற முடிவெடுத்தேன். இதற்கேற்ப நவீன உற்பத்திக் கருவிகள், பேக்கிங் கருவிகளுக்கு மாறினேன். அடுத்ததாக உள்ளூர் சந்தையையும் தாண்டி நமது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்புமுனை

தயாரிப்புகள் செல்ல வேண்டும் என்கிற வேகத்தோடு உழைத்தேன்.

அதே நேரத்தில், பெரிய நிறுவனங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டியிருந்தது. எங்கள் பிஸ்கட்களை குழந்தைகள் விரும்பும்படி சுவையாகத் தயாரித்தோம். புதிய புதிய முயற்சிகள் செய்தேன். தரத்தில் சமரசமில்லாமல் சுவையோடு தந்தால் விலை சற்று அதிகமாக இருந்தாலும் மக்கள் ஆதரவு கிடைத்தது. அரசு வரிச் சலுகை இருந்ததால், எங்களது பிஸ்கட்களின் விலையை குறைத்து விற்றோம். இதன்மூலம், பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடிந்தது. எல்லா வேலைகளையும் முன்னின்று செய்தேன். டெலிவரி வேனில் சென்று ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கியிருக்கிறேன்.

தொழில் சீராகப் போகிறது என்று ஒருபோதும் கவனிக்காமல் இருந்ததில்லை. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருள் என்பதால், எப்போதும் கூடுதல் கவனத்துடன் இருக்கிறேன். என் உழைப்போடு எனக்கு பக்கபலமாக இருந்த என் நட்பு வட்டமும் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. நான்கு தலைமுறைகளாக நீடித்த தொழிலே இல்லை  என்று சொல்வார்கள். அதை மாற்றி, நாங்கள் இன்றும் வெற்றிநடை போடுகிறோம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism