Published:Updated:

வருமான வரி... இழப்பை ஈடுகட்ட ஈஸி வழிகள் !

தொகுப்பு: சி.சரவணன்.

பிரீமியம் ஸ்டோரி
##~##

வீடு, மனை, நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் போன்றவற்றை விற்றது மூலமான மூலதன இழப்பை ஈடுகட்டும் வழிகளை இந்த இதழில் பார்ப்போம்.

மேற்கண்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யும்போது மூலதன இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற நேரங்களில், அந்த இழப்பை இதர மூலதன ஆதாயத்தில் ஈடுகட்ட மற்றும் அடுத்து வரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

மூலதன இழப்பு என்பது குறுகியகால மூலதன இழப்பு, நீண்டகால மூலதன இழப்பு என இரு பிரிவாக இருக்கிறது. குறுகியகால மூலதன இழப்பை குறுகியகால மூலதன ஆதாயம் மற்றும் நீண்டகால மூலதன ஆதாயத்துடன் ஈடுகட்ட முடியும். அதே நேரத்தில், நீண்டகால மூலதன இழப்பை நீண்டகால மூலதன ஆதாயத்துடன் மட்டுமே ஈடுகட்ட முடியும். அதாவது, நீண்டகால மூலதன இழப்பை குறுகியகால மூலதன ஆதாயத்தில் ஈடு செய்ய முடியாது.

வருமான வரி... இழப்பை ஈடுகட்ட ஈஸி வழிகள் !

இந்த இழப்பை அந்த குறிப்பிட்ட ஆண்டில் ஈடுகட்ட முடியவில்லை எனில், அதனை அடுத்துவரும் எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். இந்த மூலதன இழப்பை ஒருவரின் இதர வருமானத்தில் ஈடுகட்ட வருமான வரி சட்டத்தில் இடமில்லை. அதே நேரத்தில், வியாபார இழப்பை மூலதன ஆதாயத்தில் ஈடுகட்ட முடியும். இனி வருமான வரி தொடர்பான சில சந்தேகங்களுக்கு விளக்கத்தைப் பார்க்கலாம்..!

நீண்டகால மூலதன ஆதாய வரி..!

நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் சந்தேகம் இது..! ஒருவருக்கு வேறு இதர வருமானம் இல்லை. அந்த ஆண்டில் நீண்ட கால மூலதன ஆதாயம் கிடைக்கிறது என்றால் எப்படி மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்? என்பதே அந்த சந்தேகம்.

இந்த மூலதன ஆதாயத்தை உங்களின் அடிப்படை வருமான வரம்பிலிருந்து {ஆண் மற்றும் பெண் - ரூ.2 லட்சம், மூத்தக் குடிமக்கள் (60 வயதுக்கு மேல் 80 வயதுக்குள்) - ரூ.2.5 லட்சம், மிகவும் மூத்தக் குடிமக்கள் ரூ.5 லட்சம்} கழித்துக்கொண்டு மீதிக்கு வரி கட்டினால் போதும். அதுவும் வரிச் சலுகை அளிக்கும் முதலீடுகள் மற்றும் செலவுகளை கழித்துக் கொண்டு வருமான வரி கட்டினால் போதும் என வரிச் சட்டம் சலுகை அளிக்கிறது.

இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் மிக எளிதாக விளங்கிவிடும். மூத்தக் குடிமகன் ஒருவரின் இதர வருமானம், நிதி ஆண்டில் ஒரு லட்ச ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு சொத்து ஒன்றை விற்பதன் மூலம் நீண்டகால மூலதன ஆதாயம் அந்த ஆண்டில் 5 லட்ச ரூபாய் வந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவர் வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஆயுள் காப்பீடு பிரீமியம் போன்றவை மூலம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்.

இப்போது இவரின் அடிப்படை வருமான வரி விலக்கு - ரூ.2.5 லட்சம்.

80சி முதலீடு கழிவு ரூ.1 லட்சம்.

இவர் ரூ.2.5 லட்சம் + ரூ.1 லட்சம் = ரூ.3.5 லட்சம் வரிச் சலுகை பெறுகிறார். அந்த வகையில் ரூ.6 லட்சம் - ரூ.3.5 = ரூ.2.5 லட்சத்துக்கு மட்டும் வரி கட்டினால் போதும். அந்த வருமானத்துக்கு நீண்டகால மூலதன ஆதாய வரியான, சிறப்பு வரி (ஸ்பெஷல் ரேட்) விகிதமான 20.6% வரி கட்ட வேண்டும். இதுவே மிகவும் மூத்தக் குடிமகன் என்றால் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை.

வருமான வரி... இழப்பை ஈடுகட்ட ஈஸி வழிகள் !

இதுவே, இதர வருமானம் எதுவும் இல்லாத குடும்ப பெண் ஒருவர் என்று எடுத்துக் கொள்வோம். அவருக்கு 5 லட்ச ரூபாய் நீண்ட கால மூலதன ஆதாயம் வருகிறது. இவர் முதலீடு எதுவும் செய்யவில்லை என்றால், அடிப்படை வருமான வரம்புச் சலுகை 2 லட்ச ரூபாயை கழித்தால் மீதி 3 லட்ச ரூபாய்க்கு, நீண்ட கால மூலதன ஆதாய வரி, சிறப்பு வரி விகிதமான 20.6% கட்டினால் போதும்.

குடும்ப பெண் ஒருவருக்கு மூலதன ஆதாயம் (குறுகியகால மூலதன ஆதாயம் அல்லது நீண்டகால மூலதன ஆதாயம்)

2 லட்ச ரூபாய் கிடைக்கும் நிலை யில் அவருக்கு வேறு எதுவும் வருமானம் இல்லை என்றால் வரி கட்ட வேண்டி இருக்காது.

குறுகியகால மூலதன ஆதாயம்!

நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களுக்கு நீண்டகால மூலதன ஆதாய வரி (பங்கு பரிவர்த்தனை வரி கட்டிய நிலையில்) பூஜ்யம் என்பதால் வரிப் பிரச்னை இல்லை.

குறுகியகால மூலதன ஆதாய வரி 15.45% இருக்கிறது. இந்நிலை யில், இதர வருமானம் எதுவும் இல்லை மற்றும் அடிப்படை வருமான வரம்புக்குள் ஒருவரின் மூலதன ஆதாயம் இருக்கிறது என்றால் வரி கட்ட வேண்டி இருக்காது. அடிப்படை வருமான வரம்புக்கு மேல் இருந்தால் அந்த உச்ச வரம்புத் தொகையை கழித்துக்கொண்டு மீதிக்கு சிறப்பு வரி விகிதமான 15.45% வரி கட்டினால் போதும்.

வருமான வரி... இழப்பை ஈடுகட்ட ஈஸி வழிகள் !

இதையும் ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் சுலபமாகப் புரியும். மூத்தக் குடிமகன் ஒருவருக்கு நடப்பு நிதி ஆண்டில் நிறுவனப் பங்குகளை விற்றதன் மூலமான குறுகியகால மூலதன ஆதாய வரி, 5 லட்ச ரூபாய் (பங்கு பரிவர்த்தனை வரி கட்டிய நிலையில்) கிடைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு இதர வருமானம் ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது. இவர் வருமான வரி பிரிவு 80சி-ன் கீழ் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஆயுள் காப்பீடு பிரீமியம் போன்றவை மூலம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்.

மூத்தக் குடிமகனின் அடிப்படை வருமான வரி விலக்கு - ரூ.2.5 லட்சம்.

80சி முதலீடு கழிவு ரூ.1 லட்சம்.

இவர் ரூ.2.5 லட்சம் + ரூ.1 லட்சம் = ரூ.3.50 லட்சம் வரிச் சலுகை பெறுகிறார். அந்த வகையில் ரூ.6 லட்சம் - ரூ.3.50 லட்சம் = ரூ.2.50 லட்சத்துக்கு மட்டும் சிறப்பு வரி விகிதமான 15.45% வரி கட்டினால் போதும். இதுவே மிகவும் மூத்தக் குடிமகன் என்றால் வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது.

இதுவே, இதர வருமானம் எதுவும் இல்லாத குடும்ப பெண் ஒருவர் என்று எடுத்துக் கொள்வோம். அவருக்கு 5 லட்ச ரூபாய் குறுகியகால மூலதன ஆதாயம் நிறுவனப் பங்குகள் விற்றது மூலம் வருகிறது. இவர் முதலீடு எதுவும் செய்யவில்லை என்றால், அடிப்படை வருமான வரம்புச் சலுகை 2 லட்ச ரூபாயைக் கழித்தால் மீதி 3 லட்ச ரூபாய்க்கு சிறப்பு வரி விகிதமான 15.45% வரி கட்டினால் போதும்.

குடும்ப பெண் ஒருவருக்கு குறுகியகால மூலதன ஆதாயம் 2 லட்ச ரூபாய் கிடைத்தால் அவர்,  வரி கட்ட வேண்டி இருக்காது. இதுவே குறுகியகால மூலதன ஆதாயம், இதர சொத்துகளை (மேலே குறிப்பிட்ட சிறப்பு வரி விகித மூலதன ஆதாயம் தவிர்த்து) விற்றது மூலம் வந்தால், அதிலிருந்து 80சி, 80டி போன்ற பிரிவுகளின் கீழ் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம்.

அதேநேரத்தில், சிறப்பு வரி விகிதத்தின் கீழ் விதிக்கப்படும் நீண்டகாலம் அல்லது குறுகிய மூலதன ஆதாயத்துக்கு அடிப்படை வருமான வரி வரம்பின் கீழ் விலக்கு உண்டு. ஆனால், 80சி, 80டி போன்ற பிரிவின் கீழ் எந்த விலக்கும் கிடைக்காது. மூலதன ஆதாயத்தை முறையாக மறுமுதலீடு செய்து வரியை மிச்சப்படுத்தும் வழிகள் மற்றும் மூலதன இழப்பை ஈடுகட்டும் வழிகளையும் சொல்லி தந்திருக்கிறோம். பயன்படுத்தி பலன் பெறுங்கள்..!

வருமான வரி... இழப்பை ஈடுகட்ட ஈஸி வழிகள் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு