Published:Updated:

60 வயதில் வீட்டுக் கடன் கிடைக்குமா ?

நீரை.மகேந்திரன்,படம்: ஆ.முத்துக்குமார்.

பிரீமியம் ஸ்டோரி
##~##
எனக்கு வயது 60. எனது பெயரில் வீட்டுக் கடன் வாங்கி அதை எனது மகன் திருப்பிச் செலுத்த முடியுமா?

 குமாரசாமி, கிணத்துக்கடவு.

ப: ''பொதுவாக வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த அதிகபட்ச வயது வரம்பு 65 என வங்கிகள் நிர்ணயித்துள்ளன. உங்களுக்கு 60 வயது என்பதால் நீங்கள் மட்டும் கடன் கோரினால் உங்களுக்கு கடன் வழங்குவது தவிர்க்கப்படலாம். சொத்து உங்களது பெயரில் இருக்கும்பட்சத்தில் உங்கள் மகனை 'ஜாயின்ட் ஓனர்ஷிப்’பாகச் சேர்த்து, கடனைத் திருப்பிச் செலுத்துபவர் வரிசையில் உங்கள் மகனை முதல் நபராகக்கொண்டும் கடன் கோரவும். குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு உங்கள் சார்பாக உங்களது மகன் திருப்பிச் செலுத்தும் பொறுப்புடையவர் என்கிற அடிப்படையில், வங்கி கடன் வழங்கும். எனவே, உங்கள் பெயரில் மட்டுமே வீட்டுக் கடனை  வாங்க முடியாது. இருவரது பெயரிலும் கிடைக்கும் கடனை உங்களது மகன் திருப்பிச் செலுத்தலாம்.''

அரசுப் பணியிலிருந்த எனது தாயார் தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்று வீடு வாங்கினார். சமீபத்தில்  பணியிலிருக்கும்போதே அவர் இறந்துவிட்டார். எனது தகப்பனார் ஏற்கெனவே காலமாகிவிட்டார். தற்போது இருவரும் இல்லாத நிலையில் மைனராக இருக்கும் என் நிலையைக் கருத்தில்கொண்டு வங்கி வீட்டுக் கடனை தள்ளுபடி செய்ய வழி இருக்கிறதா?  

சிவநேசன், மதுரை.

60 வயதில் வீட்டுக் கடன் கிடைக்குமா ?

 ''கடனுக்கு ஈடாக சொத்து இருக்கும்போது வாங்கிய கடனை வங்கி தள்ளுபடி செய்யாது. ஆனால், வீட்டுக் கடனுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனமே வீட்டுக் கடன் நிலுவையை வங்கிக்குக் கொடுத்துவிடும். உங்கள் தாயார் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தால் இந்தக் கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த பாலிசி இல்லாதபட்சத்தில் திருப்பி செலுத்தப்படாத கடனுக்கு ஈடாக

சொத்தை வங்கி கையகப்படுத்தும். நீங்கள் மைனராக இருக்கும் காரணத்தால் கடனிலிருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை. ஆனால், சொத்தின் மதிப்பு கடன் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்போது

60 வயதில் வீட்டுக் கடன் கிடைக்குமா ?

சம்பந்தப்பட்ட சொத்தை விற்று நிலுவை கடனை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை உங்களுக்கு வழங்கும். இந்த சொத்து தவிர, உங்களுக்கு வேறு ஆதாரம் இல்லை, எனவே, வங்கி உங்கள் நிலைமையைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டு வங்கிக்கு வழிகாட்டுதல் வாங்கி வந்தால் அதன்படியும் வங்கி நடக்கும்.''

சிபிலில் அதிக ஸ்கோர் எடுத்திருக்கிறேன். இதன் அடிப்படையில் வீட்டுக் கடனுக்கு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதத்திலிருந்து வட்டி விகிதம் குறைத்து தர வாய்ப்பிருக்கிறதா?

- கருப்பசாமி, பொள்ளாச்சி.

 ''சிபில் ரிப்போர்ட்டில் அதிக புள்ளிகள் (ஸ்கோர்) பெறுவது கடன் வாங்கும் தகுதியை உறுதிப்படுத்துவது. மேலும், இவர் வாங்கிய கடனை ஒழுங்காக கட்டுவார் என்பதற்கான நற்பெயருக்கு இதை பயன்படுத்துகிறார்கள். தனிநபர்கள் வாங்கும் வீட்டுக் கடன் உள்ளிட்ட இதர கடன் களுக்கு இதை காரணமாக வைத்து வட்டி விகிதங்களில் சலுகை பெற முடியாது. வட்டி விகிதம் என்பது அனைத்து தனிநபர்களுக்கும் பொதுவானது. அதேநேரத்தில், தொழில் கடனுக்கு சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் வட்டியில் சலுகை கிடைக்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு