Published:Updated:

கமாடிட்டி !

மெட்டல் - ஆயில் அடிப்படை உலோகங்கள்! பானுமதி அருணாசலம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

இந்த வாரம் அடிப்படை உலோகங்கள் எப்படி இருக்குமென சொல்கிறார் வெல்த் டெரிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணன்.

''இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வட்டி விகிதங்கள் குறைப்பு, மானிட்டரி பாலிசி உள்ளிட்டவை வருமென எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல நாட்டு மத்திய வங்கிகளும் மானிட்டரி பாலிசியில் கவனம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவது அடிப்படை உலோகங்களுக்குச் சாதகமானது. மேலும் டெக்னிக்கல்படி, அடிப்படை உலோகங்கள் வாங்க

இது சரியான தருணம்.  அப்படி வாங்கும்போது இந்திய ரூபாயின் மதிப்பையும் கவனிக்கவும்.  

சென்ற வியாழக்கிழமை காப்பர் 0.5 சதவிகிதம் சர்வதேச அளவில் ஏறியபோது ரூபாய் மதிப்பு

1.5 சதவிகிதம் ஏறியது. இதனால் குறைந்த விலை தந்து அடிப்படை உலோகங்களை வாங்க முடிந்தது. ஒரு கிலோ காப்பர் டிசம்பர் மாத கான்ட்ராக்ட் ரூ.430 வரும்போது வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.411 - 414 ஆகவும், இலக்கு விலை ரூ.442 - 450 ஆகவும் கொள்ளவும்.  

கமாடிட்டி !

லெட் ஒரு கிலோ நவம்பர் மாத கான்ட்ராக்ட் ரூ.120-க்கு வரும்போது வாங்கலாம். ரூ.124 இலக்கு விலையாகவும் ரூ.117 ஸ்டாப்லாஸாகவும் கொள்ளலாம். ஜிங்க் ரூ.108-க்கு வரும்போது வாங்கலாம். ரூ.114 இலக்கு விலை. நிக்கல் ரூ.920-950-க்கு வரும்போது வாங்கலாம். ரூ.960-983  இலக்கு விலையாகவும்  ஸ்டாப் லாஸ் ரூ.888-ஆகவும் கொள்ளலாம்.

இது அலுமினியம் வாங்க சிறந்த நேரம். ஒரு கிலோ அலுமினியம் டிசம்பர் மாத கான்ட்ராக்ட் ரூ.109 - 110 ரூபாய்க்கு வாங்கலாம். ரூ.114 - 116க்கு விலை ஏறும். ஸ்டாப் லாஸ் ரூ.107 -ஆகக் கொண்டு வாங்கவும்.''  

தங்கம் !

கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை சென்ற வாரம் புதன்கிழமை குறைந்தது. டெக்னிக்கல்படி தங்க கான்ட்ராக்ட்டை விற்றதும், அமெரிக்க சந்தையில் தங்கம் ஆப்ஷன்ஸ் அண்ட் ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் எக்ஸ்பைரி ஆனதும் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்க காரணம்.

கமாடிட்டி !

கிரீஸ் நாட்டின் கடன் சுமையை 2020-ம் ஆண்டுக்குள் 40 பில்லியன் யூரோவாகக் குறைக்க ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்களும், இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் அமைப்பும் முடிவு செய்துள்ளது. எனினும், எப்படி இந்த இலக்கை எட்ட முடியும் என முதலீட்டாளர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், ரிஸ்க் நிறைந்த முதலீடுகளான பங்குகள், கமாடிட்டிகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்து பாதுகாப்பு முதலீடான அமெரிக்க டாலரில் முதலீடு செய்தனர் முதலீட்டாளர்கள்.

கமாடிட்டி !

தங்கம் மற்றும் வெள்ளியை ரூபாயின் மதிப்பை பொறுத்து வாங்குவது நல்லது. இந்தியா மற்றும் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் நல்லபடியாக வந்தால் ஆசிய பங்குச் சந்தைகள் நன்றாக இருக்கும். இதனால் முதலீட்டாளர்களின் கவனம் பங்குச் சந்தையை நோக்கி இருக்கும். தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

கச்சா எண்ணெய் !

வார ஆரம்பத்தில் விலை குறைந்து வர்த்தகமான கச்சா எண்ணெய், வார இறுதியில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் சப்ளை குறைந்ததால் சற்று அதிகரித்தது. கச்சா எண்ணெய் ஸ்டாக் 3,47,000 பேரல் குறைந்துள்ளதாக எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நிதி நிலைமை மற்றும் கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னை இரண்டும் கச்சா எண்ணெய் யின் விலையில் பிரதிபலித்தது. அமெரிக்காவில் செலவினங்கள் குறைப்பு மற்றும் வரி அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் 600 பில்லியன் டாலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமெரிக்காவில் அமலுக்கு வருகிறது. உலக எண்ணெய் டிமாண்டில் அமெரிக்கா மட்டுமே 22 சதவிகிதம் கொண்டுள்ளது. அங்கு வீடுகள் விற்பனை கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் குறைந்திருப்பதால் வளர்ச்சி குறைந்து வருவது தெரிகிறது.

வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறையவே வாய்ப்புண்டு. டிசம்பர் மாத கான்ட்ராக்ட் ஒரு பேரல் ரூ.4,840-க்கு மேல் வந்தால் மட்டுமே  வாங்கவும். எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் ரூ.4,825-க்கு வியாழனன்று வர்த்தகமானது.

கமாடிட்டி !

இயற்கை எரிவாயு !

அமெரிக்காவில் குளிர் குறையும் என்பதால் விலை குறைந்துள்ளது. இதனால் இதன் கையிருப்பு

8 முதல் 10 பில்லியன் கியூபிக் ஃபீட் குறையும்.  அப்படி குறைந்தால், விலை சற்று அதிகரிக்கும். எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு எம்.எம்.பி.டி.யூ. 206 ரூபாய்க்கு வியாழக்கிழமை மாலை வர்த்தகமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு