Published:Updated:

வருமான வரி - மூலதன ஆதாய வரியைக் கணக்கிடுவது எப்படி ?

தொகுப்பு: சி.சரவணன்.

வருமான வரி - மூலதன ஆதாய வரியைக் கணக்கிடுவது எப்படி ?

தொகுப்பு: சி.சரவணன்.

Published:Updated:
##~##
வெளிநாடு வாழ் இந்தியர்கள்  (என்.ஆர்.ஐ.கள்), முதலீட்டுக்கான தொகையை அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு அனுப்பி, அந்தத் தொகையை ரூபாயாக மாற்றி, அந்தத் தொகையைக் கொண்டு பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் வாங்கி இருந்தால் கீழ்க்கண்ட முறையில் மூலதன ஆதாயம் கணக்கிடப்படும்.  

விற்கும் விலையை எந்த தேதியில் விற்கிறார்களோ, அன்றைய தேதியில் எந்த நாட்டு பணமாக இந்தியாவுக்குள் வந்ததோ, அந்த நாட்டு பண மதிப்புக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல், வாங்கிய விலையை எந்த தேதியில் வாங்கினார்களோ, அந்த தேதியில் அந்த நாட்டு நாணய மதிப்புக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இப்போது மூலதன ஆதாயம் கணக்கிட வேண்டும். உதாரணத்துக்கு, டாலரில் இந்தியாவுக்கு தொகை வந்ததாக வைத்துக்கொள்வோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூலதன ஆதாயம் = விற்ற விலை (டாலரில்) - வாங்கிய விலை (டாலரில்) டாலர் மதிப்பில் கிடைக்கும் மூலதன ஆதாயத்தை, விற்ற தேதியில் உள்ள டாலரின் மதிப்பின் அடிப்படையில் ரூபாயாக மாற்றிக் கொண்டு, அந்தத் தொகைக்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.

வருமான வரி - மூலதன ஆதாய வரியைக் கணக்கிடுவது எப்படி ?

1-4-2011-ல் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 45 ரூபாயாக இருந்தது. அப்போது 1,000 டாலர் என்பது 45,000 ரூபாய். இந்த தேதியில் என்.ஆர்.ஐ. ஒருவர் 45,000 ரூபாய்க்கு (1,000 டாலர்) பங்குகள் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். இந்தப் பங்குகளை 1-10-2102 அன்று 1,10,000 ரூபாய்க்கு விற்பதாக வைத்துக்கொள்வோம். அன்றைக்கு ஒரு டாலரின் இந்திய மதிப்பு 55. அதாவது 2,000 டாலருக்கு விற்றிருப்பார்.

வருமான வரி - மூலதன ஆதாய வரியைக் கணக்கிடுவது எப்படி ?

இங்கே மூலதன ஆதாயம்,  2,000 டாலர் - 1,000 டாலர் = 1,000 டாலர்.

விற்ற தேதியில் டாலரின் மதிப்பு 55 ரூபாய் என்பதால் மூலதன ஆதாயம் ரூபாய் 55,000 ரூபாய். இந்த தொகைக்கு மூலதன ஆதாயம் கட்ட வேண்டும்.

என்.ஆர்.ஐ.களை பொறுத்த வரையில் வீடு, மனை போன்ற அசையாச் சொத்துகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாய சிறப்பு வரி (ஸ்பெஷல் ரேட்) 20.06% கட்ட வேண்டும்.

பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு குறுகியகால மூலதன வரி (பங்கு பரிவர்த்தனை வரி கட்டிய நிலையில்) 15.45% சிறப்பு வரி கட்ட வேண்டும். இவற்றுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி பூஜ்யம். அதே நேரத்தில், பட்டியலிடப்பட்டப் பங்குகள் மீது, பங்குச் சந்தைக்கு வெளியே (ஆஃப் மார்க்கெட்) பரிவர்த்தனை நடந்திருந்தால் நீண்ட கால மூலதன ஆதாய சிறப்பு வரி, பணவீக்க விகித சரிக்கட்டல் இல்லாமல் 10.3% கட்ட வேண்டிவரும்.  பணவீக்க விகிதம் சரிக்கட்டலுக்கு உட்படுத்தினால் சிறப்பு வரி 20.6% கட்ட வேண்டும். இதுவே, ஆஃப் மார்க்கெட் மூலமான பங்கு பரிவர்த்தனையில் குறுகிய கால மூலதன ஆதாயம் என்றால் 15.45% வரி கட்ட வேண்டி இருக்கும்.

பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளிநாட்டில் அந்நியச் செலாவணி

வருமான வரி - மூலதன ஆதாய வரியைக் கணக்கிடுவது எப்படி ?

(ஃபாரெக்ஸ்) மூலம் வாங்கி இருந்தால் பணவீக்க விகிதம் சரிக்கட்டல் (இண்டக்சேஷன்) கிடையாது.

மேலே குறிப்பிட்டவை தவிர, இதர சொத்துக்கள் மீதான மூலதன ஆதாயத்துக்கு இந்தியர்களுக்கு உள்ளது போலவே மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். மேலும், இந்த மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க இன்னொரு வீடு வாங்குதல், மூலதன ஆதாயத்தைக் கேப்பிட்டல் கெயின் பாண்டுகளில் முதலீடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், என்.ஆர்.ஐ.களை பொறுத்த வரை, மேலே குறிப்பிட்ட சிறப்பு வரி விகிதங்களான 10.3%, 15.45% மற்றும் 20.6% வரி விதிக்கப்படும் நிலையில், வேறு எந்த வருமானம் இல்லை என்றாலும் அடிப்படை வருமான வரி விலக்குக் கிடையாது.

இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். என்.ஆர்.ஐ. மூத்தக் குடிமகன் ஒருவருக்கு சொத்து ஒன்றை விற்றது மூலம் 5 லட்ச ரூபாய் நீண்டகால மூலத ஆதாயம் கிடைத்திருக்கிறது. வழக்கமாக, மூத்த குடிமகன் என்.ஆர்.ஐ.ஆக இருந்தால் அவருக்கு மூலதன ஆதாயத்திலிருந்து அடிப்படை வருமான விலக்கு 2.5 லட்ச ரூபாய் அனுமதிக்கப்படும். ஆனால், இங்கே சிறப்பு வரி கட்ட வேண்டியிருப்பதால் அவர் மூலதன ஆதாயம் 5 லட்ச ரூபாயில் அடிப்படை வருமான வரி விலக்கு 2.5 லட்ச ரூபாயைக் கழித்துக்கொள்ள முடியாது. அதாவது, 5 லட்ச ரூபாய்க்கும் 20.6% வரி கட்ட வேண்டிவரும்.

(நிறைவு பெற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism