Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

Published:Updated:

வர்த்தகம்  

மிளகு (PEPPER)

அக்ரி கமாடிட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

டிசம்பர் மாத கான்ட்ராக்ட் தவிர, மற்ற மிளகு கான்ட்ராக்ட் சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. வரத்து அதிகரிக்கும் என்ற தகவலினால் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2012 அக்டோபர் மாதத்தில் 1,000 டன் மிளகு ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதுவே 2011-ல் 2,500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 15,700 டன் இந்தியாவிலிருந்து மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே சென்ற ஆண்டில் 18,000 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. வரத்து அதிகரிக்கும் என்ற தகவலினால் வரும் வாரத்தில் மிளகு விலை குறைந்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜீரகம் (JEERA)

அக்ரி கமாடிட்டி!

அதிக வரத்து மற்றும் உள்நாட்டு டிமாண்ட் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜீரகத்தின் விலை சென்ற வாரத்தில் குறைந்தே வர்த்தகமானது. அதிகப்படியான இருப்பு இருந்தும் வர்த்தகர்கள் மத்தியில் ஜீரகத்தை வாங்க ஆர்வம் இல்லாமல் காணப்பட்டது. சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக சர்வதேச ஆர்டர்கள் இந்தியாவின் பக்கம் அதிகளவில் திரும்பியுள்ளது. சென்ற வாரத்தில் உஞ்ஹா சந்தைக்கு 5,000 பைகள் வரத்து வந்தன (ஒரு பை என்பது 55 கிலோ). நூறு கிலோ 14,100 ரூபாய்க்கு விற்பனையானது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் ராபி சீஸனை முன்னிட்டு ஜீரகம் பயிரிடப்படுவதை வர்த்தகர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். சர்வதேச ஆர்டர்கள் தொடர்ந்து வருவதால் ஏற்றுமதி டிமாண்ட் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், வரும் வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு.

மஞ்சள் (TURMERIC)

அக்ரி கமாடிட்டி!

டிசம்பர் மாத கான்ட்ராக்ட் முடிவினால்  தொடர்ந்து விலை சற்று அதிகரித்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. வர்த்தகர்களிடம் திருப்திகரமான ஆர்டர்கள் வந்ததால் விலை சற்று அதிகரித்தது. எனினும், வரத்து அதிகரித்ததும் விலை மேலும் ஏறாமல் தடுக்கப்பட்டது. ஏற்றுமதி ஆர்டரும் குறைவாக இருந்தது. குறைந்தபட்ச விலையை மஞ்சளுக்கு அரசு நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் மஞ்சள் கையிருப்பை அதிகப்படுத்தினர். ஜனவரி மாதத்தில்

மஞ்சளுக்கான சீஸன் அதிகரிக்கும் என்பதும், மஞ்சளை இறக்குமதி செய்யும் நாடுகளிலிருந்து ஆர்டர்கள் அதிகரிக்கும் என்பதாலும் நீண்ட காலத்தில் விலை அதிகரிக்கும். குறுகியகாலத்தில் பார்க்கும்போது வரத்து அதிகரிப்பால் விலை குறையும் வாய்ப்புள்ளது.

 ஏலக்காய் (CARDAMOM)

அக்ரி கமாடிட்டி!

ப்ராஃபிட் புக்கிங் செய்ததை அடுத்து ஏலக்காயின் விலை சென்ற வாரத்தில் குறைந்தே வர்த்தகமானது. சென்ற வாரத்தில் 69 டன் வரத்து இருந்தபோது 65 டன் ஏலக்காய் மட்டுமே ஏலம் போனது. ஒரு கிலோ ஏலக்காய் சராசரி விலையாக 795 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 1,008 ரூபாய்க்கும் விற்பனையானது. ஏலக்காய் ஏலம் விடும் முக்கிய பகுதிகளில் வரத்து குறைவாகவே இருந்தது. மூன்றாவது சுற்று அறுவடையும் முடிந்துவிட்டது. மீதமுள்ள பயிர்களும் வரும் மாதத்தில் அறுவடை செய்யப்பட்டுவிடும். வரும் வாரத்தில் வர்த்தகம் மந்த நிலையிலேயே காணப்படும்.

 மிளகாய் (CHILLI)

அக்ரி கமாடிட்டி!

குளிர்சாதன பெட்டகங்களில் மிளகாய் கையிருப்பு அதிகமாக இருந்ததால் மிளகாய் விலை சென்ற வாரத்தில் குறைந்தே வர்த்தகமானது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் புதிய மிளகாய் வரத்து இருக்கும் என்பதால் விலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். டிசம்பர் மாத இறுதியில் அறுவடை துவங்கிவிடும் என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் அதிகப்படியான உற்பத்தி ஆகியிருப்பதாகத் தகவல் வெளியானதால் விலை குறைந்தது. பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து புதிய வரத்தை எதிர்நோக்கி ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. சென்ற வாரத்தில் 45,000 பை (ஒரு பை என்பது 45 கிலோ) மிளகாய் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. வரும் வாரத்தில் விலை குறைய வாய்ப்புகள் இல்லை.

- பானுமதி அருணாசலம்.

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism