Published:Updated:

ஷேர்லக் - அடுத்த ஆண்டு சுபிட்சம்தான் !

ஷேர்லக் - அடுத்த ஆண்டு சுபிட்சம்தான் !

ஷேர்லக் - அடுத்த ஆண்டு சுபிட்சம்தான் !

ஷேர்லக் - அடுத்த ஆண்டு சுபிட்சம்தான் !

Published:Updated:
##~##

''அவசரமாக மும்பைக்குக் கிளம்புகிறேன். அங்கிருந்தபடி உமது மெயிலுக்கு மேட்டரை அனுப்புகிறேன்'' - வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே ஷேர்லக்கிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அவர் சொன்னபடி மேட்டர் வந்துசேர வேண்டுமே என பரபரப்பாக நாம் காத்திருக்க, இரவு சரியாக எட்டு மணிக்கு மேட்டர் வந்தது. ஷேர்லக் அனுப்பி இருந்த செய்திகள் இதோ:

 அடுத்த ஆண்டு சுபிட்சம்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்திய பங்குச் சந்தையில் அதிகளவு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.  உலகலாவிய லிக்விடிட்டி அதிகரிப்பு உள்பட பல காரணங்களை இதற்கு சொல்கிறார்கள். இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு இரண்டு விதமான பயம் இருக்கிறது. முதலாவது, எவ்வளவு வேகத்தில் பணம் அதிகமாக உள்ளே வந்ததோ, அதே வேகத்தில் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது, இப்போது டிசம்பர் மாதம் என்பதால் வெளிநாடுகளில் நீண்ட விடுமுறை இருக்கும். அதனால் சந்தைகளில் இருந்து பங்குகள் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால், இப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை, என்கிறார்கள். எனவே, முதலீட்டாளர்கள் பயப்படத் தேவை இல்லை. பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!  

 ஐ.டி. துறைக்குப் போதாத காலம்!

ஐ.டி. துறைக்கு இது போதாத காலம். ஒபாமா மீண்டும் அதிபராக வந்தாலும் வந்தார், இவ்வளவுநாள் 20 சதவிகித வளர்ச்சி என்று சொல்லி வந்த காக்னிசென்ட் நிறுவனம், திடீரென்று 16 சதவிகித வளர்ச்சி என்று சொல்லப் போக, ஐ.டி. பங்குகள் தடதடவென சரிந்தன. நாஸ்காமும் 11 முதல் 14% வளர்ச்சி சாத்தியம் என்று சொன்னதை மாற்றி இப்போது 11 சதவிகிதம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறது.

ஷேர்லக் - அடுத்த ஆண்டு சுபிட்சம்தான் !

 ஐ.பி.ஓ. வரும் பி.எஸ்.இ.!

உலகின் மிகப் பழைமையான பங்குச் சந்தை என்கிற பெருமையைக் கொண்ட பி.எஸ்.இ. பங்கு வெளியிட தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. இதற்காக சில முதலீட்டு வங்கிகளைத் தேர்வு செய்துள்ளது. இதில், பேங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லிஞ்ச், ஜே.பி. மார்கன், யூ.பி.எஸ். உள்ளிட்ட 14 முதலீட்டு வங்கிகளைத் தேர்வு செய்திருக் கிறது. கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டிருக்கும் பி.எஸ்.இ. இந்த ஐ.பி.ஓ. மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை திரட்டத் திட்டமிட்டுள்ளதாம்!    

 உயரும் வங்கிப் பங்குகள்!

தரக் குறியீட்டு நிறுவனங்கள் இந்திய வங்கிகளைப் பற்றி மோசமாகச் சொல்லி இருந்தாலும், அது பொதுத்துறை வங்கி களுக்குதான். தனியார் வங்கிகள் நல்ல ஏற்றத்துடன்தான் இருக்கிறது. மேலும், வரும் வாரங்களில் வங்கிகளுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும்பட்சத்தில் வங்கிப் பங்குகள் இன்னும் உயர வாய்ப்பு இருக்கிறது. எனவே, நல்ல தனியார் வங்கி பங்குகளின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம்!

 சஹாராவுக்கு வைத்த கெடு!

மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிய சஹாரா நிறுவனம் இன்னும் ஒன்பது வாரங்களுக்குள் மக்களிடமிருந்து வாங்கிய பணத்தைத் திரும்பத் தரவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்னை நடந்தே பல மாதங்கள் முடிந்துவிட்டது. இடைப்பட்ட காலத்தில் மக்களிடமிருந்து வாங்கிய பணத்தைத் திரும்பத் தர சஹாரா நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது இன்னும் ஒன்பது வாரத்திற்குள் தருமா என்பது கேள்விக்குறிதான்!  

 மல்லையாவைச் சந்திக்கும் வங்கிகள்!

கிங்ஃபிஷர் ஏர்லைன் நிறுவனத்துக்கு கடன் தந்த வங்கி அதிகாரிகள், விஜய் மல்லையாவை விரைவில் சந்திக்கப் போகிறார்களாம். இந்த சந்திப்பின்போது வங்கிகள் தந்த கடன் தொகையை மல்லையா எப்படி திரும்பத் தருவார் என்பது குறித்து விவாதிக்கப் போகிறார்களாம். இந்தக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் பங்கின் விலையில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள். எனவே, கவனம்!

ஜரூராகும் சேமிப்புத் திட்டம்!    

ஷேர்லக் - அடுத்த ஆண்டு சுபிட்சம்தான் !

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான பங்குகளை குறிப்பிடும்படி செபி அமைப்புக்கு மத்திய அரசு தகவல் அனுப்பி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து செபி, என்.எஸ்.இ. மற்றும் பி.எஸ்.இ. பங்குகளை பரிந்துரை செய்ய சொல்லிக் கேட்டிருக்கிறது. ஈக்விட்டி ஃபண்டுகளை பரிந்துரை செய்ய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் செபியின் தகவல் பறந்திருக்கிறது. இந்த பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாதபடி இருக்கும் என்றும், கூடிய விரைவில் முதலீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

 எஃப்.பி.ஓ. வரும் டி.எல்.எஃப்.!

டி.எல்.எஃப். நிறுவனம் 75 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பதால், அதிகப்படியாக இருக்கும் பங்குகளை ஃபாலோ ஆன் ஆஃபர் மூலம் வருகிற ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டு வருகிறதாம். இந்த நிறுவனத்தின் புரமோட்டரிடம் 78.58 சதவிகிதப் பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. டி.எல்.எஃப். போல வேறு பல பங்கு நிறுவனங்களும் ஃபாலோ ஆன் ஆஃபர் மூலம் பங்குகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்!

 நாக்அவுட் இன்ஃபோசிஸ்!

நாஸ்டாக் 100 இண்டெக்ஸ்-ல் அடுத்த வாரத்தில் ஃபேஸ்புக் ஷேர் இடம்பெற போகிறது. புதிய பங்கு ஒன்று நுழைந்தால், பழைய பங்கு ஒன்று வெளியேற வேண்டுமில்லையா? அந்த பங்கு இன்ஃபோசிஸ்தான். இது அமெரிக்க சமாச்சாரம் என்றாலும் நம்மூர் இன்ஃபோசிஸ் நிலையை எடுத்துச் சொல்லத்தான் இதை சொன்னேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism