Published:Updated:

கமாடிட்டி !

கமாடிட்டி !

கமாடிட்டி !

கமாடிட்டி !

Published:Updated:
 ##~##

இந்த வாரம் தங்க விலை நிலவரம் குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார்.

''அமெரிக்காவில் ஜனவரி மாதத்தில் வரி அதிகரிப்பு மற்றும் செலவுகள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் இதனைச் சுற்றியே இருக்கின்றன. ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி 2013-ல் சரிசெய்ய முடியாத நிலையில் இருக்குமென ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த வருடத்தில் வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரும் வாரத்தில் அமெரிக்காவில் ஃபெடரல் ஓப்பன் மார்க்கெட் கமிஷன் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப விலை மாறுதல்கள் இருக்கும். எம்.சி.எக்ஸ். சந்தையில் 10 கிராம் தங்கம் வரும் வாரத்தில் 30,300 ரூபாய் வரை வந்து, பிறகு 30,700 ரூபாய்க்குச் செல்ல வாய்ப்புண்டு. இந்த விலை வரும்போது வர்த்தகர்கள் வாங்கலாம்''.

கமாடிட்டி !

காப்பர்

சென்ற வார ஆரம்பத்தில் காப்பரின் விலை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்ததால் வர்த்தகர்கள் ப்ராஃபிட் புக்கிங் செய்தனர். இதனால் வார இறுதியில் விலை குறைந்தது. கச்சா எண்ணெய்யின் விலை குறைவு மற்றும் அமெரிக்க பங்குச் சந்தை களின் நிலவரம் சரியாக இல்லாததால் காப்பரில் வர்த்தகம் செய்வதை ரிஸ்க்-ஆக நினைத்தார்கள் வர்த்தகர்கள்.

கமாடிட்டி !

மேலும், ஐரோப்பாவில் 2013-ல் பொருளாதார வளர்ச்சி சரியாக இருக்காது என தகவல்கள் வெளியானதால் காப்பரின் விலை சரிவைக் கண்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி, ஐரோப்பாவின் வளர்ச்சி 2013-ல் 0.5 சதவிகிதமாக இருக்குமென தெரிவித்து இருந்தது.

கமாடிட்டி !

ஆனால், தற்போது 0.3 சதவிகிதம் குறையும் என்று கூறியுள்ளது. உலகப் பொருளாதார சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கும்போது காப்பரின் விலை வரும் வாரத்தில் குறைந்தே வர்த்தகமாகும்.

இயற்கை எரிவாயு!

வார ஆரம்பத்தில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பை வர்த்தகர்கள் பயன்படுத்திக்கொண்டு ப்ராஃபிட் புக்கிங் செய்தனர். இதனால் வார இறுதியில் விலை குறைந்தது. மேலும், அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் அதிகப்படியான குளிர் நிலவவில்லை. இதன் காரணமாக இயற்கை எரிவாயுக்கான டிமாண்ட் குறைந்துள்ளது. அமெரிக்காவில் இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி 73 பில்லியன் கியூபிக் ஃபீட் குறைந்து 3.804 டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக உள்ளது என அமெரிக்காவின் எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. தேவை குறைந்துள்ளதால் இயற்கை எரிவாயுவின் விலை வரும் வாரத்தில் குறைந்தே வர்த்தகமாகும்.

கச்சா எண்ணெய்!

ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகள் மற்றும் கச்சா எண்ணெய் இன்வென்ட்டரி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்தே வர்த்தகமானது. அமெரிக்காவை நிலைகுலையச் செய்த சாண்டி புயல் காரணமாக இந்த மாதத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வியன்னாவில் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் 'ஒபேக்’ நாடுகளின் கூட்டம் வர்த்தகர்களை கவனிக்க செய்துள்ளன. இந்த கூட்டத்தின்போது எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை இருக்கும்.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism