பிரீமியம் ஸ்டோரி

ஏலக்காய் (CARDAMOM)

அக்ரி கமாடிட்டி!

கடந்த வாரம் ஏலக்காய் விலை சரிந்ததற்கான காரணங்களையும் இந்த வாரத்தில் அதன் விலைப் போக்கு  எப்படி இருக்கும் என்பதையும் ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஜோனல் புராடக்ட் இன்சார்ஜ் முருகேஷ் குமார் சொல்கிறார்.

''ஏலக்காய் சென்ற வாரத்தில் மட்டும் ஒரு கிலோ 50 ரூபாய் குறைந்து வர்த்தகமானது. டிசம்பர் மாத கான்ட்ராக்ட்  முடிவடைந்ததால் வர்த்தகர்கள் ஏலக்காய் கான்ட்ராக்ட்டை விற்றனர். எஃப்.எம்.சி.

அக்ரி கமாடிட்டி!

விதிமுறை களின்படி கான்ட்ராக்ட் முடியும் போது டெலிவரி எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் தங்கள் கைவசம் இருந்த கான்ட்ராக்ட்டை விற்று தீர்த்தனர். இதன் காரணமாகவே டிசம்பர் கான்ட்ராக்ட் ஏலக்காய் விலை குறைந்தது.

ஏலக்காய் விளையும் பகுதிகளில் பருவநிலை சரியில்லாதக் காரணத்தால் சென்ற வருடத்தைவிட இந்த வருடம் 25 சதவிகிதம் உள்நாட்டு விளைச்சல் குறைந்திருக்கிறது. ஏலக்காயை வாங்க, விற்பதற்கான ஓப்பன் இன்ட்ரஸ்ட் 409-ஆக இருந்தது. ஆனால், குடோனில் இருக்கும் 35 மெட்ரிக் டன் ஏலக்காயை டெலிவரி எடுக்க பலரும் முன்வரா ததால், விலை குறைந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இறங்கி அதன்பிறகு விலை அதிகரிக்கலாம். நீண்டகால நோக்கில் பார்க்கும்போது விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. காரணம், பிஸிக்கல் மார்க்கெட்டில் ஏலக்காய் கையிருப்பு குறைவாக இருப்பதே.

ஜனவரி கான்ட்ராக்ட்டை 985, 980 ரூபாய்க்கு இலக்கு விலையாகக்கொண்டு வர்த்தகர்கள் வாங்கலாம். இதற்கு சப்போர்ட் 930, 875 ரூபாய். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார்.

அக்ரி கமாடிட்டி!

மிளகு (PEPPER)

வடஇந்திய மாவட் டங்களில் மிளகிற்கானத் தேவை அதிகரித்துள்ள தும், புதிய மிளகு வரத்து காரணமாகவும் சென்ற வாரத்தில் மிளகு விலை அதிகரித்து வர்த்தக மானது. அதேசமயம், மிளகு ஏலம் விடப்படும் சந்தைகளில் குறைந்த அளவிலான வர்த்தகம் நடைபெற்றதும் மார்க்கெட் சென்டிமென்டைப் பாதித்தது. இந்த மாத இறுதியில் வரத்து அதிகமாகும் என்பதால் விலை உயர்வு நீண்ட நாளுக்கு நிலைக்காது என வர்த்தகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

சென்ற வியாழக்கிழமை கொச்சின் சந்தைக்கு ஐந்து டன் மிளகு வர்த்தகத்திற்கு வந்தது. நூறு கிலோ மிளகு 38,700 ரூபாய்க்குச் சென்ற வாரத்தில் வர்த்தகமானது. 2012 அக்டோபர் மாதத்தில் பிரேசில் நாட்டிலிருந்து 4,000 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதுவே, சென்ற வருடத்தில் இதே மாதத்தில் 4,700 டன் ஏற்றுமதி செய்யப் பட்டது. இந்த வருடத்தில் மொத்தமாக 27,500 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்திலும் விலை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

ஜீரகம் (JEERA)

அக்ரி கமாடிட்டி!

அதிக விலை காரண மாக பிராஃபிட் புக்கிங் செய்ததால் சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தக மானது. குஜராத் மாநிலத்தில் ஜீரகம் பயிரிடும் நேரம் என்பதால் வர்த்தகர்கள் அதை கண்காணித்து வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 3-ம் தேதி நிலவரப்படி, 2.21 ஹெக்டேர் ஏக்கருக்கு ஜீரகம் பயிரிடப்பட்டிருப்பதாக அம்மாநிலத்தின் விவசாயத் துறை தெரிவித்துள்ளது. இது கடந்த வருடத்தைவிட 15 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜீரகம் பயிரிடுவது மந்தமாக இருப்பதும், வெளிநாட்டிலிருந்து தேவை  அதிகரித்திருப்பதும் தற்போதைய விலைக்குச் சாதகமாக இருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் அறுவடைக் காலம் ஆரம்பித்துவிட்டதால் எவ்வளவு ஹெக்டேர் பயிரிடப்பட்டுள்ளது என்கிற நிலவரம் வரும் நாட்களில் தெரியவரும்.

உஞ்ஹா சந்தைக்கு சென்ற வாரத்தில் 5,000 பைகள் வரத்து வந்தது (ஒரு பை என்பது 55 கிலோ). நூறு கிலோ ஜீரகம் சென்ற வாரத்தில் 14,300 ரூபாய்க்கு வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் (TURMERIC)

மஞ்சள் ஏலம் விடப்படும் சந்தைகளில் விலை அதிகரித்து விற்கப்பட்டதால் ஃப்யூச்சர் சந்தையிலும் விலை அதிகரித்து வர்த்தகமானது. குறைந்த அளவிலான வரத்து இருந்ததும் விலை அதிகரிக்க ஒரு காரணம். எனினும், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2013 மார்ச் / ஏப்ரல் ஏற்றுமதி ஆர்டர்களுக்காக கையிருப்பை அதிகரித்தது,  விலை உயர்ந்ததற்கு காரணம்.

சென்ற வருடத்தில் வரலாறு காணாத அளவுக்கு 90 லட்சம் பைகள் மஞ்சள் பயிரிடப் பட்டது. ஆனால், இந்த வருடம் 50 சதவிகிதம் குறைந்தளவிலே மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வாரத்தில் ஈரோடு சந்தைக்கு 3,750 பைகள் வந்தன. நூறு கிலோ மஞ்சள் 5,600 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் வாரங்களில் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.  

அக்ரி கமாடிட்டி!

மிளகாய் CHILLI)

ஷார்ட் கவரேஜ் செய்ததன் காரணமாக மிளகாய் விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. எனினும், மிளகாய் ஏலம் விடும் சந்தைகளில் இருப்பு அதிகரித்ததன் காரணமாக மேலும் விலை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. குண்டூர் மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் அதிகரிக்கும் புதிய வரத்து, விலையில் பிரதிபலிக்கும். எனினும், புதிய மிளகாய் வரத்து குறைவான அளவிலே இருந்தது. இந்த மாத இறுதியில் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆந்திராவில் மிளகாய் உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை குறைவு தடுக்கப்பட்டது. புதிய வரத்து வர துவங்கியிருப்பதால் தேவை அதிகரிக்கலாம். சென்ற வாரத்தில் குண்டூர் சந்தைக்கு 40,000 பைகள் வரத்து வந்தது (ஒரு பை என்பது 45 கிலோ). நூறு கிலோ மிளகாய் 5,700 ரூபாய்க்கு வர்த்தகமானது. தேவை அதிகரித்துள்ளதால் மிளகாய் விலை வரும் வாரத்தில் ஏறக்கூடும்.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு