Published:Updated:

மீண்டும் கடன் கிடைக்கும்!

குறைவான சிபில் ஸ்கோர்:

பிரீமியம் ஸ்டோரி

டன் வாங்க நினைக்கும் நடுத்தர மக்களுக்கு இன்றைக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது, சிபில் எனப்படும் கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ அமைப்பு. நீங்கள் எந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தாலும் சிபிலில் உங்களைப் பற்றி நல்லவிதமாக ரிப்போர்ட் இருந்தால்தான் கடன் கிடைக்கும். இல்லாவிட்டால், கடனே கிடைக்காது என்கிற நிலையில், கடன்தாரர்களுக்கான கிரெடிட் ரேட்டிங் தரும் துறை எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல, அதன் சார்பில் சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் பேசிய பலரும் பல முக்கியமான விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள்.

மீண்டும் கடன் கிடைக்கும்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் ஏ.கே.பன்சால் பேசும்போது, ''சிபில் அமைப்பு கடன் பெற்றவர்கள் பற்றிய தகவல்களைத் தொகுக்க ஆரம்பித்தபிறகு, வங்கிகள் கடன் தருவதற்கான நேரம்

மீண்டும் கடன் கிடைக்கும்!

வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஏற்கெனவே கடன் வாங்கி கட்டாதவர்கள் இனி இன்னொரு வங்கியில் கடன் வாங்க முடியாது என்பதால், சரியான நபர்களுக்கு மட்டுமே இனி கடன் கிடைக்கும்'' என்றார்.

சிபில் அமைப்பின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சதீஷ்பிள்ளை, ''பெருநகரங்களில் வாங்கப்படும் கடன்கள் சிறுநகரங்களைவிட அதிக ரிஸ்க் கொண்டவையாக இருக்கின்றன. கடந்த 2010 முதல் 2012-ல் வாகனக் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு போன்ற கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் சுமார்

35 சதவிகிதம் பேருக்கு சிபில் ஸ்கோர் குறைவாக இருந்த காரணத்தால் கடன் மறுக்கப்பட்டிருக்கிறது. 2012-ல் முதல் காலாண்டில் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனக் கடன்களில்

50 சதவிகித சிபில் ஸ்கோர் சுமார் 700 முதல் 750 பெற்றவர்களாக உள்ளார்கள். அதேநேரத்தில், மிகக் குறைவான சிபில் ஸ்கோர்

(550 முதல் 650-க்கு கீழ்) பெற்றவர்களில் சுமார் 5 சதவிகிதம் பேருக்கு இரு சக்கர வாகனக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிலைதான் வீட்டுக் கடன் போன்ற இதர பிரிவுகளிலும் காணப் படுகிறது'' என்று சொன்னார்.

''சிபில் ஸ்கோர் குறைவாக உள்ள ஒருவர் மீண்டும் வீட்டுக் கடனை வாங்கி, அதனை சரியாகத் திரும்பக் கட்டுவதன் மூலம் தன்னுடைய கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக்கொள்ள முடியுமா?'' என்று அவரிடம் கேட்டோம்.

''கடன் வாங்கிய ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ காலம் தாழ்த்தி கடனை திரும்பச் செலுத்தியதன் காரணமாக, அவரது ஸ்கோர் குறைந்திருக்கும். இவருக்கு இன்னொரு வங்கி கடன் தரும்பட்சத்தில், அந்தக் கடனை சரியாகச் செலுத்தி வந்தால் அவரது கிரெடிட் ஸ்கோர் நிச்சயம் உயரும். இதனை வைத்து, அவர் அடுத்தமுறை எந்த வங்கியிலும் தாராளமாக கடன் வாங்கலாம்'' என்று தெளிவு படுத்தினார்.

மீண்டும் கடன் கிடைக்கும்!

பங்குச் சந்தைகளை கண்காணிக்க செபி இருப்பதுபோல, சிபில் போன்ற கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்களை யார் கண்காணிக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விளக்கம் தந்தார் ஆர்.பி.ஐ-ன் பிராந்திய இயக்குநர் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) என்.எஸ். விஸ்வநாதன். ''சிபில் போன்ற கிரெடிட் ரேட்டிங் வழங்கும் நிறுவனங்கள் ஆர்.பி.ஐ-ன் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. அவை பின்பற்றும் கிரெடிட் ரேட்டிங் முறைகள் ஆர்.பி.ஐ. விதிமுறைகளைப் பின்பற்றிதான் மேற்கொள்ளப்படுகின்றன'' என்று சொன்னார்.

- சி.சரவணன்,

படங்கள்: பி.கார்த்திக்.

நீங்கள் எந்த வகை வாடிக்கையாளர்?

வங்கிகள் மற்றும் தரக் குறியீடு வழங்கும் நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களை பெர்ஃபெக்ட் கஸ்டமர், ரெகுலர் கஸ்டமர், ரிஸ்கி கஸ்டமர், குட்குளோஸ்டு கஸ்டமர், ரிட்டர்ன் ஆஃப் கஸ்டமர் என பிரித்து வைத்திருக்கின்றன.  இதில், குட்குளோஸ்டு கஸ்டமர் என்பவர் கடனை சரியாக கட்டி முடித்தவர். ரிட்டர்ன் ஆஃப் கஸ்டமர் என்பவர் கடன் பாக்கி வைத்திருப்பவர். இதில் நீங்கள் எந்த வகை? ரிட்டர்ன் ஆஃப் கஸ்டமருக்குக் கடன் கிடைப்பது கஷ்டம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு