Published:Updated:

பணப் பட்டுவாடா நடந்தது உண்மைதான்; எந்த கட்சி என கூற முடியாது: பிரவீன்குமார்

Vikatan Correspondent
பணப் பட்டுவாடா நடந்தது உண்மைதான்; எந்த கட்சி என கூற முடியாது: பிரவீன்குமார்
பணப் பட்டுவாடா நடந்தது உண்மைதான்; எந்த கட்சி என கூற முடியாது: பிரவீன்குமார்
பணப் பட்டுவாடா நடந்தது உண்மைதான்; எந்த கட்சி என கூற முடியாது: பிரவீன்குமார்

சென்னை: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பணம் பட்டுவாடா நடந்துவிட்டது என்றும், இதை எந்த கட்சி செய்தது என கூற முடியாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

மறுவாக்குப்பதிவு தள்ளிவைப்பு ஏன்?

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார், சேலம், நாமக்கல் தொகுதிகளில் உள்ள இரண்டு வாக்குச்சாவடியில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இதனால் மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்துள்ளோம். மறுவாக்குப்பதிவுக்கு அவகாசம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு வேட்பாளர்கள் கடிதம் எழுதினர். வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் மறுவாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது" என்றார்.

முன்னதாக மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு தபால் ஓட்டு வரவில்லை என புகார் வந்துள்ளது. மொத்த தபால் ஓட்டு விபரம், எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிக்கை கேட்டு உள்ளேன்.

சில கலெக்டர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஒரு சிலர் இன்னும் கொடுக்கவில்லை. தபால் ஓட்டுக்கான படிவத்தில் வாக்காளர் பட்டியல் எண், பாகம் எண் சரியாக குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளனர். கலெக்டர்களின் அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில புகார் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அது பற்றி கூற முடியாது" என்றார்.

அப்போது, ‘பணம் பட்டுவாடா தொடர்பாக மன வருத்தம் அடைந்ததாக கூறினீர்கள். எந்த கட்சி அப்படி பணம் பட்டுவாடா செய்தது‘ என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த பிரவீன்குமார், ‘நீங்களும் மன வருத்தம் அடையவில்லையா‘ என திருப்பி கேட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "பணப்பட்டுவாடா செய்தது எந்த கட்சி என்று கூற முடியாது. கடைசி இரண்டு நாளில் பண பட்டுவாடா நடந்தது. பல இடங்களில் பணம் பறிமுதல் செய்துள்ளோம். வழக்கும் பதிவு செய்தோம். எவ்வளவோ நடவடிக்கை எடுக்கப்பட்டும் அதை மீறி பணப்பட்டுவாடா நடந்து விட்டது. இதனால் மன வருத்தம் அடைந்தேன்" என்றார்.