Published:Updated:

வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம்... யாருக்கு கிடைக்கும்?

வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம்... யாருக்கு கிடைக்கும்?

வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம்... யாருக்கு கிடைக்கும்?

வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம்... யாருக்கு கிடைக்கும்?

Published:Updated:
வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம்... யாருக்கு கிடைக்கும்?
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ங்கிகளில் கடன் பெற்றுதான் இன்று பலரும் சொந்தமாக வீடு வாங்குகிறார்கள். இதற்கான வட்டி விகிதம்  10 முதல் 11 சதவிகிதம் வரை இருக்கும். இப்படி கடன் வாங்கி வீடு வாங்குபவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள்தான். இவர்களின் வட்டி சுமையைக் குறைக்க, மத்திய அரசு வட்டி மானியத்தை வழங்கியுள்ளது. யாருக்கு மானியம் கிடைக்கும்? எப்போதெல்லாம் கிடைக்கும்? என்பது குறித்து எஸ்.பி.ஐ. வங்கியின் பொது மேலாளர் (விரிவாக்கம்-1) சஞ்சீவ் சதா தெளிவாக எடுத்துச் சொன்னார்.

''மக்களின் கடன் சுமையைக் குறைக்க இந்த மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. கடந்த 2009, அக்டோபர் மாதத்தில் முதன்முதலாக வட்டி மானியத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு ஒவ்வொரு வருடமும் இந்த மானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் வீட்டின் மதிப்பு 20 லட்சம் ரூபாய்க்குள்ளும், கடனின் அளவு 10 லட்சம் ரூபாய்க்குள்ளும் இருக்கவேண்டும் என அரசு அறிவித்தது. அதன்பிறகு 1.4.2011-க்குப் பிறகு வீட்டின் மதிப்பு 25 லட்சத்திற்குள்ளும், கடன் தொகை 15 லட்சம் ரூபாய்க்குள்ளும் இருக்க வேண்டும் என இதன் அளவை அரசு உயர்த்தியது.

இந்த மானியத்தைப் பெற முதல் தகுதி 2009-க்குப்பிறகு வீட்டுக் கடன் வாங்கியிருக்க வேண்டும். அடுத்து, அரசு நிர்ணயித்துள்ள அளவில் வீட்டின் மதிப்பும், கடன் தொகையும் இருக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இந்த மானியத்தைப் பெற முடியும்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் கடனுக்கான வட்டி கணக்கிடப்படும். இது, நாள் கணக்கின் அடிப்படையில்தான் வட்டி இருக்கும். மானியம் வழங்கும்போது அந்த வருடம் நீங்கள் செலுத்திய வட்டியில் ஒரு சதவிகித வட்டியை கணக்கிட்டு, அது உங்கள் கடன் கணக்கில் மானியமாக வரவு வைக்கப்படும்.

வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம்... யாருக்கு கிடைக்கும்?

கடனுக்கான வட்டியானது 10 சதவிகிதம் எனில், மானிய மான 1 சதவிகித வட்டிக்கான தொகையை மத்திய அரசு மானியமாகத் தரும். வீட்டுக் கடன் வாங்கிய முதலாண்டில் நீங்கள் செலுத்தும் இ.எம்.ஐ.-ல் அசலைவிட வட்டி அதிகமாக இருக்கும். மாதம் 15,000 ரூபாய் என 12 மாதங்களுக்கு இ.எம்.ஐ. செலுத்துனீர்கள் என்றால் (15,000 ஙீ 12) அந்த 1,80,000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள். அதில் அசல் 50,000 ரூபாயாகவும், வட்டி 1,30,000 ரூபாயாகவும் இருக்கும். 10 சதவிகித வட்டி 1,30,000 எனில் 1 சதவிகித வட்டியானது 13,000 ரூபாய் ஆகும். இதுதான் மானியமாக உங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். கடன் அசல் தொகையில் மானியத் தொகையைக் கழித்துவிடுவார்கள்.

இத்தொகையை இ.எம்.ஐ.யில் அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். அல்லது மொத்த இ.எம்.ஐ. எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மானியம் எதிர்காலத்தில் எப்போதும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அடுத்த வருடம் பட்ஜெட்டில் மானியம் நீட்டிக்கப்பட்டால் மட்டுமே மானியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

வட்டி விகித வித்தியாசத்தின் காரணமாக வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றினாலும் இந்த மானியத்தைப் பெறமுடியும். முன்கூட்டியே கடனை அடைத்து விடுபவர்களுக்கும் அப்போது உள்ள வட்டிக்கு மானியம் கிடைக்கும்.

என்.ஆர்.ஐ.கள், இரண்டாவது வீடு வாங்குபவர்கள், வங்கியில் மற்றும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் ஊழியர்களாகப் பணிபுரிபவர்கள், பண்ணை வீடு கட்டுபவர்கள், வீட்டு மனை மட்டும் வாங்குபவர்கள், வீட்டை மறு சீரமைப்பு செய்பவர்கள் ஆகியோருக்கு இந்த மானியம் கிடைக்காது. அதோடு, மாநில அரசின் வீட்டு மானியம் பெற்றவர்கள் இந்த மானியத்தைப் பெற முடியாது.

கணவன், மனைவி தனித்தனி யாக இரண்டு வீடு வாங்குகிறார்கள் என்றால் தனித்தனியாக மானியம் கிடைக்கும். இது வருமானம் உள்ள பெண்களுக்கு மட்டும்தான் பொருந்தும். கணவன், மனைவி சேர்ந்து வாங்கும் வீட்டிற்கு ஒரே மானியம்தான் கிடைக்கும். மானியம் என்பது ஒருவருக்கு ஒரு கடன் கணக்குக்கு மட்டும்தான் கிடைக்கும்.''

வீடு வாங்கக் கடனும் கொடுத்து, கடனுக்கான வட்டி மானியத்தை யும் அரசு தருகிறது. வேறு என்ன வேண்டும், சீக்கிரம் வீட்டை வாங்க வேண்டியதுதானே..!

- இரா.ரூபாவதி.
படம்: பி.கார்த்திக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism