Published:Updated:

வரிச் சலுகை பாண்டுகள்! - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

வரிச் சலுகை பாண்டுகள்! - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

வரிச் சலுகை பாண்டுகள்! - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

வரிச் சலுகை பாண்டுகள்! - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

Published:Updated:
வரிச் சலுகை பாண்டுகள்! - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

டப்பு நிதியாண்டில் சுமார் 60,000 கோடி ரூபாய் அளவுக்கு வரிச் சலுகை பாண்டுகளை வெளியிட்டு மத்திய அரசு நிறுவனங்கள் நிதி திரட்ட உள்ளன. இந்த வரிச் சலுகை அளிக்கும் பாண்டில் முதலீடு செய்யும்முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று அலசுவோம்.

டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் என்றால்..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், அஞ்சலக சேமிப்புத் திட்டம், கம்பெனி டெபாசிட் போன்றவற்றில் செய்யும் முதலீட்டிற்கு கிடைக்கும் வருமானத்திற்கு, எந்த வருமான வரி வரம்புக்குள் வருகிறாரோ அதற்கேற்றாற்போல் வரிச் செலுத்தவேண்டும். ஆனால், இவ்வகை பாண்டுகளில் முதலீடு செய்யும்போது கிடைக்கும் வருமானத் திற்கு வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. அதாவது, இதில் கிடைக்கும் வருமானம் வரியில்லா வருமானமாகும். தவிர, பாதுகாப்பான முதலீடும்கூட. எனவே, இதில் முதலீடு செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறித்துவிடலாம்.
வரிச் சலுகை பாண்டுகள்! - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

பாசிட்டிவ் அம்சங்கள்!

• முதலீடு செய்த பணத்திற்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி ஏதும் கிடையாது.

• இவ்வகை வெளியீடுகள் பெரும்பாலும் மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிடுவதால், முதலீடு செய்த பணத்திற்கும், கிடைக்கும் வட்டிக்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. பாதுகாப்பான முதலீடாக இருக்கும்.

• முதலீடு செய்யும் தொகைக்கு உச்சவரம்பு ஏதும் கிடையாது.

• இந்த பாண்டுகளில் முதலீடு செய்யும் காலஅளவு 10 முதல் 15 ஆண்டுகள் என இருக்கும். சில வெளியீடுகள் 20 ஆண்டுகள்கூட இருக்கலாம். கால அளவைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும்.

• முதலீட்டிற்கு உண்டான வட்டி ஆண்டுக்கொருமுறை வழங்கப்படுகிறது.

• இவ்வகை பாண்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். அதனால் நாம் எப்போது வேண்டுமானாலும் பாண்டுகளை விற்கலாம். முதலீடு காலம் முடியும் வரை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

வரிச் சலுகை பாண்டுகள்! - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

முதலீடு செய்யும்முன்..!

1. டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் வெளியீட்டில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?, மற்ற வங்கி டெபாசிட், கம்பெனி டெபாசிட் போன்ற முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டிக்குப்பின் வருமானம் என்னவென்று பார்த்து அதனை இந்த டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் வட்டியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மற்ற முதலீட்டின் வரிக்குப் பிந்தைய வருமானத்தைவிட டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் வட்டி அதிகம் எனில் இதில் முதலீடு செய்யலாம்.

2. முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கும் டாக்ஸ் ஃப்ரீ பாண்டுக்கான தரக்குறியீடு என்ன என்பதைப் பார்க்கவேண்டும். 'ஏஏஏ' தரக்குறியீடு பெற்ற பாண்ட் என்றால் முதலீட்டிற்கு அதிக பாதுகாப்பு. குறைவான தரக்குறியீடு அல்லது நெகட்டிவ் ரேட்டிங் உள்ள வெளியீடுகளில் முதலீடு செய்வதைத் தவிர்க் கலாம்.

வரிச் சலுகை பாண்டுகள்! - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

3. டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் வெளியீட்டில் புட் ஆப்ஷன் அதாவது, முதலீடு செய்த காலத்திற்கு முன்னதாக பாண்டை சரண்டர் செய்யும் வசதி, அல்லது கால் ஆப்ஷன் அதாவது முதலீடு செய்த காலம் முடிவடையும் முன்பு நிறுவனம், முதலீட்டாளர்களிடமிருந்து பாண்டை திரும்பப் பெறும் வசதி உள்ளதா என்று பார்க்கவேண்டும்.

4. இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு வைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், பங்குச் சந்தையில் விற்கும்போது பாண்டை டீமேட் கணக்கிற்கு மாற்றவேண்டும். டீமேட் கணக்கு இருந்தால் முதலீடு செய்யும்போது டீமேட் வடிவத்தில் பாண்டிற்கு விண்ணப்பிப்பது நல்லது.

5. முதலீடு செய்யும் பணத்திற்கு உச்சவரம்பு கிடையாது என்றபோதிலும், மொத்த பணத்தையும் ஒரே வெளியீட்டில் முதலீடு செய்யாமல் பல வெளியீடுகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது.

6. முதலீடு செய்யும் பணத்திற்கு எந்தவித வருமான வரிச் சலுகையும் கிடையாது.

வரிச் சலுகை பாண்டுகள்! - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

வரிச் சலுகை..!

டாக்ஸ் ஃப்ரீ பாண்டில் வருமானத்துக்கு வரி கிடையாது. இவ்வகை முதலீடு, வருமான வரி உச்சவரம்பில் இருப்பவர்களுக்கு ஏற்றது. குறைந்த வருமான வரி வரம்பிலிருக்கும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். ஏன் என்றால் மற்ற முதலீட்டிலிருந்து கிடைக்கும் வரிக்குப் பிந்தைய வருமானம் இந்த டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் முதலீட்டைவிட அதிகமாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism