Published:Updated:

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

Published:Updated:
கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

இந்த வாரம் தங்கம் தடாலடியாக விலை சரிந்ததற்கான காரணத்தையும், வரும் வாரத்தில் தங்கம் நிலவரம் குறித்தும் மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் சொல்கிறார்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'2012
-ம் ஆண்டு முடிவு என்பதால் இதுவரைக்கும் லாபம் கொடுத்த கமாடிட்டிகளை விற்று வருகிறார்கள் முதலீட்டாளர்கள். இந்த வருடத்தில் தங்கம் 15 சதவிகித வருமானம் தந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவரும் இப்போது ப்ராஃபிட் புக்கிங் செய்து வருகிறார்கள்.

மேலும், அமெரிக்காவில் கொண்டுவரவிருக்கும் 'ஃபிஸ்கல் க்ளிஃப்’ நடவடிக்கைகள் தங்கத்துக்குச் சாதகமானதுதான். எனினும், மற்ற கமாடிட்டிகள் அனைத்தும் இறங்கி வருவதால் தங்கத்தின் விலையும் இறங்குகிறது. சென்ற வியாழக்கிழமை மட்டும் தங்கம் விலை இரண்டு சதவிகிதம் இறங்கியது. வரும் நாட்களில் ஒபாமா, ஃபிஸ்கல் க்ளிஃப்-ஐ எப்படி சமாளிப்பார் என்பதைப் பொறுத்தே தங்கத்தின் விலை இருக்கும்.

வரும் வாரத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறை வருவதால் அதிகளவுக்கு டிரேடிங் வால்யூம் இருக்காது. அமெரிக்கா வின் நடவடிக்கை களைப் பொறுத்தே விலை இருக்கும். எம்.சி.எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை அதிகரித்தால் ரூ.31,000 வரைக்கும், குறைந்தால் ரூ.30,000 வரைக்கும் செல்லலாம்'' என்றார்.

வெள்ளி!

தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து வெள்ளி யின் விலையும் குறைந்துள்ளது. ப்ராஃபிட் புக்கிங் நடந்ததும் வெள்ளி விலை குறைய ஒரு காரணம். ஐரோப்பாவில் தொழிற்துறை உற்பத்தி குறைந்துள்ளதால் வெள்ளிக்கானத் தேவையும் குறைந்துள்ளது. மேலும், டாலரின் மதிப்பு அதிகரித்ததும் வெள்ளி விலையில் பிரதிபலித்தது.

அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்து வெள்ளி விலை நிலவரங்கள் வரும் வாரத்தில் இருக்கும். எனவே, அதிகளவில் வெள்ளியில் வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. வெள்ளிக்கிழமை இரவு எம்.சி.எக்ஸ். சந்தையில் வெள்ளி ஒரு கிலோ மார்ச் மாத கான்ட்ராக்ட் ரூ.58,212 வர்த்தகமானது.

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

அடிப்படை உலோகம்!

கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவு காப்பரின் விலை சென்ற வாரத்தில் குறைந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் செலவு குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வரி அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடங்க இருக்கிறது. இது பல பொருளாதாரப் பிரச்னை களுக்கு வித்திடும் என கூறப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக காப்பரை அதிகமாக அமெரிக்காதான் நுகர்கிறது. அமெரிக்காவில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டால் காப்பருக்கான டிமாண்ட் குறையும். காப்பர் அதிகமாக உள்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் தயாரிப்பு பொருட்களுக்கு அதிகளவில் பயன் படுத்தப்படுகிறது. எனவே, வரும் வாரத்தைப் பொறுத்தவரை காப்பரின் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கச்சா எண்ணெய்!

மத்திய மேற்கு பகுதிகளில் அதிக குளிர் நிலவுவதால் கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனால், அமெரிக்காவின் வேலை இல்லாதவர்கள் பற்றிய புள்ளிவிவரம் வெளியானதால் இந்த விலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. டிசம்பர் 15-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அமெரிக்க தொழிலாளர் நலத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், 2013-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் செலவு குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வரி அதிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பும் கச்சா எண்ணெய் விலையில் பிரதிபலித்தது. இப்படி பல விஷயங்கள் சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைய காரணமாக அமைந்தது. டாலரின் மதிப்பு அதிகரிப்பால் வரும் வாரத்திலும் கச்சா எண்ணெய் விலை குறைந்தே வர்த்தகமாக வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை இரவு எம்.சி.எக்ஸ். சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் ஜனவரி கான்ட்ராக்ட் 4,902 ரூபாய்க்கு  வர்த்தகமானது.

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

இயற்கை எரிவாயு!

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

சென்ற வாரத்தில் எதிர்பார்த்ததைவிட இன்வென்ட்டரி குறைந்ததை அடுத்து இயற்கை எரிவாயு விலை குறைந்து வர்த்தகமானது. எனினும், வார இறுதியில் அமெரிக்காவில் குளிர் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியானதால் விலை மேலும் குறையாமல் அதிகரிக்கத் தொடங்கியது.

அமெரிக்கச் சந்தைகளில் இயற்கை எரிவாயு டிசம்பர் 21-ம் தேதி நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. குளிர் அதிகரித்து வருவதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இயற்கை எரிவாயுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இதனால் தேவை அதிகரித்து, வரும் வாரத்தில் விலை ஏறி வர்த்தகமாக வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை இரவு எம்.சி.எக்ஸ். சந்தையில் இயற்கை எரிவாயு ஒரு எம்.எம்.பி.டி.யூ. ஜனவரி கான்ட்ராக்ட் 193 ரூபாய்க்கு வர்த்தகமானது.

- பானுமதிஅருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism