Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

Published:Updated:
அக்ரி கமாடிட்டி!

இந்த வாரம் மஞ்சள், கடுகு விதை மற்றும் சோளம் பற்றி விளக்கமாகக் கூறுகிறார் ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சௌடா ரெட்டி.

மஞ்சள் (TURMERIC)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
''கடந்த வாரத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு 600 ரூபாய் அதிகரித்து 6,550 ரூபாய் வரை வர்த்தகமானது. இதற்கு காரணம், உற்பத்தி சென்ற ஆண்டைவிட குறைந்துள்ளது. சுமார் 20-களிலிருந்து 30 சதவிகிதம் வரை உற்பத்தி குறைந்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த மூன்று வாரங்களாக விலை ஏற்றம்கண்டு வருகிறது என்பதால் வரும் வாரத்தில் கரெக்ஷன் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வரும் வாரத்தில் வர்த்தகர்கள் பிராஃபிட் புக்கிங் செய்வார்கள் என்பதால் விலை குறைய அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது. மஞ்சள் ஏப்ரல் மாத கான்ட்ராக்ட் குவிண்டால் 6,710 ரூபாய் ரெசிஸ்டன்ஸ், 6,310 ரூபாய் சப்போர்ட்டாகவும் கொண்டு வர்த்தகம் செய்யவும்.
அக்ரி கமாடிட்டி!

கடுகு விதை (MUSTARD SEED)

கடந்த இரண்டு வாரங்களாக கடுகு விதை ஃபண்டமென்டல் சரியாக இல்லை. வர்த்தகர்கள் ஷார்ட் கவரிங் செய்துவருகிறார்கள். இதற்கு காரணம், உற்பத்தி அதிகரிக்கும் என்ற கணிப்புதான். அடுத்த சில நாட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. வரும் வாரத்தில் டெக்னிக்கலான கரெக்ஷன் ஏற்படும். இதனால் வரும் வாரத்தில் விலை குறையும். கடுகு விதை ஜனவரி கான்ட்ராக்ட் ரெசிஸ்டன்ஸ் குவிண்டால் 4,310 ரூபாயாகவும், 4,105 ரூபாய் சப்போர்ட்டாகவும் வர்த்தகர்கள் கொள்ளவும்.

சோளம் (MAIZE)

சென்ற வாரத்தில் குவிண்டாலுக்கு 70 ரூபாய் குறைந்து சோளம் வர்த்தகமானது. இதற்கு காரணம், தேவை குறைவாக இருக்கிறது. சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தேவை குறைவாகவே இருக்கிறது. மேலும், ஏற்றுமதித் தேவையும் குறைந்திருக்கிறது. மொத்தமாக டிமாண்ட் குறைந்திருப்பதால் வரும் வாரத்திலும் விலை குறைந்தே வர்த்தகமாகும். ஜனவரி கான்ட்ராக்ட் சோளம் ரெசிஸ்டன்ஸ் 1,420 ரூபாயாகவும், சப்போர்ட் 1,360 ரூபாயாகவும் கொண்டு வர்த்தகம் செய்யவும்'' என்றார்.

மிளகு (PEPPER)

சென்ற வாரத்தில் மிளகு விலை தேவைக்கு ஏற்ப சீராக இருந்தது. இம்மாத கடைசியில் புதிய வரத்து அதிகமாக வரும் என்ற எதிர்பார்ப்பால் இம்மாத கடைசியில் விலை குறைவு ஏற்படலாம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை வரவிருப்பதால் அது விலையில் பிரதிபலித்தது. நேஷனல் கமாடிட்டி அண்ட் டெரிவேட்டிவ் எக்ஸ்சேஞ்ச் கொச்சியில் இருக்கும் குடோனுக்கு சீல் வைத்துள்ளது. சுமார் 6,000 டன் மிளகு மினரல் ஆயிலால் கழுவப்பட்டு வைத்திருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளதால், இதனை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு செய்ய இருக்கிறது. தேவை குறைவாகவும், வரத்து அதிகமாகவும் இருப்பதால் வரும் வாரத்தில் மிளகு விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம் (JEERA)

அதிகரித்துள்ள ஏற்றுமதி ஆர்டர் மற்றும் உற்பத்திக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை, குறுகிய விலை வித்தியாசத் தில் வர்த்தகமானது ராபி சீஸனில் விதைக்கப்படும் ஜீரகப் பயிர் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வர்த்தகர்கள் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். மேலும், துருக்கி மற்றும்

அக்ரி கமாடிட்டி!

சிரியாவில் உற்பத்தி குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற வாரத் தில் உஞ்ஹா சந்தைக்கு 5,000 பைகள் வந்தன (ஒரு பை என்பது 55 கிலோ). நூறு கிலோ 14,400 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஏற்றுமதி டிமாண்ட் அதிகரித்துள்ளதாலும், உற்பத்தி குறைந்துள்ளதாலும் வரும் வாரத்தில் விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

ஏலக்காய் (CARDAMOM)

சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்தே வர்த்தகமானது. ஏலக்காய் விற்பனை செய்யப்படும் இடங்களில் விற்பனை குறைந்ததால் வடமாநில வர்த்தகர்கள் ஏலக்காய் வாங்க முன்வரவில்லை. ஏலக்காய் உற்பத்தி குறைந்துள்ளதால் நடுத்தர காலத்தில் விலை ஏறலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் 18,000 டன்னாக இருந்த ஏலக்காய் உற்பத்தி, இந்த வருடம் 12,000 டன்னாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வாரத்தில் இடுக்கி சந்தையில் 48 டன் வரத்தும், 47 டன் விற்பனையும் நடந்தது. ஒரு கிலோ சராசரி விலை 779 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 984 ரூபாய்க்கும் சென்ற வாரத்தில் கேட்கப்பட்டது.

மிளகாய் (CHILLI)

வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே மிளகாய் விலை குறைந்து வர்த்தகமாகி வந்தது. மேலும், டிமாண்ட் குறைவு மற்றும் உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங் களால் விலை குறைந்தே இருந்தது. குண்டூரில் மிளகாய் பயிரிடப்பட்டிருப்பது 20-லிருந்து 25 சதவிகிதம் குறைந்திருக்குமென விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். எனினும், மொத்தமாகப் பார்க்கும்போது மிளகாய் உற்பத்தி சென்ற வருடத்தைவிட 7-8% அதிகரிக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்து வரும் சில வாரங்களில் மிளகாய் உற்பத்தி செய்யும் இடங்களில் அறுவடை தொடங்கும் என கூறப்படுகிறது. உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் வரும் வாரத் திலும் விலை குறைந்து வர்த்தக மாகும்.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism