Published:Updated:

கொங்குநாட்டு கோக்குமாக்குகள்!

கொங்குநாட்டு கோக்குமாக்குகள்!

கொங்குநாட்டு கோக்குமாக்குகள்!

கொங்குநாட்டு கோக்குமாக்குகள்!

Published:Updated:
கொங்குநாட்டு கோக்குமாக்குகள்!
கொங்குநாட்டு கோக்குமாக்குகள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொ
ங்கு பெல்ட்டில் மட்டும் நூதன பண மோசடிகள் நேற்றும், இன்றும்... என்றும் கொடிகட்டி பறக்கின்றன! எதிர்காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் சில மோசடி விவகாரங்கள் சந்தடியில்லாமல் நடந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்!

உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் ஏரியாவில் மலைப்பாறைகள் பகுதி... ஒரு சொகுசு கார் வந்து நிற்கிறது! சாட்டிலைட் மேப்பில் அந்த ஏரியாவில் கிரானைட் கற்கள் நிறைந்திருப்பதாகக் காட்டும் புகைப்படங்களை கறுப்பு-வெள்ளையில் காட்டியபடி இறங்குகிறார்கள்.

வாட்டசாட்டமான சைஸில் ஒரு புரோக்கர். அவரைத் பின்தொடர்ந்து கையில் பணப்பையுடன் சிலர். உலகத்திலேயே விலை உயர்ந்த சிவப்பு கிரானைட் கற்கள் சிலவற்றை நகைப் பெட்டியில் இருந்து எடுத்துக் காட்டுகிறார் புரோக்கர். வெயில் பட்டு மின்னுகிறது! அவசரமாகப் பெட்டியை மூடிவிட்டு, ''யூரின் போற மாதிரி நிலத்தைப் பாருங்கள்! வேறு ஏதுவும் வாயைத் திறக்காதீங்க. வேற இடத்துக்குப் போயி மீதியைப் பேசிக்குவோம். ஏன்னா... பக்கத்து நிலத்துக்காரனுக்குத் தெரிஞ்சா, அவனோட நிலத்து விலைய கூட்டிடுவான்... புரியுதா?'' என்று கம்மலான குரலில் சொல்கிறார்...

வாயைப் பொத்தியபடி வந் வர்கள் நிலத்தில் நடக்கிறார்கள்.

''ஒரு ஏக்கர் மூணு லட்சம் விலை. ஈ.சி. மற்ற டாக்குமென்ட்களுக்காக ஒரு லட்சம் அட்வான்ஸாக் கொடுங்க'' என்கிறார் புரோக்கர். பணம் கைமாறுகிறது. அடுத்த சில நாட்களில், பணத்தைக் கொடுத்தவர்கள் வருகிறார்கள். அதே நிலத்தில்... டை கட்டிய சிலர்... பார்க்க, அதிகாரிகள்போல நடமாடுகிறார்கள். அவர்களைத் தூரத்தில் இருந்தபடி காட்டி, ''ஏதோ கனிமவள அதிகாரிகள் ரெய்டு... கிளம்புங்க... அப்புறம் பார்க்கலாம். அவுங்களைச் சமாளிக்கக் கொஞ்சம் பணம் தேவைப்படுது'' என்று சுற்றும்முற்றும் பார்த்து கையை நீட்டுகிறார்கள். வந்தவர்கள் தட்சணையைத் தந்துவிட்டு தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

அடுத்தமுறை, ''அட நீங்க வேற! சசிகலாம்மா, ராவணன் சார்... இவங்க ஆளுங்க வந்துட்டாங்க. அவுங்களை சமாளிச்சு அனுப்புறதுல இருக்கோம். உங்களுக்குத்தான் தருவோம்'' என்று சொல்லி இந்த முறையும் பணம் கேட்கிறார்கள். இப்படியாகப் பல லட்சத்தை அழுகிறார்கள் கிரானைட் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கும் குறுக்குபுத்தியில் வந்தவர்கள்.  

- இப்படி விதவிதமான 'பீலா'-க்களை அவிழ்த்துவிட்டபடி இருக்கிறார்கள் புரோக்கர்கள். ஒருகட்டத்தில் பணத்தை விட்டவர்கள் ஏமாற்றத்தை உணர்ந்து 'லபோ-திபோ'வென்று அலறுகிறார்கள். போலீஸுக்குப் போனால், பணத்தின் ரிஷிமூலத்தைத் தோண்டுவார்கள் என்பதால் மௌனமாகிப் போகிறார்கள். இதைத்தான் எதிர்பார்த்து மோசடியைத் தொடருகிறது அந்தக் கும்பல்.

'புதுக் கல்லூரி ஆரம்பிக்கிறோம்' என்பதே இன்னொரு வகை மோசடியின் மையப்புள்ளி.

ஐந்து லட்சம் ரூபாய் சகிதம் வரவேண்டும். ஐந்து ஸீட்டுகள் இலவசம். கல்லூரியின் டைரக்டர் என்று கல்யாண பத்திரிகைகளில் போட்டுக்கலாம்... இப்படி பல போலி வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகிறது! ஜாயின்ட் - வென்ச்சர் முறையில் நாம் கல்லூரி ஆரம்பிக்கப்போகிறோம். தங்களுக்கே உரித்தான விளம்பரத்தைச் செய்து ஆட்களை வரவழைக்கிறார்கள். இதை நம்பி பணத்துடன் வருகிற நபர்களை மோசடி பேர்வழிகள் அழைத்துப்போகிறார்கள். அட்வான்ஸாக ஒரு தொகை கைமாறுகிறது!

கொங்குநாட்டு கோக்குமாக்குகள்!

எருமை மாடு மேயும் நிலப் பகுதி... கரடு, முரடான வழிப் பாதை. தூரத்தில், கல்லூரி பெயர் போர்டில் தொங்கும். அங்கே... தரையில், செங்கல், சரளை கற்கள் கொட்டிக்கிடக்கும். இவைதான் மோசடிப் பேர்வழியின் முதலீடுகள். ஆனால், அறுவடையோ... கோடிக்கணக்கில்!

அடுத்து, 'நம்ம கல்லூரியை வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் கொலாபரேஷன் செய்யப் போகிறோம். அங்கிருந்து புரொபசர்கள் நம்ம இடத்துக்கு வரப்போகிறார்கள்'' என்பார்கள்.

திருவண்ணாமலை ஏரியாவில் தெருவில் நடமாடும் வெளிநாட்டு நபர்களை கொத்தாகத் தூங்கிவந்து அவர்களுக்கு டிப்-டாப் ஆசாமி போல மேக்கப் போட்டு விழாக்களுக்கு அழைத்து வருவதில் எக்ஸ்பர்ட்டான சில புரோக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களின் உபயத்தில் வெளிநாட்டு புரொபசர்கள் ரெடி 'ஏதும் பேசக்கூடாது. தலையை மட்டும் ஆட்ட வேண்டும்' என்பதே இந்த புரொபசர்களுக்கு புரோக்கர்கள் போடும் கண்டிஷன்.

சொகுசு காரில் கல்லூரி வரப்போகும் இடத்துக்கு வந்து இறங்குவார்கள். விழா துவங்கும். கல்லூரி ஆசாமி தரப்பில் வீரஉரைகள் இடம்பெறும்! ஒருநாள் கூத்து அன்றோடு முடிகிறது.

அடுத்தது... கல்லூரி கட்ட என்.ஓ.சி. வாங்க வேண்டும், டெல்லியில் இருந்து அதிகாரிகள் விசிட்... இப்படி ஒவ்வொரு காரணங்களாகச் சொல்லி மாதக்கணக்கில் ஓட்டுவார்கள். பணத்தைக் கொடுத்தவர்கள்  சந்தேகப்பட்டு அந்தக் கல்லூரி ஆசாமியைத் தொடர்பு கொண்டால், நேரத்துக்குத் தகுந்தமாதிரி ஏதாவது கதையைச் சொல்லி சமாளிப்பார்கள்.

இந்தக் கூத்து இப்படியென்றால், கவுந்தப்பாடி ஏரியாவில் நடந்த கூத்து வித்தியாசமானது - கம்ப்யூட்டர் படிப்பு படித்த இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடி இது!

''நாங்கள் பில்கேட்ஸுக்கு சாஃப்ட்வேர் புரோகிராம்களை அனுப்பி அவரை அசத்தி அவர் மூலம் நிறைய வருமானம் பெறப் போகிறோம். இந்த அசெய்ன்மென்டுக்கு பிராசஸிங் ஃபீஸ் ஆக முதலில் ஒரு லட்சம் கட்டவேண்டும். மாதம் ரூ.10 ஆயிரம் வீடு தேடிவரும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான்! நாங்கள் கொடுக்கும் பேப்பரில் உள்ள டெக்னிக்கல் வரிகளை டைப் பண்ணி எங்களுக்குத் தரவேண்டும் என்று செல்போன் மூலம் தகவல் அனுப்பினார்கள்.

ஏழு கோடி ரூபாய்கள் சேர்ந்தன. முதல் மாதம் வீடு தேடி முதல் தவணை போனது. அடுத்த தவணை போகவில்லை. அதற்குள், பெருந்தொகையை முதன்முதலாகப் பார்த்த மோசடி கும்பல் அவற்றை தாறுமாறாகச் செலவு செய்ய... போலீஸின் சந்தேகப் பார்வையில் சிக்கினார்கள். போலீஸ் நுழைந்தது. ஏப்பம்விட்டது போக, ரூ.50 லட்சத்தைத்தான் கைப்பற்றினார்கள்.

மேலே சொன்ன மூன்று சம்பவங்களும் வெவ்வேறு உருவில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஏமாறுகிறவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மூன்று சம்பவங்களும் நடந்தது கொங்கு பெல்ட்டில்தான்! ஏன் கொங்கு பெல்ட்டில் மட்டும் இது மாதிரியான மோசடிகள் புதிது புதிதாக நடக்கிறது?

இந்த தில்லாலங்கடி வேலைகளை எதிர்த்து போராடி வருபவர் என்ன சொல்கிறார் என்று அடுத்த வாரம் பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism