Published:Updated:

முக்கிய புத்தகம் - பிஸினஸை வளர்க்கும் சி.எஸ்.ஆர்.!

அறிமுகம்

முக்கிய புத்தகம் - பிஸினஸை வளர்க்கும் சி.எஸ்.ஆர்.!

அறிமுகம்

Published:Updated:
முக்கிய புத்தகம் - பிஸினஸை வளர்க்கும் சி.எஸ்.ஆர்.!
முக்கிய புத்தகம் - பிஸினஸை வளர்க்கும் சி.எஸ்.ஆர்.!

ரு நிறுவனத்தின் நோக்கம் என்ன? அதிக லாபம் சம்பாதிப்பதுதான் என சின்னக் குழந்தைகூட சொல்லிவிடும். ஆனால், லாபம் மட்டும்தான் நோக்கமா என்றால் இல்லை, லாபத்தோடு சில சமூக அக்கறைகளும் நிறுவனங்களுக்குத் தேவை என்கிற சிந்தனை இன்றைக்கு உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது. இந்த அக்கறைதான் 'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி’ (சுருக்கமாக, சி.எஸ்.ஆர்.) என்கிற அடைமொழியோடு பலரும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எது சரியான சி.எஸ்.ஆர். என்பதற்கு விடை கிடைக்காமல் குழம்பிப்போய் கிடக்கின்றன பல கம்பெனிகள். தொழிற்சாலை அமைந்திருக்கும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவது, மருத்துவ முகாம் நடத்துவது, மரம் நடுவது போன்ற வேலைகளைச் செய்வதே சி.எஸ்.ஆர். என்று நினைக்கின்றன சில கம்பெனிகள். ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களோ புதுப்புது வகையான சி.எஸ்.ஆர்.களை கண்டுபிடித்து, அதை திறமையாகச் செய்து வருகின்றன.

சி.எஸ்.ஆர்.களை புதுமையாக வடிவமைத்துக்கொள்வதோடு, அதன் மூலம் தங்களது பிஸினஸை எப்படி எல்லாம் வளர்க்கமுடியும் என்பதை இந்தப் புத்தகத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பிலிப் கோட்லர்.

நல்ல விஷயங்கள் எப்போதுமே ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை உலகம் முழுக்க உண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் 'நல்லது, வேலை செய்யும்’ என்கிற அர்த்தத்தில் 'Good Works’ என இந்தப் புத்தகத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருப்பது அருமை.  

உலகம் முழுக்கப் பல்வேறு பொருட்களை பயன்படுத்திவரும் மக்களே, வித்தியாசமாக சி.எஸ்.ஆர். செய்துவரும் நிறுவனங்களை தானாக முன்வந்து ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்கிறார் ஆசிரியர். அமெரிக்க கன்ஸ்யூமர்கள் பற்றி விரிவான ஆய்வு நடத்திவரும் கோன் கம்யூனிகேஷன்ஸ் கடந்த ஆண்டில் ஒரு சர்வே நடத்தியது. இதில் கனடா, பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களை இன்டர்வியூ செய்தது. இதில், கருத்து சொன்னவர்களில் 94 சதவிகிதம் பேர், ஏதாவது ஒரு சமூக நோக்கத்தோடுச் செயல்படும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்குவதற்குத் தயார் என சொன்னார்கள்.  

##~##
நல்ல நோக்கத்தோடு நடக்கும் நிறுவனங்கள் நன்றாகவே பிஸினஸ் செய்கின்றன என்பதற்கு நிறைய உதாரணங்கள் இந்தப் புத்தகம் முழுக்கவே இருக்கிறது. சாம்பிளுக்கு ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் நிறுவனம். நியாயமான விலையில் பொருட்களை வாங்குவது, சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடந்துகொள்வது உள்பட சில விஷயங்களை தனது சி.எஸ்.ஆர்.-ஆக 2008-ல் அறிவித்தது ஸ்டார்பக்ஸ். இதன்பிறகு இந்த நிறுவனம் அபார வளர்ச்சி காணத் தொடங்கியது. 2010-ல் ஃபார்ச்சூன் 500 நிறுவனமாக மாறி, 2011-ல் அதிவேகமாக வளரும் நிறுவனம் என்கிற பட்டியலில் 47-வது இடத்தையும், பலரும் விரும்பும் நிறுவனம் என்கிற பட்டியலில் 16-வது இடத்தையும், வேலை பார்ப்பதற்கு மிகச் சிறந்த கம்பெனி என்கிற பட்டியலில் 98-வது இடத்தையும் பெற்றது. இத்தனைக்கும் காரணம், இதன் சி.எஸ்.ஆர்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பற்றிய இன்னொரு விஷயத்தையும் பார்ப்போம். இதாஸ் வாட்டர் 2002-ல் தொடங்கப்பட்ட கம்பெனி. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பது இந்நிறுவனத்தின் பிஸினஸ். உலகம் முழுக்க குழந்தைகளுக்குச் சுத்தமான தண்ணீர் கிடைக்கவேண்டும் என்பது இந்நிறுவனம் பின்பற்றிய சி.எஸ்.ஆர். இந்நிறுவனத்தை 2005-ல் வாங்கிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம், அதன் சி.எஸ்.ஆரை. தொடர்ந்து பின்பற்றும் என்றது. ஒரு பாட்டில் தண்ணீர் விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஐந்து செண்ட்-ஐ குழந்தைகளுக்குச் சுத்தமான தண்ணீர் அளிக்கும் நோக்கத்துக்குச் செலவழிக்கும் என்று அறிவிக்க, இதாஸ் வாட்டர் பாட்டிலை பலரும் வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தனர். விளைவு, சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தர, அதன் மூலம் 4.2 லட்சம் பேருக்கு சுத்தமான குடி தண்ணீர் கிடைத்தது!

ஸ்டார்பக்ஸ் மட்டுமல்ல, ஜெனரல் எலெக்ட்ரிக், ஐ.பி.எம்., நைக், ஜான்சன் அண்ட் ஜான்சன், டார்கெட், லெவீஸ், ஃபைசர் என பல்வேறு நிறுவனங்கள் செய்யும் வித்தியாசமான

சி.எஸ்.ஆர்.களை விலாவாரியாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் பிலிப் கோட்லர். இவர் மார்க்கெட்டிங் நிர்வாகத் துறையில் நிபுணர். கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் பேராசிரியர். இவர் டேவிட் ஹெசேக்கியல் மற்றும் நான்சி ஆர்.லீ என்கிறவர்களுடன் சேர்ந்து இப்புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

எளிய பல உதாரணங்களுடன் எழுதப்பட்டு இருக்கும் இந்தப் புத்தகத்தை எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு பிஸினஸ்மேனும் கட்டாயம் படிக்கவேண்டும்.    

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism