
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1992-ல் தனியாகத் தொழிலில் இறங்கினேன். நமது நோக்கத்தில் வெற்றி பெறவேண்டுமெனில் ஒவ்வொரு பணியாளரையும் ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். அதுபோல, நமது வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழைவது முதல் வெளியேறுகிற வரை இன்முகத்தோடு வரவேற்று, அவர்களுக்குத் தேவையான விவரங்களை சளைக்காமல் தரவேண்டும். இதில் எப்போதும் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
பத்து கடைகளில் ஏறி இறங்கிதான் ஒரு நகையை வாங்குவார்கள். நகை வாங்குபவர்களின் மனநிலை இதுதான். ஆனால், எங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் விலையை விசாரித்துவிட்டு அடுத்தக் கடையில் வாங்கலாம் என வெளியேறியது கிடையாது. செய்கூலி, சேதாரம், நகையின் விலை, எவ்வளவு சலுகை என்பதுபோன்ற விவரங்களை வெளிப்படை யாகவே குறிப்பிட்டு விளம்பரம் செய்கிறோம்.
புதிய புதிய டிசைன்கள் மட்டுமல்ல, பாரம்பரியமான டிசைன்களிலும் நகைகள் உற்பத்தி செய்கிறோம். இதற்காக சொந்தமாகவே டிசைன் சென்டரும், சொந்த உற்பத்திக்கூடமும் வைத்துள்ளோம். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு சில நூறு வாடிக்கையாளர்கள் மட்டும் வந்து செல்லும் நிறுவனமாக இருந்த நிலை மாறி இன்று திருச்சி, மதுரை என பிற நகரங்களிலும் கிளை பரப்பி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.
தொழில் தொடங்கி இருபது வருடங்கள் ஆகி விட்டாலும், இன்னமும் புதிதாக கடை தொடங்கிய உற்சாகத்தோடுதான் உழைக்கிறேன். எப்போதும் மக்களிடத்தில் உண்மை யாக இருந்தால் வெற்றி நம்மைத் தேடி வரும் என்பதே என் அனுபவம்!''
- நீரை.மகேந்திரன்,
படம்: சொ.பாலசுப்ரமணியன்.