Published:Updated:

கோல்டு இ.டி.எஃப்.-ல் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

கேள்வி - பதில்

கோல்டு இ.டி.எஃப்.-ல் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

கேள்வி - பதில்

Published:Updated:
கோல்டு இ.டி.எஃப்.-ல் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

எனக்கு வயது 28. நான் கோல்டு இ.டி.எஃப். ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளேன். அடுத்த ஐந்து வருடங்களில் இதன் லாபம் எப்படியிருக்கும்? அல்லது ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?  

- கார்த்திகேயன், சென்னை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரா.கணேஷ், நிதி ஆலோசகர். கேமோமைல் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

கோல்டு இ.டி.எஃப்.-ல் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

''முதலீடுகளில் எது சிறந்தது என்று ஒப்பிடுவதைவிட, உங்களது வசதி மற்றும் தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக, எல்லா முதலீட்டு வாய்ப்புகளிலும் பிரித்து முதலீடு செய்வதே நல்லது. தவிர, குறிப்பிட்ட ஒரு தேவைக்காக முதலீடு செய்கிற பட்சத்தில் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக அந்த முதலீடு இருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கோல்டு இ.டி.எஃப். திட்டங்கள் ஆண்டிற்கு சுமார் 23.50 சதவிகிதம் வருமானம் தந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் தங்கத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்ததே இந்த அதிக வருமானத்திற்குக் காரணம். இதேபோன்ற வருமானம் எதிர்காலத்திலும் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 10 முதல் 15 சதவிகிதம் வரையிலும் வருமானம் கிடைக்கலாம். சந்தையின் செயல்பாட்டை பொறுத்தே இந்த வருமானம் அமையும்.  ரியல் எஸ்டேட் திட்டம் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தே வளர்ச்சியைக் கணிக்க முடியும். எனவே, ஒரு முதலீட்டு ஆலோசகருடன் கலந்துபேசி முடிவெடுப்பது நல்லது.''

ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனம் எம்.எல்.எம். முறையில் இன்ஷூரன்ஸ் திட்டம் அறிவித்துள்ளது. இதில் பணத்தைப் போடலாமா?

- பி.கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி.

பி.சுரேஷ்பாபு, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''எம்.எல்.எம். முறையில் ஏதாவது ஒரு பொருளை மக்களிடம் விற்பனை செய்வது அல்லது பணத்தைத்  திரட்டுவது போன்ற பல செயலை பல நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. குறிப்பாக, ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற இடங்களை மையமாகக்கொண்டு இதுபோன்ற நிறுவனங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிறுவனங்கள் தரும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். இன்ஷூரன்ஸ் திட்டங்களை எம்.எல்.எம். முறையில் விநியோகிப்பது சரியல்ல. அந்தத் திட்டங்களில் சேருவதும் சரியான முடிவாக இருக்காது. பெயரோடு விளங்கும் பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இருக்க, இதில் போய் விழவேண்டாம்.''  

கோல்டு இ.டி.எஃப்.-ல் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

இடமும்   வீடும்  மனைவி பெயரில் உள்ளது. இருவரது பெயரிலும் வீட்டுக் கடன் வாங்கியிருந்தோம். தற்போது நான் அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பதாகக் கணக்கிட்டு மனைவி பெயருக்கு வாடகை அளித்து வருகிறேன். இந்த வாடகை செலவைக்காட்டி வரிச் சலுகையும் பெறுகிறேன். நான் திருப்பிச் செலுத்தும் வீட்டுக் கடன் அசலுக்கான வட்டிக்கும் வரிச் சலுகை பெறமுடியுமா?

- பிரகாசம், ஓசூர்.

ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்.

''வீட்டு வாடகைக்கான வரிச் சலுகையை ஏற்கெனவே நீங்கள் பெற்றுவருவதால் வீட்டுக் கடனுக்கான திருப்பிச் செலுத்தும் தொகைக்கு நீங்கள் வரிச் சலுகை பெற முடியாது. ஆனால், உங்கள் மனைவி இதற்கு வரிச் சலுகை பெறமுடியும். உங்கள் மனைவிக்கு வரும் வீட்டு வாடகையை வருமானமாகக் கணக்கிட்டு அதிலிருந்து வீட்டுக் கடனுக்காகச் செலுத்தும் வட்டியை கழித்துக்கொள்ளலாம். தவிர, வீட்டுக் கடனுக்காகச் செலுத்துகிற அசலில் 80சி-யின்படி வரிச் சலுகையையும் உங்கள் மனைவி பெறமுடியும். சொத்து உங்கள் மனைவி பெயரில் இருப்பதால் அவர் மட்டுமே இந்த வரிச் சலுகை பெற முடியும்.''

கோல்டு இ.டி.எஃப்.-ல் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

கமாடிட்டியில் தினசரி வர்த்தகம் செய்வது அல்லது பொசிஷன் எடுப்பது இரண்டில் எதில் லாபம் பார்க்க முடியும்?

- குமரகுரு, சென்னை.

ரமணன், கமாடிட்டி நிபுணர்.

''சில நேரங்களில் தினசரி வர்த்தகம் லாபம் தரும், சில நேரங்களில் பொசிஷன் எடுப்பதன் மூலம் லாபம் பார்க்கலாம். அதாவது, சந்தையின் போக்கை கவனித்து முடிவெடுத்தால் இரண்டு நிலைகளிலும் லாபம் பார்க்க முடியும். உதாரணமாக, ரூபாயின் மதிப்பு நிலை யாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருக்கும் போது தினசரி வர்த்தகம் செய்வது லாபகரமாக இருக்கும். ரூபாய்

கோல்டு இ.டி.எஃப்.-ல் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

மதிப்பு நிலையாக இருக்கும்போது பொசிஷன் எடுத்து பின்னர் விற்பனை செய்யலாம். சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடு காரணமாக கமாடிட்டி சந்தை கடுமையாக இறங்கும்பட்சத்தில் பொசிஷன் எடுப்பது நல்ல லாபத்தைத் தரும். எனவே, சூழ்நிலையைப் பொறுத்து எதை தேர்வு செய்யலாம் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.''

நான் இருபது லட்சம் ரூபாய்க்கு  எண்டேவ்மென்ட் பாலிசி எடுக்க விரும்புகிறேன். தனியார் அல்லது பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம், எவற்றில் எடுப்பது நல்லது?  

- எஸ்.ரவிக்குமார், குமாரமங்கலம்.

சுந்தரராஜன், வெல்த் அட்வைஸர், ஐ.என்.ஜி. வைஸ்யா.

''பொதுத்துறை நிறுவனத்தைப் பொறுத்தவரை, எல்.ஐ.சி.யில் மட்டுமே எண்டோவ்மென்ட் பாலிசி இருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ. போன்ற தனியார் காப்பீடு நிறுவனங்களும் எண்டோவ்மென்ட் பாலிசி வழங்குகின்றன. பிரீமியத்தைப் பொறுத்தவரை இரண்டிற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. விரைவான சேவை மற்றும் க்ளைம் பெறுவதில் எளிதான நடைமுறை போன்றவற்றில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு இருக்கும். பொதுவாக இன்ஷூரன்ஸை முதலீட்டு நோக்கில் அணுகுவதற்குப் பதிலாகக் குறைந்தப் பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்துக் கொண்டு, மீதமுள்ள தொகையில் நல்ல வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்யலாம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism