Published:Updated:

கமாடிட்டி... கரன்சி... கற்கலாம்!

கமாடிட்டி... கரன்சி... கற்கலாம்!

கமாடிட்டி... கரன்சி... கற்கலாம்!

கமாடிட்டி... கரன்சி... கற்கலாம்!

Published:Updated:

கலக்கி எடுத்த கோவை வாசகர்கள்!

கமாடிட்டி... கரன்சி... கற்கலாம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நா
ணயம் விகடன் மற்றும் குட்வில் கமாடிட்டீஸ் நிறுவனம் இணைந்து அண்மையில் கோயம்புத்தூரில் 'கமாடிட்டி... கரன்சி... கற்கலாம்’ என்கிற முதலீட்டாளர் மற்றும் வர்த்தகர் களுக்கான விழிப்பு உணர்வு கூட்டத்தை நடத்தியது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பல்லடம், போத்தனூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை, ஈரோடு, கரூர், காங்கேயம் உள்ளிட்ட ஊர்களிலிருந்தும் வந்திருந்த வாசகர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. பெண்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

முதலில் சந்தை நிபுணர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் பங்குச் சந்தைக்கும் கமாடிட்டி வர்த்தகத்துக்கும் உள்ள வேறுபாட்டில் தொடங்கி, கமாடிட்டி சந்தையில் அனைவரும் செய்யும் தவறுகளையும், அதைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் விளக்கிப் பேசினார். அடுத்து இந்தியாவின் முன்னணி கமாடிட்டி சந்தையான எம்.சி.எக்ஸ்-ன் தென் மண்டல மேலாளர் டி.ஜி. செந்தில்வேலன், கமாடிட்டியில் மற்றவர்களின் நெகட்டிவ் பாயின்டை எப்படி பாசிட்டிவ் பாயின்டாக எடுத்துக்கொண்டு வர்த்தகத்தில் ஜெயிக்கலாம் என சூட்சுமங்களைக் கற்றுத் தந்தார். குட்வில் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் திட்டங்களை அதன் கோவை கிளை மேலாளர் எஸ்.சிவராமகிருஷ்ணன் விளக்கிப் பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவாக, கேள்வி - பதில் பகுதி இடம் பெற்றது. இதில், கமாடிட்டி மற்றும் கரன்சி தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு டாக்டர் கார்த்திகேயன், செந்தில்வேலன் மற்றும் குட்வில் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பாஸ்கரன் பதில் அளித்தனர். சிறந்த கேள்விகள் கேட்ட வாசகர்களுக்குப் புத்தகம் பரிசு அளிக்கப்பட்டது.

செவிக்கு வகையான விருந்தாக இந்த நிகழ்ச்சி அமைந்ததால் சாப்பாட்டு நேரம் கடந்தபிறகும் வாசகர்கள் கமாடிட்டி பற்றிய பல்வேறு சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொண்டனர். எப்போதுமே பணம், சேமிப்பு, முதலீடு போன்ற விஷயங்களில் கொங்கு சீமைக்காரர்களுக்குக் கூடுதலான ஆர்வம் உண்டு என்பதை கோவை கலையரங்கத்தில் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.  

- சி.சரவணன்,
படங்கள்: தி.விஜய்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism