


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள், குறைவான தேவை, கரன்சி ஏற்ற இறக்கம் போன்ற காரணங்களால் 2012-ல் அக்ரி கமாடிட்டி சந்தை மந்தமாக இருந்தது. இனிவரும் 2013-ம் ஆண்டில் அக்ரி கமாடிட்டிகள் எப்படி செயல்படும் என்பதை விளக்கமாகக் கூறுகிறார் ஜியோஜித் காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் அனலிஸ்ட் ஹரிஷ்.

##~## |
எனினும் மிளகு வரத்து குறையும் என்ற தகவலால் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. ஒரு குவிண்டால் மிளகு 36,000 ரூபாய் முக்கிய சப்போர்ட் லெவலை தாண்டிவிட்டதால், 30,000 வரை செல்லக்கூடும்.

எம்.சி.எக்ஸ்-ல் சென்ற ஆண்டின் குறைந்தபட்ச விலையான 545 ரூபாயிலிருந்து ஏற்றம்கண்ட ஏலக்காய் தற்போது ஒரு கிலோ 1,048 ரூபாய்க்கு விலை போகிறது. 2012-ம் வருடத் தொடக்கத்தில் 600 ரூபாயில் தொடங்கி, ஜூலையில் 1,508 வரை சென்றது. பருவமழை பாதிப்படையும் என்கிற தகவல்தான் ஏலக்காய் விலை உயர முக்கிய காரணம். எனினும், வரத்து அதிகரித்தது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிமாண்ட் குறைந்தது போன்ற காரணங்கள் விலையைக் குறைத்தது. கௌதமாலா பகுதியில் விளையும் ஏலக்காய்க்கு சர்வதேச சந்தையில் நல்ல டிமாண்ட் இருந்தது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மற்றும் எத்தியோப்பியாவில் புதிதாக ஏலக்காய் பயிரிடப்படுகிறது. இது இந்தியாவிற்கு புதிய போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. 2013-ம் ஆண்டு துவக்கத்தில் ஒரு கிலோ ஏலக்காய் 1,000-1,200 ரூபாய்க்கு வர்த்தகமாகி, அதன்பிறகு 1,500-1,800 ரூபாய் வரை செல்ல வாய்ப்புண்டு.

பல வருடங்களின் குறைந்த விலையான 3,474 ரூபாயி லிருந்து இந்த வருடம் ஏற்றம் அடையத் தொடங்கியது மஞ்சள் விலை. 2010 ஜூலை மாதத்திலிருந்து மஞ்சளின் விலை குறைந்துகொண்டே வந்தது. 2012-ம் வருட ஆரம்பத்தில் 4,476 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் மஞ்சள் அடுத்த நான்கு மாதத்தில் 3,496 ரூபாயாக குறைந்தது. அதன்பிறகு விலை அதிகரித்து 6,984 ரூபாய் வரை உயர்ந்து, தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் 6,780 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. விலை குறைந்ததால் விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதைக் குறைத்துக்கொண்டனர். தவிர, மழை குறைந்ததும், மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலை தரவேண்டும் என்ற கோரிக்கையும் மஞ்சள் விலையில் பிரதிபலித்தது. தற்போதுள்ள நிலைமையை வைத்துப் பார்த்தால், 2013-ம் ஆண்டு மஞ்சள் விலை நல்ல ஏற்றம் காணும். உடனடி ரெசிஸ்டன்ஸான 7,000 ரூபாயைத் தாண்டிச் சென்றால், 9,000 ரூபாயைத் தொட்டு வருடத்தின் பிற்பாதியில் 11,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்புண்டு.

இந்த வருடம் ஜீரகம் விலை அதிக விலை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமானது. குவிண்டால் 17,414 - 11,755 ரூபாய் என்ற ரீதியில் வர்த்தகமானது. 2012 முதல் மூன்று மாதத்தில் விலை குறைந்தாலும், அதன்பிறகு விலை சற்று மேலே ஏறத் தொடங்கியது. அதிக உற்பத்தி இருக்கும் என்ற தகவல் வெளியானதால் விலை மீண்டும் இறங்கியது. எனினும், சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக 2012-ம் வருடம் முழுவதும் இந்திய ஜீரகத்திற்கு சர்வதேச சந்தையில் நல்ல டிமாண்ட் இருந்தது. ராபி காலத்தில் விதைத்திருக்கும் ஜீரக விளைச்சல் குறையும் என்ற எதிர்பார்ப்பும் விலையில் பிரதிபலித்தது. இந்த வருட ஆரம்பத்தில் 17,000-11,000 ரூபாய் என்ற ரீதியில் விலை இருக்கும். அதன்பிறகு 11,000 என்ற சப்போர்ட் விலையை உடைத்து, 8,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது.

2012-ல் குவிண்டால் 6,748 - 4,430 ரூபாய் என்ற ரீதியில் என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் மிளகாய் வர்த்தக மானது. சந்தையைக் கலவரப்படுத்தும் எந்தத் தகவலும் இந்த வருடம் வரவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் 10,970 ரூபாய் என்ற வரலாற்று விலையை அடைந்தது. அதன்பிறகு விலையில் கரெக்ஷன் ஏற்பட்டு, 4,946 என்ற ரீதியில் குறைந்தது. அதிக கேரி ஓவர் ஸ்டாக் மற்றும் அதிக உற்பத்தி போன்ற காரணங்களால் மிளகாய் விலை இந்த வருடம் குறைந்தது. வரும் 2013-ம் வருட ஆரம்பத்தில் 6,200 ரூபாய் வரை செல்லலாம். இந்த லெவலை உடைத்தால் பிறகு 7,200 - 8,000 ரூபாய் வரை செல்லும்!''
வரும் 2013-ல் அக்ரி கமாடிட்டி சந்தை சாதகமாகவே இருக்கும்போல் தெரிகிறது.