Published:Updated:

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

Published:Updated:
கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

அமெரிக்காவின் ஃபிஸ்கல் கிளிஃப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுவதைப் பொறுத்தே தங்கம், வெள்ளி விலை இருக்கும்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கி
றிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மேற்கு நாடுகளில் களைகட்டியிருப்பதால் கடந்த வாரம் சர்வதேச சந்தையில் மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் நடந்தது. மேலும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது விடுமுறை நாட்கள் முடிந்து கடந்த வியாழக்கிழமை பணிக்குத் திரும்பிய கையோடு ஃபிஸ்கல் கிளிஃப் குறித்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளார். மேலும், ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் அது தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கும். எம்.சி.எக்ஸ். சந்தையில் பிப்ரவரி கான்ட்ராக்ட் வியாழக்கிழமையன்று குறைந்து வர்த்தகமானது. அமெரிக்காவின் செனட் தலைவர் ஹாரி ரீய்டு, ஃபிஸ்கல் கிளிஃப் குறித்த முடிவுகள் ஜனவரி 2-ம் தேதிக்கு முன்பு வரை எட்டப்படாது என்று சொல்லி இருக்கிறார். எனவே, இந்த வாரம் தங்கத்தில் முதலீடு செய்யும்போது அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.
கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 2.67 சத விகிதம் வரை அதிகரித்தது. டெக்னிக்கல்படி வாங்கும் நேரம் என்பதாலும், மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனால், வாரத்தின் இறுதியில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்தது. அமெரிக்காவின் பட்ஜெட் குறித்த பேச்சுவார்த்தைகள் சரியாக இல்லாததால் அங்கு பொருளாதார நெருக்கடி இருக்குமென முதலீட்டாளர்கள் அஞ்சுகிறார்கள்.

ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம் ஈராக்கில் தனது எண்ணெய் சுத்திகரிப்பை நிறுத்திவிட்டு ரஷ்யாவிலே சுத்திகரிப்பு செய்வதாகவும் அறிவித்துள்ளது. வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் இன்வென்ட்டரி மற்றும் ஃபிஸ்கல் கிளிஃப் குறித்தப் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தே விலை இருக்கும்.

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)

மெரிக்காவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு, புதிதாக வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு, அமெரிக்காவில் பட்ஜெட் குறித்தப் பேச்சுவார்த்தைகள் என பல காரணங்களால் காப்பரின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்தது.

தவிர, சீனாவிலிருந்து வெளியான பல்வேறு புள்ளிவிவரங்கள் அதன் பொருளாதாரம் முன்னேறுவதற்கான அறிகுறிகளையே காட்டுவதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் உலோகங்களுக்குச் சாதகமாக இருக்குமென கூறப்படுகிறது.  புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகே சந்தை சூடுபிடிக்கும்.

வெள்ளியின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. தற்போது பிராஃபிட் புக்கிங் நடந்துவருவதால் இந்த விலை இறங்கியது. அமெரிக்காவில் ஃபிஸ்கல் கிளிஃப் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருவதால், முதலீட்டாளர்கள்  தங்கம், வெள்ளியில் டிரேட் செய்ய யோசித்து வருகிறார்கள். தொழிற்துறை தேவையைப் பொறுத்தவரை, வெள்ளிக்கான டிமாண்ட் அதிகமாகக் காணப்படுகிறது. எனினும், இந்திய ரூபாயின் மதிப்பும் விலையில் பிரதிபலிக்கும். ஃபிஸ்கல் கிளிஃப்  பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருவதைப் பொறுத்து வெள்ளியின் விலைப்போக்கு இருக்கும்.

- பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி! (மெட்டல் & ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism