Published:Updated:

டிப்டாப் மோசடிகள் - ஏமாறும் பூமி!

டிப்டாப் மோசடிகள் - ஏமாறும் பூமி!

டிப்டாப் மோசடிகள் - ஏமாறும் பூமி!

டிப்டாப் மோசடிகள் - ஏமாறும் பூமி!

Published:Updated:
டிப்டாப் மோசடிகள் - ஏமாறும் பூமி!
டிப்டாப் மோசடிகள் - ஏமாறும் பூமி!

பின்வரும் சம்பவங்களைப் படித்தால் உங்களுக்கு விநோதமாக இருக்கலாம். ஆனால், அந்த விநோதத்தில் உள்ளே இருப்பது வேதனைதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
த்தாயிரம் டெபாசிட் தொகை நேரில் கட்டவேண்டும். வாராவாரம் இ-மெயிலில் உங்களுக்கு ஐந்து கேள்விகள் கேட்கப்படும். அதற்கு நீங்கள் 'சரியான' பதிலைச் சொன்னால், உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,500 வரவு வைக்கப்படும். கோவையில் நாலாயிரம் பேர்... சுமார் நாலு கோடி ரூபாய்களுக்கு மேல் ஏமாந்த கதைதான் இது! டெல்லியில் தலைமை அலுவலகம். இங்கே நாங்கள் அதன் ஏஜென்டுகள் என்கிற முன்னுரையுடன் 'குளோபல் ஆன்லைன்' என்கிற பெயரில் ஒரு ஆபீஸை கோவையின் முக்கியமான ஓர் இடத்தில் ஆரம்பித்தனர். உதாரணத்துக்கு சில கேள்விகளை பாருங்கள்!

1. ஓட்டலுக்குப் போவீர்களா, மாட்டீர்களா? 2. வெஜ்-ஆ, நான்வெஜ்-ஆ?  3. சினிமாவுக்கு தனியாக போவீர்களா, குடும்பத்துடன் போவீர்களா? 4. மூக்குக் கண்ணாடி அணிபவரா, இல்லையா? 5. தலை வழுக்கையா? டை போடுகிறவரா?

பத்தாயிரம் ரூபாய்க்கு ஐந்து கேள்விகள் செட் தரப்படும் என்றதும், பலமுறை பத்தாயிரம் ரூபாயைக் கட்டி ஒவ்வொரு முறைக்கும் கேள்விகளை வரவழைத்த 'நல்ல’வர்களும் உண்டு. ஓரிரு வாரங்கள் பணம் வந்தது. பிறகு, 'அம்போ'தான்! ஏமாந்தவர்கள் கோவை போலீஸுக்கு ஓடினார்கள். செந்தில், விநாயகம் என்கிற இருவரை போலீஸ் பிடித்தது. 'நாங்கள் ஏஜென்டுகள்தான். பாஸ், டெல்லியில் இருக்கிறார். அவர்தான் இந்த மோசடிக்குக் காரணம்' என்றனர். அவ்வளவுதான்... பணம் போனது போனதுதான்!

டிப்டாப் மோசடிகள் - ஏமாறும் பூமி!

ரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை... இப்படி மளிகைப் பொருட்களை முன்னிலைப்படுத்தி ஆன்லைன் வர்த்தகம் என்கிற பேனரில் பல கோடி மோசடியில் ஈடுபடுகிறவர்களும் இருக்கிறார்கள். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதுதான் இந்த மோசடி கும்பலின் கேப்டன் பாணி. பினாமி பெயரில் கம்பெனியை பதிவு செய்வார். ஆபீஸ் பிடிப்பார். போலி வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பார். கம்ப்யூட்டர் தெரிந்த ஆளை கூப்பிட்டு வேலை கொடுப்பார். கம்பெனியின் எம்.டி. என்கிற அந்தஸ்தில் பணக்கார நபரை நியமிப்பார். 'நீங்கள் ஆபீஸை பார்த்துக்கொண்டால் போதும்! மீதி வேலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று உற்சாகம் ஊட்டுவார். டாம்பீகமான ஆபீஸ், வாடகைக்கு வீடு என்று எம்.டி-க்கு அள்ளித் தருவார். எந்த ஆவணங்களிலும் தனது பெயர் இருக்காத மாதிரி பார்த்துக்கொள்வதில் கில்லாடி. எம்.டி-யின் பெயர்தான் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், மகாநதி படத்தில் வரும் கமல் கேரக்டர் மாதிரி!

ஆபீஸில் உள்ள கம்ப்யூட்டர் பணியாளரின் வேலை... அன்றாடம் எந்த மளிகைப் பொருள் இந்தியாவில் எங்கே குறைவான விலையில் கிடைக்கும் என்று கவனித்து தகவல் சொல்லச் சொல்வார். அவற்றை ஏற்றுமதி செய்யும் கம்பெனிக்கு கொட்டேஷன் வாங்கி ஆர்டர் கொடுப்பார். கூடுதல் விலை கொடுத்து இவர் வாங்குகிற சாக்கில் சின்ன மீனை போடுவார். செக் கொடுப்பார். ஒருமாதம் அதற்கு கெடு. எதிர்பார்த்த நாளில் பொருள் வரும். அதை எடுத்து குறைந்த விலைக்கு மார்க்கெட்டில் விற்பார். இவருக்கு நஷ்டம் சில லட்சங்கள் வரும். அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வார்.

அடுத்து பெரிய மீனுக்கு வலை வீசுவார். வெளிமாநிலங்களில் உள்ள நிறுவனத்தினர் நம்பி பொருட்களை அனுப்பி வைப்பார்கள். அதற்கு இவர் செக் தருவார். ஆனால், அது திரும்பி வந்துவிடும். பதறிப் போய், அங்கிருந்து பிரதிநிதிகள் வந்து இங்கே பார்த்தால், எல்லாமே மோசடி என்று தெரியவரும். இவரது மோசடி லீலைகள் அனைத்தும் 'கங்காணி’களுக்குத் தெரியும். ஆனால், அவரை யாரும் நெருங்குவதில்லை.

மெழுகுவத்தி பிஸினஸில் முதலீடு செய்யுங்கள் என்று சொல்ல, அட, இது புதுசா இருக்கே என்று திரும்பிப் பார்த்தவர்கள் பல ஆயிரம் பேர். முதலில் டெபாசிட் என்கிற பெயரில் பத்தாயிரம் ரூபாயை வசூலித்தார். மெழுகு மற்றும் அதன் உபகரணங் கள் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புக்கு தந்தார். இதை வைத்து மெழுகு வார்த்து கொண்டுவந்து கொடுத்தால், அதற்குரிய லேபர் செலவையும் தந்துவிடுவதாகச் சொன்னார். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, டெபாசிட் திரும்பத் தரப்படும் என்றார்.

இதை நம்பிச் சென்றவர்களுக்கு ஓரிரு மாதங்கள் பணம் ரெகுலராக வந்தது. அதன் பிறகு, பட்டை நாமம் போட்டுவிட்டு கம்பி நீட்டிவிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் போலீஸுக்குப் போனார்கள். அந்த ஆளைப் பிடித்து சிறையில் தள்ளியது போலீஸ். மனிதர் ஒரு மாதத்தில் திரும்பி வந்துவிட்டார். இப்போது கோவையின் வேறு ஒரு ஊரில் மீண்டும் மெழுகு பிஸினஸ் மோசடியில் இறங்கி, அமர்க்களமாக விளம்பரமும் செய்து வருகிறார். மக்கள் முதலில் ஏமாறட்டும். ஏமாந்தபிறகு புகார் செய்யட்டும். அதன்பிறகுதானே நடவடிக்கை எடுக்க முடியும் என்று வேடிக்கை பார்க்கிறது போலீஸ். இத்தனை மோசடிகளையும் செய்வது வெளிநாட்டையோ அல்லது வெளிமாநிலத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தான் என காவல் துறையினர் சொல்கின்றனர்.

கொங்கு பகுதி மட்டும் ஏன் ஏமாறும் பூமியாக இருக்கிறது என்பதற்கான காரணங்களை ஃபைனான்ஸ் மோசடிகளை எதிர்த்து போராடி வரும் கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த வக்கீல் சுபி.தளபதி சொல்கிறார். ''தொழில்ரீதியாக வளர்ந்த நகரங்களான கோவை, கரூர், சங்ககிரி, நாமக்கல், திருச்செங்கோடு, பகுதிகளில் பணப் புழக்கம் அதிகம். இதைத்தான் மோசடி நிறுவனங்கள் குறிவைக்கின்றன.

அதேபோல், இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர் பண்ணமுடியாமல் திண்டாடினர். வேறு வழியில்லாமல் அதை யெல்லாம் விற்க முன்வந்தனர். இந்த வகையிலும், விவசாயிகள் கையில் பணம் புழங்கியது. அதை வைத்துக்கொண்டு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்தனர். அவர்களிடம் கவர்ச்சி ஆசைகளை வீசி படுகுழியில் தள்ளிவிட்டது ஃபைனான்ஸ் மோசடி கும்பல். இருபது வருடங்களுக்கு முன்பு, செவன் ஸ்டார், ஃபைவ் ஸ்டார் என்றெல்லாம் மோசடி நிறுவனங்கள் முளைத்தன. பத்தாயிரம் கட்டினால், மாருதி கார்; ஐயாயிரம் கட்டினால் டி.வி.எஸ். 50 என்றெல்லாம் கவர்ச்சி விளம்பரம் செய்து மக்களை சுண்டி இழுத்து ஏமாற்றிவிட்டு ஓடினர். இப்போது அந்நிய செலாவணி பண வர்த்தனை என்கிற பெயரில் மோசடி செய்கிறார்கள். சமீப காலமாக ஈமு பண்ணை, ஆடு, நாட்டுக் கோழி, தேக்குமரம் வளர்ப்பு, கான்ட்ராக்ட் ஃபார்மிங் என வெவ்வேறு உருவில் வந்து ஏமாற்றுகிறார்கள்.

இந்த மோசடி பேர்வழிகளை ஒழிக்க அரசாங்கம் கடுமையான சட்டத்தை அமல்படுத்தாத வரையில் கொங்கு மண்டலத்தில் புதுப்புது ஏமாற்று வேலைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.''  

கோவை மண்டலத்தில் மட்டும் ஏன் இத்தனை மோசடிகள் என ஒரு போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டோம்.  அவர் சொன்ன தகவல் ஆச்சரிய மாக இருந்தது! அது அடுத்த இதழில்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism