Published:Updated:

முக்கிய புத்தகம் - நம்பர் ஒன் குஜ்ராத்

அறிமுகம்

முக்கிய புத்தகம் - நம்பர் ஒன் குஜ்ராத்

அறிமுகம்

Published:Updated:
முக்கிய புத்தகம் - நம்பர் ஒன் குஜ்ராத்
முக்கிய புத்தகம் - நம்பர் ஒன் குஜ்ராத்

ந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாதப் பெருமை குஜராத் மாநிலத்திற்கு உண்டு. அந்த மாநிலத்தின் வளர்ச்சி இந்திய நாட்டின் வளர்ச்சியைவிட அதிகமாக இருக்கிறது. இன்றைக்கு இந்தியா என்றாலே குஜராத் என்கிற அளவுக்கு அந்த மாநிலம் ஜெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கான காரணங்களை பிரபல பொருளாதார நிபுணர் பிபெக் தேப்ராய், குஜராத் மாநிலம் முழுவதும் பயணம் செய்து பலரை நேரில் சந்தித்துப் பேசி புள்ளிவிவரங்களோடு 'குஜராத்: கவர்னன்ஸ் ஃபார் குரோத் அண்ட் டெவலப்மென்ட்’ என்கிற இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்.

முக்கிய புத்தகம் - நம்பர் ஒன் குஜ்ராத்

இந்தியாவின் 5 சதவிகித மக்களைக் கொண்ட இந்த மாநிலம், நாட்டின் ஏற்றுமதியில் 21 சதவிகிதப் பங்கினைக் கொண்டிருக்கிறது. தொழில் உற்பத்தியில் இதன் பங்கு 13%. 2003-க்கு முன்பு வரை சாதாரணமாக இருந்த குஜராத் இன்றைக்கு மாடல் மாநிலமாக மாறியது எப்படி?  

கடந்த பத்தாண்டுகளில் மின்சாரம், தண்ணீர், சாலை ஆகிய அடிப்படை உள்கட்டமைப்புத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் முக்கியமான ஒரு காரணம். 2001-ல் 2000 மெகாவாட் பற்றாக்குறை மாநிலமாக இருந்தது குஜராத். இன்று கிட்டத்தட்ட அதே  அளவு அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.   ஜூலை 2012 வரையிலான மின்சார உற்பத்தித் திறன் 23,927 மெகாவாட். இதில் 14,249 மெகாவாட் உற்பத்தி தனியார் மூலம் செய்யப்படுகிறது.ஆனால், மீட்டர் இல்லாமல் மின்சாரம் எடுத்தால் அது கிரிமினல் குற்றம் என்கிற சட்டம் கொண்டுவரப்பட்டதும் முக்கியமான வளர்ச்சி.

மின்சாரத்திற்கு அடுத்தபடியாக தண்ணீர். குஜராத் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். அங்கு தனிநபர் உபயோகம் வருடத்திற்கு 1,137 கனமீட்டர். நாட்டின் தனிநபர் சராசரி உபயோகம்

2,000 கனமீட்டர். இதை சரி செய்ய சர்தார் சாரோவர் திட்டம் மூலம் அதிக தண்ணீர் உள்ள பகுதிகளிலிருந்து, குறைவாக தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு தண்ணீரை எடுத்துச் சென்றார்கள். விளைவு, இன்றைக்கு கிட்டத்தட்ட 14,035 கிராமங்கள் மற்றும் 171 நகரங்கள் (அதாவது, மாநிலத்தின் 75% மக்கள்) இதனால் பயன்பெறுகின்றன.

2002-ல் 26.6 சதவிகிதமாக இருந்த குழாய் இணைப்புகள் 2011-ல் 72.2 சதவிகிதத்திற்கு உயர்ந்தது. 2001-ல் 4,054 கிராமங்களுக்கு தண்ணீர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு வெறும் 210 கிராமங்களுக்குத்தான் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் ஆகிறதாம்.

##~##
உள்கட்டமைப்பு குறித்து BIG – 2020 என்கிற அறிக்கையைத் தயாரித்த குஜராத் அரசாங்கம் துறைமுகம்,  மின்சாரம், சாலைகள், ரயில் போக்குவரத்து, விமான சேவை, நகர்ப்புற கட்டமைப்பு, நகர்ப்புற போக்குவரத்து, தண்ணீர், தொழிற் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம், எரிவாயு, சுற்றுலா ஆகிய துறைகளில் முக்கிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த மாநிலத்தில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகம். காரணம், ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சிமுறை. குஜராத் மாநிலத்தில் நடந்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. இத்தனை மாற்றங்களுக்கும் மூன்றாவது முறையாக முதல்வராக தேர்வாகி இருக்கும் நரேந்திர மோடி (இவரை இப்போது செல்லமாக 'நமோ’ என்றுதான் அழைக்கிறார்கள்!) ஒரு காரணம் என்றாலும், பொருளாதாரம் மற்றும் சமூகநலன்களில் ஏற்பட்ட முன்னேற்றமே முக்கிய காரணம் என்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் பிபேக் தேப்ராய்.

ஆட்சியைப் பிடிக்க அரசாங்கம் இலவசத் திட்டங்களை அறிவிக்காமல், முக்கியமான துறைகளில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களையும் (நானோ கார் தொழிற்சாலையை மே.வங்காளத்தி லிருந்து குஜராத்திற்கு கொண்டுவந்தது) அந்நிய நாட்டு முதலீடுகளையும் வரவழைத்ததின் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கியது.

பெண்கள் சுய நிதி குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை குஜராத் மாநிலத்தில் அதிகம். எனவே இதற்கும் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என கூறியுள்ளார் புத்தக ஆசிரியர்.

ஆக, ஊழலைக் குறைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அதை மக்கள் அனுபவிக்கும்படி செய்தால், ஆட்சியாளர்களின் அஸ்திவாரம் பலம் பெறும் என்பதற்கு அதிர்ந்தாலும் ஆட்டம் காணாத குஜராத் ஓர் உதாரணம். பொருளாதார வளர்ச்சிப் பற்றி

அதிகம் யோசிக்கிறவர்கள் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism