Published:Updated:

திருப்புமுனை

திருப்புமுனை

திருப்புமுனை

திருப்புமுனை

Published:Updated:
திருப்புமுனை
##~##
''எ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்த தயாரிப்பாக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துவதற்கு ஏற்ப இருந்தால்தான் சந்தையில் நிலைத்து நிற்க முடியும். இது எங்களின் எழுபத்தைந்து ஆண்டு கால அனுபவம்.  

எங்கள் தாத்தா சந்தானகிருஷ்ணன் எலும்புமுறிவைக் குணப்படுத்தும் தென்னமரக்குடி மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறையை இலங்கையில் கற்றுக்கொண்டார். அதனை இங்குள்ள மக்களுக்குப் பயன்படுத்தி எலும்புமுறிவு வைத்தியம் செய்தார்.

அப்படியே அந்த எண்ணெய்யைப் புட்டியில் அடைத்து மக்களுக்கு விற்றார். நவீன மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் எங்கள் தாத்தா தயாரித்த எண்ணெய் மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. அக்கம்பக்கம் மக்கள் பயன்படுத்திய எண்ணெய்யை தமிழகம் முழுக்க பயன்படுத்தும் விதமாகக்கொண்டு சென்றதுதான் எங்கள் பிஸினஸின் திருப்புமுனை.

கோயில் திருவிழாக்கள், மாட்டுச் சந்தை என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இந்த எண்ணெய்யின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி அலைந்திருக்கிறார் எங்கள் தாத்தா. இப்போது தமிழ்நாடு மட்டுமல்ல, நமது மக்கள் பரவியிருக்கிற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறோம். நாங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்ததில்லை. ஆனால், ஒருவர் பயன்படுத்தி பார்த்துவிட்டு அடுத்தவர்களிடம் எண்ணெய்யின் சிறப்பை சொல்வதன் மூலமாகவே நாங்கள் வளர்ந்திருக்கிறோம். என்னதான் ஆங்கில மருத்துவ முறைகள் வந்தாலும் நமது பாரம்பரிய மருத்துவத்தை மக்களிடமிருந்து பிரித்துவிட முடியாது என்பதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு நாங்கள்தான்.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் பாரம்பரிய குணம் மாறாமல் பேஸ்ட் வடிவிலும் கொண்டுவர இருக்கிறோம். மாற்றங்களை ஏற்றுக்கொள்வதும், மக்கள் நம்பிக்கை பெற்றிருப்பதுமே தலைமுறைகள் தாண்டிய வெற்றியைத் தந்திருக்கிறது.''

- நீரை. மகேந்திரன்,
படம். செ.சிவபாலன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism