Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
ஷேர்லக் ஹோம்ஸ்
##~##
''ஹே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்பி நியூ இயர்'' - கணீரென்ற குரலில் சொன்னபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''என்ன, புத்தாண்டு உற்சாகமா?'' என்று கேட்டபடி அவரை வரவேற்றோம்.

''புத்தாண்டு என்பது நம்மை புதிதாக மாற்றிக்கொள்ள கிடைக்கும் ஒரு வாய்ப்புதானே! முதலீட்டு விஷயத்திலும் 2013-ல் புதிய அணுகுமுறை அமைத்துக்கொள்வதே சிறந்தது என்று ஆலோசனை தருகிறார்கள் என்னுடைய மார்க்கெட் நண்பர்கள். அமெரிக்காவின் ஃபிஸ்கல் கிளிஃப் பிரச்னை இரண்டாம் தேதி ஒரு முடிவுக்கு வரலாம் என்பது இப்போதைக்குக் கிடைக்கும் தகவல். எனவே, அடுத்த வாரத்தில் இரவு நேரங்களில் பிஸினஸ் சேனல்களை போட்டு பார்ப்பது அவசியம். அதைச் செய்யாமல் விட்டாலும் மறுநாள் காலை செய்தித்தாள்களை பார்த்து விட்டு, முதலீட்டு முடிவை எடுப்பது அவசியம்'' என்றவர், அப்போதுதான் அச்சாகிவந்திருந்த நாணயம் விகடன் அட்டையைப் பார்த்தார்.  

''2013-ல் சந்தை எப்படி இருக்கும் என பல அனலிஸ்ட்கள் சொல்லி இருப்பதை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. 2012-ல் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. வடகிழக்கு பருவமழையும் சொல்லிக்கொள்வதுபோல இல்லை. அமெரிக்கா எப்படி இருந்தாலும் சரி, ஐரோப்பா எப்படி இருந்தாலும் சரி இந்தியாவில் ஒரே நேரத்தில் இரண்டு முக்கியமான பருவமழை பொய்த்திருப்பது நல்ல விஷயம் அல்ல. மழை நன்றாக இருந்தால்தானே விவசாயம் நன்றாக இருக்கும். அதனை யட்டி அனைத்துத் துறைகளும் நன்கு செயல்படும். எனவே, 2013-லாவது பருவமழை சரியாகப் பெய்தால்தான் பொருளாதாரமும் செழிக்கும்; பங்குச் சந்தையும் உயரும்!'' என்றார்.

''கடன் சுமையிலிருந்து தப்பிக்க சுஸ்லான் நிறுவனம் பகீரத முயற்சி செய்து வருகிறது போலிருக்கிறதே?'' என்றோம்.

''இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப். வழியில் சுஸ்லானும் இறங்கி உள்ளது. கடன் சுமையில் சிக்கி இருக்கும் சுஸ்லான் அதனைக் குறைக்க வங்கிகளிடம் பேசிப் பார்த்தது. சுஸ்லானுக்கு மொத்தம் 13,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. புரமோட்டர்கள் 250 கோடி ரூபாய் கொண்டு வரவேண்டும் என வங்கிகள் சொன்னது. இதனால் அதன் நிறுவனர்களின் 2.11 சதவிகிதம் அதாவது, 3.75 கோடி பங்குகளை விற்பனை செய்து 63 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. இது யானை வாய்க்கு சோளப்பொரி எந்த மூலைக்கு என்பதுபோல், இந்த சிறு தொகையால் பெரிதாக சுஸ்லானுக்கு எந்த லாபமும் விளையப் போவதில்லை என அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். மேலும், முடிந்த செப்டம்பர் காலாண்டில் அதன் வருமானமும் நிகர லாபமும் குறைந்துள்ளது என்பதால் சிறு முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது'' என்றார்.

''ரத்தன் டாடா இன்றோடு ஓய்வு பெற்றுவிட்டாரே?'' என்றோம்.

''1991-ம் ஆண்டு இந்தியா நிதி நெருக்கடியில் இருந்தபோது பதவிக்கு வந்தவர்கள் இருவர். ஒருவர், ரத்தன் டாடா. இன்னொருவர், மன்மோகன் சிங். இன்றைக்கு தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் ரத்தன் டாடா. ஆனால், இன்றைக்குகூட பதவியிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் இல்லாமல் இருக்கிறார் மன்மோகன் சிங். டாடா தலைவராக இருந்த 21 வருடத்தில் சந்தை பத்து மடங்குதான் அதிகரித்திருக்கிறது. ஆனால், டாடா குழும நிறுவனங்கள் அதைவிட அதிகமாக உயர்ந்திருக்கிறது. டாடா பவர்

41 மடங்கும், ராலிஸ் இந்தியா 28 மடங்கும் டாடா மோட்டார்ஸ் 21 மடங்கும் உயர்ந்திருக்கிறது. எத்தனை பெரிய சாதனை இல்லையா?'' என்றவருக்கு புத்தாண்டு கேக்கை தந்தோம்.

''வங்கித் திருத்த மசோதாவால் பாசிட்டிவ்-ஆக என்ன நடக்கும்?'' என்று கேட்டோம்.

''புத்தாண்டில் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகளை ஆர்.பி.ஐ. வகுத்து அளிக்க இருக்கிறது. அந்த வகையில் வங்கித் துறைப் பங்குகளின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை முன்கூட்டியே அறிந்துள்ள, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், அவற்றின் மொத்த ஈக்விட்டி முதலீட்டில் (ரூ.2,04,000 கோடி), சுமார் 20 சதவிகிதம் அதாவது, 42,022 கோடி ரூபாயை வங்கிப் பங்குகளில் முதலீடு செய்திருக்கின்றன. இது கடந்த மூன்றாண்டு களில் அதிகபட்ச முதலீடாக உள்ளது. வங்கித் துறை பங்குகளில் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இரட்டை இலக்கத்தில் முதலீடு செய்திருக்கின்றன. அடுத்த இடத்தில் சாஃப்ட்வேர் பங்குகள் 8.7 சதவிகிதமாக உள்ளன'' என்றவர், ''ஆதார் அட்டையை வாங்கிவிட்டீர்களா?'' என்று கேட்டார். ''கூடிய விரைவில் வந்துவிடும்'' என்றோம்.

''ஏன் சொன்னேன் எனில் அரசு மானியத்தை ஆதார் எண்ணின் அடிப்படையில் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது மத்திய அரசாங்கம். அதேபோல் பி.எஃப். கணக்கு பணத்தை ஆதார் கணக்கின் அடிப்படையில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக 43 மாவட்டங்களில் இது அமல்படுத்தப்படுகிறது. எனவே, இதுவரை ஆதார் அட்டையை எடுக்காதவர்கள் உடனடியாக எடுத்துவிடுங்கள்!'' என்றார்.

''ஐ.ஆர்.டி.ஏ.வின் அடுத்த தலைவர் யார் என்று தெரிந்ததா?'' என்று கேட்டோம் சுடச்சுட டீயைத் தந்தபடி.

''வருகிற பிப்ரவரி மாதத்தில் ஐ.ஆர்.டி.ஏ.வின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஹரி நாராயண். அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்பதில் ஒன்பது பேரை இறுதி செய்துள்ளது மத்திய அரசு. பெட்ரோலியம் துறை செயலாளர் சதுர்வேதி, ஐ.டி. துறை செயலாளர் சந்திரசேகர், எல்.ஐ.சி. தற்போதைய தலைவர் மெஹ்ரோத்ரா, முன்னாள் எல்.ஐ.சி.தலைவர் டி.எஸ். விஜயன் போன்றவர்கள் களத்தில் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்'' என்று நம் காதைக் கடித்தார் ஷேர்லக்.

''கடந்த மூன்று மாத காலத்தில் பி.எஸ்.இ.-ன் பங்கு விலை சுமார் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந் துள்ளதே..?'' என்றோம்.

''உண்மைதான். பி.எஸ்.இ.,  ஐ.பி.ஓ. வரும் தகவல் வெளியா னதை அடுத்து பங்கின் விலை ஆஃப் மார்க்கெட்டில் கண்டபடி ஏறத் தொடங்கி இருக்கிறது. எல்லாம் ஐ.பி.ஓ. வரும்போது இன்னும் விலை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில்தான்'' என்றவர், புறப்படும்முன் தந்த ஷேர் டிப்ஸ்கள் இனி:

நீண்ட கால முதலீட்டுக்கு...

இன்ஜினீயர்ஸ் இந்தியா,
மாரிகோ,
அர்ஷியா (ARSHIYA) இன்டர்நேஷனல்
பெட்ரோநெட் எல்.என்.ஜி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism