Published:Updated:

புத்திசாலிகளாக மாற புது ஐடியாக்கள் !

புத்திசாலிகளாக மாற புது ஐடியாக்கள் !

புத்திசாலிகளாக மாற புது ஐடியாக்கள் !

புத்திசாலிகளாக மாற புது ஐடியாக்கள் !

Published:Updated:
##~##

சிங்கப்பூரில் ஒரு பிஸியான ரோடு. தலைக்கு ஹெல்மேட், கை மணிக்கட்டுக்கான கார்டு, கால் மூட்டுக்கான கார்டு போன்றவற்றை அணிந்துகொண்டு பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டுகிறான் ஓர் இளைஞன். அட, எவ்வளவு பொறுப்பானவன் என்று நினைத்தால், அடுத்த சிக்னலில் அதே இளைஞன் சிக்னல் சிவப்பில் இருக்கும்போதே குறுக்கே பறந்துவரும் இரண்டு வாகனங்களுக்கு இடையே சைக்கிளை ஓட்டிச் செல்கிறான். என்ன ஒரு முட்டாள்தனம்? வெளி உலகிற்கு தலை முதல் கால் வரை போட்டிருக்கும் பாதுகாப்பு கவசங்கள் அவனை நல்லதொரு பாதுகாப்பு விரும்பியாகக் காட்டினாலும், இரண்டு கார்களுக்கு நடுவே கிடைத்த கேப்பில் புகுந்து செல்வது ஹைரிஸ்க் விஷயமில்லையா? அவனது தோற்றத்திற்கும் செயல்பாட்டுக்கும் எத்தனை வேறுபாடு?

இதேபோலத்தான் நாமும். புத்திசாலித்தனத்தையும் பரிட்சை மார்க்கையும் ஒப்பிட்டுக்கொள்கிறோம். பரிட்சையில் அதிக மார்க் எடுத்தவர்கள் எல்லாம் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் திறன்கொண்டவர்கள் என்று நினைக்கிறோம். பரிட்சை மார்க் என்பது சைக்கிளில் சென்ற இளைஞனிடம் தலை முதல் கால்வரை இருந்த கவசம் போன்றது. ஆனால், சிக்னல் ரெட்டாக இருக்கும்போது குறுக்கே செல்கிற ஹைரிஸ்க் நடவடிக்கை புத்திசாலித்தனமற்றது என்று அசத்தலாய் ஆரம்பிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்திசாலிகளாக மாற  புது ஐடியாக்கள் !

எல்லா மனிதர்களுக்கும் புத்திசாலித்தனம் உண்டு என்றாலும், ஒவ்வொருவரின் செயல்பாட்டிலும் புத்திக்கூர்மையிலும் எத்தனை மாறுதல்? மனித மூளையை அதன் பக்குவத்திற்கு ஏற்றாற்போல் செயல்படுத்துவதன் மூலம் புத்திசாலித்தனத்தில் பெரிய அளவு மாறுதல்களைக் கொண்டுவருவது எப்படி என்பதை 'த ஹேபிட் ஆஃப் சக்சஸ் (S.U.C.C.E.S.S – SUPPLENESS, UNDERSTANDING, CONSTRUCTIVENESS, COURAGEOUS THINKING, EXACTNESS, SELF-MANAGEMENT, SILLINESS) என்ற புத்தகத்தில் ஆசிரியர் ஹென்றி டொய் சொல்லியுள்ளார்.

புத்திசாலிகளாக மாற  புது ஐடியாக்கள் !

கம்ப்யூட்டரில் மெமரி ஸ்பேஸ் (ஹார்டு டிஸ்க் கெப்பாசிட்டி) போன்று மனித மூளைக்கும் ஒரு கெப்பாசிட்டி இருக்கின்றது. மனிதனால் ஒரேநேரத்தில் ஏழு விதமான பிரச்னைகளை மட்டுமே (தனிநபர் திறனுக்கேற்ப /- 2) சிந்திக்க முடியும். ஓர் ஆவரேஜ் மனிதனால் நான்கு விஷயங்களைப் பற்றி மட்டுமே ஒரே நேரத்தில் யோசிக்க முடியும். இந்த எல்லையைத் தாண்டி யோசிக்கவேண்டியிருக்கும் கட்டாய நிலை வரும்போதுதான் மனஅழுத்தம், என்ன வாழ்க்கை இது என்ற விரக்தி என்ற நிலையெல்லாம் ஏற்படுகின்றது.

புத்திசாலிகளாக மாற  புது ஐடியாக்கள் !

மனித மூளையை பதினாறு வகையான செயல்பாடுகளால் பழக்கப்படுத்தமுடியும் என்கின்றன ஆய்வுகள். இந்த பதினாறு வகைகளையும் சுலபமான விதத்தில் நெகிழும்தன்மை, உணரும்தன்மை, ஆக்கத்தன்மை, தைரியச் சிந்தனை, திட்டவட்டத்தன்மை, சுயமேலாண்மைத்தன்மை, நகைச்சுவை காணும்தன்மை என்ற ஏழு பிரிவின் கீழ் கொண்டுவந்து விளக்கமாகச் சொல்லியுள்ளார் ஹென்றி டொய்.

ஏன் நல்ல சிந்தனைகளை நம்முடைய குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என்ற கேள்விக்கு, மூளையின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தி ட்ரிம்மாக வைத்திருக்க நல்ல பல சிந்தனைகள்தான் ஒரு சிறந்த ஜிம்மாக இருக்கின்றது என்கிறார் ஆசிரியர்.

சராசரியான மனிதன் பின்வருவனவற்றில் பெரும்பான்மை குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றான் என்கிறார் ஆசிரியர். அதாவது, அவன் நோக்கமில்லாமல் நோக்குகிறான், கவனிக்காமல் கேட்கிறான், உணராமல் தொடுகின்றான், சுவைக்காமல் சாப்பிடுகின்றான், சுற்றுப்புற சூழல் உணராமல் நடக்கிறான், வாசனை தெரியாமல் சுவாசிக்கிறான், யோசிக்காமல் பேசுகின்றான் என்கின்றார்.

புத்திசாலிகளாக மாற  புது ஐடியாக்கள் !

இந்த நிலையைத் தவிர்க்க வார நாட்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றுக்கு நிர்ணயித்துச் செய்தால் எல்லாமே நம் வசம் வரும் என்கிறார் ஆசிரியர். திங்கள் பார்வைக்கு, செவ்வாய் கேட்பதற்கு, புதன் வாசனை நுகர்வுக்கு, வியாழன் சுவைக்கு, வெள்ளி தொட்டுணர்வுக்கு என்று பிரித்துக்கொண்டு செயல்படுத்துங்கள். நாளடைவில் அனைத்து திறமையும் உங்கள் வசப்படும் என்கிறார். இதுமாதிரி பல ஐடியாக்களைத் தந்துள்ளார் ஆசிரியர்.

கொஞ்சம் ஹெவியான சப்ஜெக்ட் என்பதால் நிறைய இடத்தில் நகைச்சுவைக்குத் தனி ஏரியாவே ஒதுக்கியுள்ளார் ஆசிரியர். பெற்றோர், ஆசிரியர், பிஸினஸ் எக்ஸிக்யூட்டிவ்ஸ், மாணவர்கள் என புத்திசாலித்தனத்தைப் பெருக்கிக்கொள்ள நினைக்கும் அனைத்து தரப்பினரும் படித்து பயன் பெறவேண்டிய புத்தகம் இது.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism