Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

Published:Updated:

வர்த்தகம்

##~##

இந்த வாரம் சென்னா குறித்து விளக்கமாக கூறுகிறார். ஐ.எஃப்.ஐ.என். கமாடிட்டி நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் நேஹா கலானோரியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புது வருடம் தொடங்கி சென்னா விலை ஷார்ட் கவரிங் நடந்ததால் அதிகரித்து வர்த்தகமானது. அடிப்படைக் காரணிகளை வைத்துப் பார்க்கும்போது, சென்னா விலை நடுத்தர காலத்தில் குறைந்தே வர்த்தகமாகும். இந்த வருடம் சென்னா உற்பத்தி அதிகமாக உள்ளது.

அதேநேரத்தில், சென்னாவின் தேவையோ குறைவாகவே இருக்கிறது.

அக்ரி கமாடிட்டி !
அக்ரி கமாடிட்டி !

இந்தியாவில் 8.78 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிற்கு சென்னா பயிரிடப்பட்டுள்ளது. இதுவே, சென்ற ஆண்டில் 8.58 மில்லியன் ஹெக்டேர் பயிரிடப்பட்டிருந்ததாக விவசாயிகள் சொல்கிறார்கள்.

அரசுத் தரப்பிலோ 7.96 மில்லியன் டன் சென்னா இந்த ஆண்டு மொத்த உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கிறது. இதுவே சென்ற ஆண்டில் 7.58 மில்லியன் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச

அளவில் பார்க்கும்போது கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சென்னா உற்பத்தி அதிகமாக இருக்கிறது. இதனால் இங்கிருந்து ஏற்றுமதியும் அதிகமாகவே இருக்கும். வரும் வாரத்தில் சென்னா விலை பக்கவாட்டிலேயே வர்த்தகமாகும். குவிண்டால் 4,015 ரூபாய் வர்த்தகர்கள் ரெசிஸ்டன்ஸாகக்கொள்ளலாம்.''

அக்ரி கமாடிட்டி !

மிளகு ஏலம் விடும் சந்தைகளில் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து சென்ற வாரம் வர்த்தகமானது. சென்றவார ஆரம்பத்தில் 17 டன்னாக வரத்து இருந்த கொச்சி சந்தையில், வார இறுதியில் 8 டன்னாக குறைந்தது. ஸ்பாட் விலை நூறு கிலோ மிளகு 38,600 ரூபாய்க்கு விலைபோனது. எனினும், ஏற்றுமதி டிமாண்ட் குறைந்தது மற்றும் புதிய வரத்து குறித்த எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல காரணங்களால் விலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் இந்திய மிளகு டன் 7,350 டாலருக்கு வர்த்தகமானது. 2013-ல் மொத்த சர்வதேச மிளகு உற்பத்தி 3.17 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச மிளகு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், 2012-ல் உற்பத்தி 3.24 லட்சம் டன்னாகவும், ஏற்றுமதி 2.49 லட்சம் டன்னாகவும் இருந்திருக்கும் என கணித் துள்ளது. வரும் வாரத்திலும் விலை அதிகரித்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகம்.

அக்ரி கமாடிட்டி !

குறைந்த டிமாண்ட் காரணமாக, ஜீரகம் சென்ற வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. ஸ்பாட் சந்தையில் நூறு கிலோ ஜீரகம் 14,400 ரூபாய்க்கு வர்த்தகமானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் தேவை குறைந்ததால் ஜீரகத்தின் விலை குறைய காரணமாக அமைந்தது.

ராபி சீஸனில் குஜராத் மாநிலத்தில் குறைந்த பரப்பளவில் ஜீரகம் பயிரிடப்பட்டிருக்கும் என்ற தகவல் தற்போது மாறியுள்ளது. அங்கு அதிக பரப்பளவில் ஜீரகம் பயிரிடப்பட்டிருப்பதால் ஜீரகத்தின் விலை வரும் நாட்களில் குறையவே செய்யும்.

குஜராத்தில் 2,92,900 ஹெக்டேர் பரப்பளவில் ஜீரகம் பயிரிடப்பட்டுள்ளது. இதுவே சென்ற ராபி சீஸனில் 2,78,400 ஹெக்டேராக இருந்ததாக அம்மாநில விவசாயத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஜீரகம் உற்பத்தி 35 லட்சம் பைகளாக இருக்குமெனவும், இதுவே சென்ற ஆண்டில் 33 லட்சம் பைகளாக இருந்தது எனவும் கூறப்படுகிறது. உற்பத்தி அதிகரிக்கும் என்ற தகவலால் வரும் வாரத்திலும் ஜீரகத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

ர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் களிடமிருந்து நல்ல டிமாண்ட் இருந்த காரணத்தால் சென்ற வாரத்தில் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமானது. மேலும், வரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பும் விலையில் பிரதிபலித்தது. புதிய மஞ்சள் வரத்து ஜனவரி மாத இறுதிக்குள் சந்தைக்கு வந்துவிடும்.

2012-2013-ல் மஞ்சள் உற்பத்தி கடந்த வருடத்தைவிட 60 சதவிகிதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011-2012-ல் 90 லட்சம் பைகள் வரலாறு காணாத அளவில் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், 2012-ல் உற்பத்தி செய்யப்பட்ட பரப்பளவு குறைந்ததும், சீதோஷ்ண நிலை சரியில்லாததுமே காரணமாக அமைந்தது. ஈரோடு சந்தையில் 2,500 பையும்  நிஜாமாபாத் சந்தையில் 1,000 பையும் சென்ற வாரத்தில் விற்பனைக்கு வந்தது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மஞ்சளுக்கான டிமாண்ட் அதிகரித்து, வரும் வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிமாண்ட் குறைந்த காரணத்தால் ஏலக்காய் விலை சென்ற வாரத்தில் குறைந்தது. இதற்கு முக்கிய காரணம், ஒடிஷா மாநில அரசு குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை மற்றும் தயாரிப்பிற்கு தடை விதித்ததே. ஏற்கெனவே குட்கா மற்றும் பான் மசாலா தடை விதித்துள்ள மாநிலங்களையும் சேர்த்து ஒடிஷா 18-வது மாநிலமாக பான் மசாலா மற்றும் குட்கா விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

இடுக்கி சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஏலக்காய் சென்ற வாரத்தில் 56 டன்னாக இருந்தது. ஆனால், விற்பனையானது 51 டன் மட்டுமே. ஒரு கிலோ ஏலக்காய் ஸ்பாட் விலை சராசரியாக 774 ரூபாய்க்கும், அதிகபட்ச விலை 956 ரூபாய்க்கும் கேட்கப்பட்டது. தேவை குறைந்திருப்பதால் வரும் வாரத்தில் ஏலக்காய் விலை குறையவே செய்யும்.

அக்ரி கமாடிட்டி !

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism