Published:Updated:

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?

Published:Updated:
குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?
##~##

மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கொடுக்கும் அன்பளிப்புகளுக்கு வரிச் சலுகை பெற முடியுமா?  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- செந்தில்முருகன், பொள்ளாச்சி.

பாலாஜி, ஆடிட்டர்.

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?

''நேரடியாக வரிச் சலுகை என்பதைவிட சில வரித் திட்டமிடல் செய்தால் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புகளுக்கு வரிச் சலுகை பலன்களை பெறமுடியும். உதாரணமாக மனைவி மற்றும் மைனர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் அன்பளிப்புகள் மூலம் வருமானம் வரும்பட்சத்தில், அந்த வருமானம் உங்களது வருமானத்தோடு கணக்கிடப்பட்டு அதற்கு நீங்கள் வரிச் செலுத்த வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட வாரிசுகளுக்குக் கொடுக்கும் அன்பளிப்புகள் மூலம் வருமானம் வந்தால் அது உங்கள் வருமான கணக்கோடு சேராது. அதுபோல 80சி மூலம் கிடைக்கக்கூடிய வரிச் சலுகைகளையும், மனைவி மற்றும் குழந்தைகளையும் சேர்த்து வரித் திட்டமிடல் செய்தால் வரிப் பலன்களை பெறலாம்.''

எனக்கு சொந்த ஊர் மதுரை. நான் மும்பையில் பணிபுரிகிறேன். நான் இங்கு பணிபுரிந்துகொண்டு சொந்த ஊரில் வீட்டுக் கடன் வாங்க முடியுமா?

- முருகேசன், மும்பை.

இந்திரா பத்மினி, பொதுமேலாளர், ஐ.ஓ.பி. மத்திய அலுவலகம்.

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?

''வெளியூரில் பணிபுரிந்தாலும் உங்களது சொந்த ஊரில் உள்ள வங்கிக் கிளையில் வீட்டுக் கடன் வாங்க முடியும். உங்களுக்கு வீட்டுக்

கடன் அனுமதிப்பதற்காக, வங்கி கேட்கும் ஆவணங்களைத் தரவேண்டும். முக்கியமாக, கடந்த மூன்றாண்டுகள் நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்த ஆவணங்களின் நகல், உங்களது

வருமானச் சான்று, மனை மற்றும் வீடு கட்டுவதற்

கான அப்ரூவல் பிளான் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் சொத்தின் மதிப்பு அடிப்படையில் கடன் கிடைக்கும்''. 

 அப்பாவும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டுறவு வங்கியில் கூட்டாகக் கடன் வாங்கியிருந்தனர். இந்த நிலையில் அப்பாவின் நண்பர் இறந்துவிட்டார். இப்போது அந்தக் கடனுக்கு யார் பொறுப்பேற்பது?

- சீனிவாசன், திருவாரூர்.

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?

பத்மநாபன், கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

''உங்கள் அப்பாவோடு கூட்டாகச் சேர்ந்து கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் மொத்தக் கடனையும் கட்டவேண்டிய பொறுப்பு உங்கள் அப்பாவைச் சேர்ந்தது அல்ல; என்றாலும், கடனைத் திருப்பி வசூலிப்பதற்கு உங்கள் தந்தைதான் முதன்மையான நபராகக் கருதப்படுவார். இறந்த நபர் வாங்கிய கடனை அவரது வாரிசுகள் கட்டுவதற்கு கடமைப்பட்டவர்கள். வாரிசுகள் கட்டாதபட்சத்தில் கடனுக்கு ஈடாக சொத்து அடமானம் வைக்கப்பட்டிருந்தால் அந்தச் சொத்தை கையகப்படுத்த, சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பும். கடனை வசூலிக்க வங்கி வழக்குத் தொடுக்கவேண்டிய நிலை வந்தால், இறந்த நபரது வாரிசுகள் மீதும், உங்கள் அப்பாவின் மீதும் வழக்குத் தொடுக்கும். எனவே, யாருடைய பொறுப்பு என்பதைவிட கூட்டாகக் கடன் வாங்கியுள்ளதால் ஒருவர் இல்லாதபட்சத்தில் அதைத் திருப்பிச் செலுத்தும் கடமை இன்னொருவருக்கு உண்டு என்பதைப் புரிந்துகொள்ளவும்.''

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ரேஷன் கார்டு-க்கு விண்ணப்பிக்க நடைமுறை என்ன?

- கதிரேசன், திருத்தணி.

பி.எம்.பஷீர் அகமது, ஆணையாளர், நுகர்பொருள் வாணிபக் கழகம்.

''வீட்டு வாடகை ஒப்பந்தம் மற்றும் அந்த வீட்டில் வசிப்பதற்கான வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நுகர்பொருள் வழங்கு மண்டல அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். இதன் அடிப்படையில் எங்களது அலுவலர்கள் நேரடியாக வந்து ஆய்வு செய்து விண்ணப்பத்தின் உண்மைத் தன்மைகளை உறுதிபடுத்துவர். விண்ணப்பம் செய்த 60 நாட்களுக்குள் இந்த நடைமுறைகள் முடிந்து விண்ணப்பதாரருக்கு குடும்ப அட்டை வழங்கப்படும்.''

சுற்றுலா வழிகாட்டி நிறுவனம் அமைக்க உள்ளேன். இதற்கென அனுமதி பெற என்ன நடைமுறை?  

- ராதாகிருஷ்ணன், சிவகாசி.

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?

வி.கே.டி.பாலன், இயக்குநர், மதுரா டிராவல்ஸ்.

''சுற்றுலா ஏற்பாட்டாளர், வழிகாட்டி, பயண முகவர் என இந்தத் துறை சார்ந்து பல பிரிவுகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய நிறுவனமா அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவில் மட்டும் கவனம் செலுத்தும் நிறுவனமா என்பதில் தெளிவாக இருக்கவும். சுற்றுலா வழிகாட்டி அனுமதி வாங்க இந்திய அரசின் சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் அனுமதி வாங்கவேண்டும். இவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவராக ஆகும்பட்சத்தில் அரசு சுற்றுலாத் துறையின் சுற்றுலாத் திட்டங்களையும் பயன்படுத்த முடியும்.

குறைந்தபட்சம் ஒரு வருட முன் அனுபவம், அவசரகாலங்களில் வாடிக்கையாளருக்கு உதவி செய்யும் நெட்வொர்க் போன்றவை அவசியம். சுற்றுலாத் துறை தொடர்பான உயர்கல்வி கற்றவர்களை பணிக்கு அமர்த்திக்கொள்ளும்போது சிறந்த சேவை வழங்க முடியும்.''

முன்பு செய்துகொண்ட முதுகுத் தண்டுவட சிகிச்சையை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?

எடுக்கும்போது குறிப்பிடவில்லை. ஆனால், தற்போது மீண்டும் சிகிச்சை செய்யவேண்டிய நிலை உள்ளது. இதற்கான செலவு களுக்கு நான் மெடிக்ளைம் மூலம் க்ளைம் செய்துகொள்ள முடியுமா?

- ராபர்ட், திருச்சி.
 

ரவி, காப்பீடு ஆலோசகர், பஜாஜ் கேப்பிட்டல்.

''ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன் நீங்கள் செய்துகொண்ட மருத்துவ சிகிச்சையைக் குறிப்பிடவேண்டும். பாலிசியில் இந்த விவரம் மறைக்கப்படும்பட்சத்தில் இதற்காகத் திரும்பவும் சிகிச்சை செய்கிறபோது மருத்துவச் செலவுகளை க்ளைம் செய்யமுடியாது. அந்த வகையில் பாலிசி எடுப்பதற்கு முன் உங்களது கிகிச்சையை மறைத்துள்ளதால் நீங்கள் இப்போது செய்யும் செலவுகளை க்ளைம் செய்ய முடியாது''.

குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?
குழந்தைகளுக்குத் தரும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism