Published:Updated:

கமாடிட்டி! (மெட்டல் - ஆயில்)

கமாடிட்டி! (மெட்டல் - ஆயில்)

கமாடிட்டி! (மெட்டல் - ஆயில்)

கமாடிட்டி! (மெட்டல் - ஆயில்)

Published:Updated:

தங்கம்!

தங்கத்தின் விலை சென்ற வாரத்தில் ஒரு சதவிகிதம் வரை குறைந்தது. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் கியூ.இ.3 பாலிசியை 2013-ம் வருடம் முடிவதற்கு முன்பே திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாக கருதிய முதலீட்டாளர்கள், திடீரென தங்கத்தை விற்கத் தொடங்கினார்கள். இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்து, யூரோவின் மதிப்பு குறைந்தது. எம்.சி.எக்ஸ். பிப்ரவரி கான்ட்ராக்ட் தங்கம் விலையும் குறைந்தது.

கமாடிட்டி! (மெட்டல் - ஆயில்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்ற வாரத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,660 டாலர் வரை சென்றது. டாலரின் மதிப்பைப் பொறுத்தும், ஃபெடரல் வங்கியின் நடவடிக்கைகளைப் பொறுத்தும் வரும் வாரத்தில் தங்கத்தின் விலை இருக்கும். நடுத்தர காலத்தில் தங்கம் விலை சர்வதேச அளவில் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரூபாயின் மதிப்பைப் பொறுத்து இந்திய சந்தையில் விலை மாற்றம் இருக்கும்.  

இயற்கை எரிவாயு!

கமாடிட்டி! (மெட்டல் - ஆயில்)

கடந்த மூன்று மாதங்களாக இல்லாத அளவுக்கு இயற்கை எரிவாயு விலை சென்ற வாரத்தில் குறைந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குளிர் குறைந்துள்ளதால் இயற்கை எரிவாயுக்கான தேவை குறைந்துள்ளது. எனினும், இன்வென்ட்டரி 120-130 பில்லியன் கியூபிக் ஃபீட் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் வெளியிடும் புள்ளிவிவரத்தைப் பொறுத்து இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி குறைந்தால் வரும் வாரத்தில் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடிப்படை உலோகம்!

அடிப்படை உலோகங்களில் முக்கிய உலோகமான காப்பர் கடந்த இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்ற வாரம் வியாழன் அன்று விலை அதிகரித்தது. அமெரிக்காவில் ஃபிஸ்கல் கிளிஃப் தொடர்பான முடிவுகள் மற்றும் சீனாவில் சர்வீஸ் செக்டார் குறித்த புள்ளிவிவரங்கள் சாதகமாக இருந்ததாலும் காப்பரின் விலை அதிகரித்தது. ஆனால், கடந்த வெள்ளியன்று அமெரிக்க ஃபெடரல் கியூ.இ.3 பாலிசியை 2013-ம் வருடம் முடிவதற்கு முன்பே திரும்ப பெற்றுக்கொள்ளும் என்கிற செய்தி வந்ததால் விலை குறைந்தது. தெற்கு பெரு நாட்டில் காப்பர் உற்பத்தி செய்யும் யூனிட்டில் ஜனவரி 15-ம் தேதிக்குப் பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகத் தொழிலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். எல்.எம்.இ. காப்பர் இன்வென்ட்டரி 0.2 சதவிகிதம் குறைந்திருக்கிறது.  

கமாடிட்டி! (மெட்டல் - ஆயில்)

மேலும், ஆஸ்திரேலிய துறைமுகத்திலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்கள் டிசம்பர் மாதத்தில் 25 சதவிகிதம் குறைந்துள்ளதாக துறைமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானிய வர்த்தகர்கள் ஆஸ்திரேலியாவின் முன்னணி அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனமான ரியோ டின்டோ ஆல்கான் நிறுவனத்திடமிருந்து ஒரு டன் அலுமினியத்தை 240 டாலருக்கு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த விலை கடந்த காலாண்டைவிட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் நாடு பொருளாதார சிக்கலில் இருப்பதைக் காட்டுவதாக அனலிஸ்ட்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதார நடவடிக்கைகள், டாலரின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அடிப்படை உலோகங்களின் விலை வரும் வாரத்தில் குறைந்தே வர்த்தக மாகும்.

வெள்ளி!

கமாடிட்டி! (மெட்டல் - ஆயில்)

அமெரிக்க ஃபெடரல் வங்கி பாண்டுகளை வாங்கும் நடவடிக்கைகள் குறித்து எஃப்.ஓ.எம்.சி. மீட்டிங்கில் பேச்சுவார்த்தை நடந்ததால் சர்வதேச சந்தையில் வெள்ளி 2.7 சதவிகிதம் விலை குறைந்தது. டாலரின் மதிப்பு அதிகரித்ததும் வெள்ளியின் விலை குறைவுக்கு காரணமாக அமைந்தது. எம்.சி.எக்ஸ். சந்தையிலும் அடிப்படை உலோகங்களின் விலைகுறைவால் வெள்ளியின் விலை குறைந்திருந்தது. சர்வதேச பொருளாதார நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் வெள்ளியின் விலை வரும் வாரத்திலும் குறைந்தே வர்த்தகமாகும்.

கச்சா எண்ணெய்!

அமெரிக்காவில்  வேலையில்லாதவர்கள் குறித்த புள்ளிவிவரம் அதிகரித்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது. இது மட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் குறித்த இன்வென்ட்டரி புள்ளிவிவரங்களை அமெரிக்கன் பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் வெளியிட்டது. இதன்படி அமெரிக்காவில் கச்சா எண்ணெய் இன்வென்ட்டரி 12.03 மில்லியன் பேரல் குறைந்து 358.47 மில்லியன் பேரலாக டிசம்பர் 28-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இருந்தது. கேசோலின் இன்வென்ட்டரி 3.32 மில்லியன் பேரல் அதிகரித்து 219.16 மில்லியன் பேரலாகவும், டிஸ்டிலேட் இன்வென்ட்டரி 6.7 மில்லியன் பேரல் அதிகரித்து 125.50 மில்லியன் பேரலாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் இன்வென்ட்டரி குறைந்தது கச்சா எண்ணெய் விலைக்குச் சாதகமாக இருந்தாலும், அமெரிக்காவில் பொருளாதாரத்தை சரி செய்யும் நடவடிக்கைகள் காரணமாக வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறையவே வாய்ப்புள்ளது.

- பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி! (மெட்டல் - ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism