Published:Updated:

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு...

பெஸ்ட் ரிட்டையர்மென்ட் பிளான்

ஆலோசனை

 ##~##

கடந்த இதழில் பென்ஷன் திட்டங்களாகப் பழைய பென்ஷன் ஸ்கீம், என்.பி.எஸ்., பி.பி.எஃப். ஆகிய முதலீட்டு முறைகளை விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் இ.பி.எஃப். (எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட்), இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்கள், நமக்கு நாமே செய்துகொள்ளும் பென்ஷன் திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இ.பி.எஃப். (எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட்)

இ.பி.எஃப். - வேலையில் இருக்கும் பலருக்கும் ஒரு நல்ல ஓய்வுக்கால முதலீட்டு உபகரணம். இதற்காக வேலையில் இருப்பவர்கள் எக்ஸ்ட்ராவாக எதையும் செய்யவேண்டாம். தானாகவே அது கிடைத்துவிடும். சில தனியார் நிறுவனங்களில் கூட்டிக்குறைத்துப் பிடித்தம் செய்வதற்கு ஆப்ஷன் தருகிறார்கள். ஆகவே, சிலர் இத்திட்டத்தில் குறைத்து முதலீடு செய்கிறார்கள். அவ்வாறு செய்யாமல் உச்சபட்ச தொகையைப் பிடித்தம் செய்யச் சொல்வது நல்லது.

வி.பி.எஃப். (வாலன்டரி பிராவிடண்ட் ஃபண்ட்)

இந்த வசதியையும் பல நிறுவனங்கள் தருகின்றன. சர்ப்பிளஸ் இருப்பவர்கள் அந்த ஆப்ஷனையும் உபயோகித்துக்கொள்ளலாம். முக்கிய காரணங்களுக்காகக் கடன் எடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. 2010-11-ல் இ.பி.எஃப்-ன் வட்டி விகிதம் 9.5 சதவிகிதமாக இருந்தது. 2011-12-ல் 8.25 சதவிகிதமாக இருந்தது. இந்த வருடம் 8.60 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு...

இதில் செய்யப்படும் முதலீடு, வரும் வட்டி மற்றும் மெச்சூரிட்டி (ஐந்து வருடத்திற்குப் பிறகு) தொகை ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகை உண்டு. வேலையில் இருப்பவர்கள் அனைவரும், இ.பி.எஃப். வசதி இருக்கும்பட்சத்தில் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். இதற்குமேல் தேவைப்படும் முதலீட்டை பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்கள் !

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பலவிதமான பென்ஷன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன. இருக்கும் பென்ஷன் திட்டங்களிலேயே மிகத் தீவிரமாக விற்கப்படும் திட்டங்கள் என இவற்றைக் கூறலாம். ஐ.ஆர்.டி.ஏ, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்களில் பல மாறுதல்களை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. அதன்படி பென்ஷன் பாலிசி முடிவடையும்போது, பாலிசி தாரர் ஆனுயூட்டி ஒன்றை கட்டாயமாக வாங்கவேண்டும். ஒழுக்கத்துடன் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அந்த ஆனுயூட்டியைவிட, சொந்தமாக முதலீடு செய்யும்பட்சத்தில், அதிக அளவில் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு...

மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத் திட்டங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் செயல்படு வதால், ஒரு திட்டத்தை மற்றொரு திட்டத்துடன் ஒப்பிடுவது என்பது மிகவும் சிரமமான காரியம். வளைந்து தரும் தன்மை இத்திட்டங்களில் மிகவும் குறைவு. பொதுவாக, செலவின சதவிகிதமும் அதிகம். முதலீட்டு ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், கட்டாய முதலீட்டைத் தேடுபவர்கள், செலவாளிகள் போன்றோருக்கு இத்திட்டங்கள் பொருந்தும்.

நமக்கு நாமே செய்துகொள்ளும் பென்ஷன் திட்டங்கள்!

இன்றைய நிலையில், ரிட்டர்ன்ஸ் அடிப்படை யில் பார்க்கும்போது நாமே சொந்தமாக முதலீடு செய்துகொள்ளும் திட்டங்களே பென்ஷனிற்கு சிறந்தது. இதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடு; மற்றொன்று பங்கு/கடன் சார்ந்த முதலீடு.

முதலாவது ஆப்ஷனில், சிலர் தோட்டங்கள், வீடுகள், கடைகள், அலுவலகக் கட்டடங்கள் போன்றவற்றை தங்களது இளம்பிராயத்திலேயே வாங்கிவிடுவார்கள். அதிலிருந்து வரும் வாடகைகளே

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு...

அவர்களது ஓய்வூதியமாகிவிடும்.

இது ஒரு நல்ல திட்டமென்றாலும், அனைவராலும் அச்சொத்துக்களை ஈஸியாகப் பராமரிக்க முடியாது. ஒன்றிரண்டு சொத்துக்கள் என்றால் பரவாயில்லை - நாம் செய்யும் வேலையோடு/தொழிலோடு அச்சொத்துக்களையும் பராமரிக்கவேண்டும். ஆனால், அச்சொத்துக்கள் அதிகமாகும்பட்சத்தில், அவற்றை பராமரிப்பதே முழுநேரத் தொழிலாகும். தவிர, இதற்கான முதலீட்டுத் தொகையும் அதிகம். வயதான காலத்தில் சொத்துப் பராமரிப்பது என்பது சற்று இயலாதக் காரியமாக இருக்கலாம். மேலும், வாடகை வசூலிலும் சிக்கல்கள் உண்டாகலாம். ரியல் எஸ்டேட் முதலீட்டில் விருப்பமுள்ளவர்கள், இவ்வகையான முதலீடுகளிலிருந்து ஒருபகுதி ஓய்வூதியம் வருமாறு செய்துகொள்ளலாம்.

அனைவராலும் முடிந்த, அதேசமயம் நல்ல வருமானம் தரக்கூடிய, வளைந்து தரும் தன்மையுடைய, மிகச் சிறிய அளவில்கூட முதலீடு செய்யக்கூடிய ஓய்வுக்காலத்திற்கான முதலீட்டு உபகரணங்கள் என்று பார்த்தால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும், பி.பி.எஃப்./இ.பி.எஃப். கலவையும்தான். பி.பி.எஃப். போன்ற திட்டங்கள் முதலீட்டிற்கு ஒரு திடத்தன்மையையும், பாதுகாப்பையும், வரிச் சலுகையையும், டீஸன்டான வருமானத்தையும் தருகிறது.

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் நம்மை பங்கு செய்யச் செய்து அதிக வருவாயை ஈட்டித் தருவதோடு, வரிச் சலுகையையும், புரொஃபஷனல் மேனேஜ்மென்டையும், வளைந்து தரும் தன்மையையும் நமக்குத் தருகிறது.

இந்த முதலீட்டு கருவியைத் தேர்வு செய்கிறவர்களுக்கு முதலீட்டு ஒழுக்கம் அவசியம் தேவை. ஏனென்றால், வேண்டுகிற போது பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் பொறுமை மிக அவசியம். மேலும், ரிஸ்க் இருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை மேற்கொள்ளவேண்டும். வருடத்திற்கு ஒருமுறை திட்டங்கள் நன்றாகச் செயல்படுகின்றனவா என்பதைக் கவனிப்பதும் அவசியம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் மொத்த முதலீட்டை தவிர்ப்பது நல்லது.

எஸ்.ஐ.பி. முதலீட்டு முறை மூலம் நமது ரிஸ்க்கை பெருவாரியாகக் குறைக்கலாம். மேலும், முதலீட்டில் ஓர் ஒழுக்கத்தைக் கொண்டு வருகிறது.

பொதுவாக, நடுத்தர வருமானத்தில் உள்ள மீடியம் ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்களுக்கு  அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. தனிநபரின் வருமானம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீட்டு உபகரணங்களையும், சதவிகிதத்தையும் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர் என்றால், முழுக்க முழுக்க கடன் சார்ந்த நிரந்தர வருமானம் தரும் திட்டங்களிலேயே உங்கள் முதலீட்டை வைத்துக்கொள்ளுங்கள்.

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு...

அட்டவணையில் கூறியபடி முதலீடு செய்த பணத்தை, 60 வயதிற்குப் பிறகு, நிரந்தர வருமானம் தருமாறு, எவ்வாறு முதலீடு செய்வது என்பது பெரிய கேள்வி. நீங்கள் ஓய்வுக்காலத்திற்காகச் சேமித்தப் பணத்தை உங்களைச் சுற்றி உள்ளவர்கள் எடுத்துக்கொண்டுவிடுவார்கள் அல்லது செலவழிந்துவிடும் என்று நீங்கள் நினைத்தால், ஒரு நல்ல இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் முதலீடு செய்துவிட்டு ஆனுயூட்டி பெற்றுக் கொள்வதுதான் சிறந்தது.

பிறர் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் அல்லது செலவழிந்துவிடும் என்கிற பிரச்னை இல்லையென்றால் உங்கள் வரிவரம்பைப் பொறுத்து உங்கள் முதலீட்டை மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு, தற்போது உங்கள் வயது 60. இன்றைய தேதியில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள கார்ப்பஸ் ரூ.15 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். அதிலிருந்து உங்களுக்கு பென்ஷன் வரவேண்டும் அல்லவா? அத்தொகையை முழுவதுமாக நல்ல வங்கி மற்றும் தரமான கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டில் நீங்கள் முதலீடு செய்தால், 9 சதவிகிதம் வட்டி என்ற அடிப்படையில், வருடத்திற்கு உங்கள் வருமானம் ரூ.1.35 லட்சமாகும். உங்கள் மொத்த ஆண்டு வருமானமே ரூ.1.35 லட்சம் என்கிறபட்சத்தில் நீங்கள் வருமான வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை. ஆகவே, நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டிலேயே முதலீடு செய்துகொள்ளலாம். மூலத்தில் வரிப் பிடித்தம் செய்யாமல் இருக்க உங்கள் வயதைப் பொறுத்து 15ஜி

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு...

அல்லது 15ஹெச் படிவத்தில் கையப்பமிட்டு கொடுத்துவிடலாம்.

தற்போது உங்கள் வயது 60. இன்றைய தேதி யில் நீங்கள் சேர்த்துவைத்துள்ள கார்ப்பஸ் ரூ.1.50 கோடி என்று வைத்துக்கொள்வோம். அதிலிருந்து உங்களுக்கு பென்ஷன் வரவேண்டும். இந்த ஒரு கோடியை முதலீடு செய்தால் ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து உங்களுக்கு வருடத்திற்கு ரூ.13.5 லட்சம், (9 சதவிகித வட்டி என்ற பட்சத்தில்) கிடைக்கும். இப்போது உங்கள் வருமானம் 10 லட்சத்திற்கும்மேல் என்பதால் நீங்கள் உச்ச வருமான வரி வரம்பாகிய

30 சதவிகிதத்தில் வருகிறீர்கள். ஆகவே, நீங்கள் மொத்த கார்ப்பஸையும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யாமல் வருமான வரி குறைத்து செலுத்தக்கூடிய அல்லது முற்றிலும் வரியே இல்லாத பிற உபகரணங்களை நாடுவது அவசியம். அவை, மியூச்சுவல் ஃபண்டில் உள்ள எஃப்.எம்.பி. திட்டங்கள்/ சிறு ரிஸ்க்குடன் கூடிய எம்.ஐ.பி. திட்டங்கள்/ கார்ப்பரேட் பாண்டில் முதலீடு செய்யும் திட்டங்கள் ஆகும்.

இவை தவிர, டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்/ டீப் டிஸ்கவுன்ட் பாண்டுகள் போன்றவற்றிலும் முதலீடு செய்யலாம். அதேபோல், மியூச்சுவல் ஃபண்டுகளில் டிவிடெண்ட் ஆப்ஷனில் அல்லது எஸ்.டபிள்யூ.பி. என்று சொல்லக்கூடிய சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் மூலம் ரெகுலர் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளலாம். வருடாந்திர தேவைக்கு மேல் உள்ள பணத்தை ரிஸ்க் எடுத்து பேலன்ஸ்டு மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களிலும் எஸ்.ஐ.பி. வாயிலாக முதலீடு செய்யலாம்.

இனி வெவ்வேறு வயதுகளில் உள்ளவர்கள் மாதம் ரூ.5,000 மேலே உள்ள அட்டவணையில் கண்டவாறு முதலீடு செய்தால், அவர்களின் ஓய்வுக்காலத்தில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். கடன் சார்ந்த திட்டங்கள் 8.5% வளரும் எனவும், பங்கு சார்ந்த திட்டங்கள் 12% வளரும் எனவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வுக்காலத்தில் கார்ப்பஸ் முழுவதையும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும்போது 8 சதவிகித வருமானம் கிடைக்கும் என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.