Published:Updated:

கம்பெனி சீர்திருத்த மசோதா...

புதிய பிஸினஸ் மேன்கள் உருவாவார்கள் ! வா.கார்த்திகேயன்.

##~##

ங்கிச் சீர்திருத்த மசோதா, அந்நிய முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல சீர்திருத்தங்களைத் தொடர்ந்து கம்பெனி  திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து வெற்றி கண்டிருக்கிறது மத்திய அரசாங்கம். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையிலும் இந்த மசோதாவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. பல தரப்பினரிடமிருந்தும் இந்த மசோதா பலமான வரவேற்பைப் பெற்றிருப்பது ஆச்சர்யமான விஷயம். அப்படி இந்த மசோதாவில் என்ன இருக்கிறது?

கம்பெனி சீர்திருத்த மசோதா...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுவரை, ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கவேண்டும் என்றால் அந்த கம்பெனியின் போர்டு உறுப்பினர் குழுவில் இரண்டுபேர் இருக்கவேண்டும். இரண்டுபேர் இருக்கவேண்டும் என்பதற்காக கணவன் ஆரம்பிக்கும் நிறுவனத்தில் மனைவியும் (தொழில் ரீதியான எந்த சம்பந்தமுமே இல்லை என்றாலும்) இயக்குநராக இருப்பார். இனி அந்தக் கட்டாயமில்லை. ஒரே ஒரு நபர் மட்டுமே ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க முடியும் என்று விதிமுறை திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விதி குறித்து ஸ்ரீதரன் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீதரனிடம் பேசினோம்.

''இதுவரை தனிநபர் ஒருவர் ஒரு கம்பெனியை ஆரம்பிக்க முடியாது. 'புரப்பரைட்டர்ஷிப்’ மூலமாகவே நிறுவனத்தைத் தொடங்க முடியும். அப்படி செய்யும்போது ஏதாவது இழப்பு ஏற்பட்டால், தனது சொத்தினைக்கூட விற்று கடன் தந்தவர் களுக்குத் திரும்பத் தரவேண்டியிருக்கும். ஆனால், கம்பெனியாக இருந்தால் முதலீட்டுத் தொகைக்கு மட்டுமே ரிஸ்க்.

உதாரணத்துக்கு, 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் கம்பெனியை ஆரம்பித்தால் அதன் உரிமை யாளருக்கு 10 லட்சம் ரூபாய் மட்டும் ரிஸ்க். ஆனால், கம்பெனியாக இல்லாமல் இருந்து,  ஒரு கோடி ரூபாய்க்கு  இழப்பு ஏற்பட்டாலும் அந்தத் தொகைக்கு  பதில் சொல்லத் தான் வேண்டும்.  

ஒரே ஒரு நபர் கம்பெனி ஆரம்பிக் கலாம் என்கிறபட்சத்தில் இன்னும் நிறைய தொழில்முனைவோர்கள் வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் நம் நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகும்'' என்றார் அவர்.

கம்பெனி சீர்திருத்த மசோதா...

இதுதவிர, போர்டு மீட்டிங்குகளை வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் நடத்துவது, இ-வோட்டிங்,  பங்குதாரர்களுக்கு அதிக உரிமைகளைத் தருவது, ஒரு நிறுவனத்தை மூடும்போது அதன் ஊழியர்களுக்கு இரண்டு வருட சம்பளத்தைத் தருவது, கார்ப்பரேட் நிறுவனங்களில் முறைகேடுகளைத் தடுக்க சீரியஸ் ஃபிராடு இன்வெஸ்டிகேஷன் ஆபீஸுக்கு அதிக அதிகாரம் தருவது உள்ளிட்ட பல திருத்தங் களும் இந்த மசோதாவில்  கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து  நம்மூரில் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாகிறார்களா என்று பார்ப்போம்!

சி.எஸ்.ஆர். 2%

கம்பெனி சீர்திருத்த மசோதா...

இந்த மசோதாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 2 சதவிகிதத்தை (மூன்று வருட சராசரி லாபம்) இந்தச் சமூகத்துகாக (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி) செலவு செய்யச் சொல்லி இருக்கிறது. இது அனைத்து நிறுவனங்களுக்கும் அல்ல. அதாவது, 500 கோடி ரூபாய் நெட்வொர்த் (அ) 1,000 கோடி ரூபாய் விற்பனை அல்லது 5 கோடி ரூபாய் நிகர லாபம் இருக்கும் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர்.-க்கு

2 சதவிகிதம் செலவு செய்யவேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

இந்தப் புதிய விதி காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் சி.எஸ்.ஆர்.-க்கு செலவு செய்யவேண்டி இருக்கும் என்று ஒரு கணக்கு சொல்கிறது. இந்தத் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை முன்னணி நிறுவனங்களே செய்கிறது. குறிப்பாக பதினைந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மட்டும் தலா சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஃபவுண்டேஷனின் தலைவர் சஞ்சீவியுடன் பேசினோம்.

''அமெரிக்க ஜி.டி.பி.யில் சுமார் 8 சதவிகித தொகை அன்பளிப்பாக (ஞிஷீஸீணீtமீ) இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இது சுமார் 0.3 முதல் 0.5 சதவிகிதமாகவே இருக்கிறது. முன்பு உணவு, உடை, இருப்பிடம்தான் அடிப்படைத் தேவையாக இருந்தது. இப்போது மின்சாரம், தண்ணீர், சாலை வசதி போன்றவை அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது. இந்த விஷயங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கவனம் செலுத்தலாம். மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்திலும் இந்நிறுவனங்கள் கவனம் செலுத்தலாம்'' என்றார் அவர்.