Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

வர்த்தகம்

##~##

மிளகு ஏலம் விடும் சந்தைகளுக்கு வரத்து குறைந்ததை அடுத்து சென்ற வாரத்தில் அதன் விலை அதிகரித்து வர்த்தகமானது. கேரளாவில் என்.சி.டி.இ.எக்ஸ். எக்ஸ்சேஞ்சின் கையிருப்பில் இருந்த மிளகின் தரம் குறித்து எழுந்த சர்ச்சை காரணமாக விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையம் தீவிரமாக விசாரித்து வருகிறது. இதன் காரணமாக என்.சி.டி.இ.எக்ஸ்., என்.எம்.சி.இ., கொச்சியில் இருக்கும் இந்திய மிளகு மற்றும் வாசனைத் திரவிய பொருட்களின் அமைப்பு ஆகியவற்றில் புதிய மிளகு கான்ட்ராக்டை தற்போது நிறுத்தி வைக்குமாறு ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் ரமேஷ் அபிஷேக் கூறியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அக்ரி கமாடிட்டி!

வார ஆரம்பத்தில் 18 டன்னாக இருந்த மிளகு வரத்து, வார இறுதியில் 12 டன்னாக குறைந்து போனது. இந்தப் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே, மிளகில் டிரேட் செய்ய விரும்பும் டிரேடர்கள் மற்றும் வர்த்தகர்கள் கொஞ்சம் கவனமாகச் செயல்படுவது நல்லது.

ர்த்தகர்கள் குறைந்தளவே மஞ்சளை வாங்கியதால் சென்ற வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. மஞ்சளை ஏலம் விடும் முக்கிய சந்தைகளில் வரத்து அதிகமாக வந்ததும் விலை குறைவிற்குக் காரணமாகும். இது இந்த வாரத்து நிலைமைதான். வரும் வாரத்தில் மஞ்சள் விலை உயர்வதற்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் டிரேடர்கள்.

அக்ரி கமாடிட்டி!

இந்த ஆண்டு குறைந்த அளவே மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளதை முக்கியமான காரணமாக எடுத்துச் சொல்கிறார்கள். சென்ற வாரத்தில் ஈரோடு சந்தைக்கு 5,700 பைகளும் நிஜாமாபாத் சந்தைக்கு 1,200 பைகளும் (ஒரு பை என்பது 70 கிலோ) வந்தன. நூறு கிலோ விரலி மஞ்சள் 5,600-6,500 ரூபாய் என்ற விலையில் சென்ற வாரத்தில் வர்த்தகமானது.

குஜராத்தில் ஜீரகம் அதிகளவில் பயிரிடப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதால் அதன் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. குஜராத்தில் ஜீரகம் பயிரிடும் வேலை கிட்டத்தட்ட 90 சதவிகிதம்  நிறைவடைந்துவிட்டது. ஏற்றுமதி தேவையும் அதிகரிக்காததால் விலை குறைந்தே காணப்படுகிறது. மேலும் ராஜஸ்தானில் பயிர் செய்யப்படும் அளவு குறையலாம் என்பதால் விலையிறக்கம் சற்று தடுக்கப்படலாம்.

அக்ரி கமாடிட்டி!

அந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமாகவே இந்த ஆண்டில் ஜீரகம் பயிரிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது சென்ற ஆண்டைவிட குறைவான ஹெக்டேர் பரப்பளவு என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் புதிய வரத்து சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டிமாண்ட் குறைந்த அளவே இருப்பதால் வரும் வாரத்தில் ஜீரகத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி!

ந்தியாவின் பல மாநிலங்களில் பான் மசாலாவிற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதால் ஏலக்காய்க்கான தேவை குறைந்துள்ளது. இதனால் சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்தே வர்த்தகமானது. குட்கா மற்றும் பான் மசாலாக்களில் ஏலக்காய் முக்கிய வாசனைப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. ஒடிஷாவை அடுத்து ஆந்திர மாநிலத்திலும் புகையிலைப் பொருட்களுக்கு உடனடியாகத் தடை வருமென தகவல்கள் வெளியானது ஏலக்காய் வர்த்தகத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது. குமுளி சந்தையில் சென்ற வாரத்தில் 49 டன் ஏலக்காய் வரத்து வந்தது. சென்ற வாரத்தில் ஒரு கிலோ ஏலக்காய் விலை சராசரியாக 766 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 1,101 ரூபாயாகவும் வர்த்தகமானது. ஆந்திராவிலும் பான் மசாலாவிற்கு தடை வரும்பட்சத்தில் ஏலக்காய் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி!

வெளிநாட்டு சந்தைகளில் டிமாண்ட் குறைந்ததும், மிளகாய் வரத்து அதிகரித்ததும் சென்ற வாரத்தில் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமானது. சென்ற வாரத்தில் குண்டூர் சந்தைக்கு 50,000 பைகள் (ஒரு பை என்பது 45 கிலோ) வரத்து வந்தன. நூறு கிலோ மிளகாய் 5,700 ரூபாய்க்கு வர்த்தகமானது. புதிய மிளகாய் வரத்து 10,000 பைகளாகவும், குளிர்பதனக் கிடங்குகளிலிருந்து 40,000 பைகளும் வரத்தாக இருந்தன. இந்த ஆண்டில் மிளகாய் உற்பத்தி மூன்று லட்சம் பைகளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே கடந்தாண்டில் 2.80 லட்சம் பைகளாக இருந்தது. வர்த்தகர்களிடம் டிமாண்ட் குறைந்துள்ளதாலும், புதிய மிளகாய் வரத்து அதிகரித்து வருவதாலும் வரும் வாரத்தில் அதன் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

- பானுமதி அருணாசலம்.

அக்ரி கமாடிட்டி!